மோகனா அம்மா அவர்களின் கவனத்திற்கு,
---------------------------------------------------------------------
1) என் பெயர் இளங்கோ.
பிச்சாண்டி என்பது என் தந்தையாரின் பெயர்.
என் தந்தையாரின் பெயரை பூச்சாண்டி என்று,
உங்கள் விருப்பத்துக்கு இணங்க மாற்ற முடியாது.
ஏனெனில் கடந்த ஆண்டு என் தந்தையார் இறந்து விட்டார்.
**
2) நியூட்டன் அறிவியல் மன்றமா அல்லது அறிவு கெட்ட
மன்றமா என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியாது.
கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் உள்ள
ஆசிரியர்களும் மாணவர்களும் எங்கள் மன்றத்தின்
அறிவியல் பங்களிப்பை அங்கீகரிக்கும்போது,
காழ்ப்புணர்ச்சியோடு வெறியைக் கக்கும் உங்களை
எண்ணி பரிதாபப் படுகிறோம்.
**
3) கலாம் ஒரு மார்க்சியர் அல்லர். அவர் அவ்வாறு கூறிக்
கொண்டதே இல்லை. அவரை ஒரு மார்க்சியர் என்று
யாரும் கூறியதும் இல்லை.கூறப் போவதும் இல்லை.
எனவே உங்களின் வீணான கற்பனைக்கு வேலையே
இல்லை.
**
4) அடுத்து, எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும் என்ற
உங்களின் ஆருடத்துக்கு நன்றி.
**
5) குட்டி முதலாளித்துவம் என்ற வர்க்க வகைமைப்பாடு
காரல் மார்க்சால் கூறப்பட்டது, 150 ஆண்டுகளுக்கு முன்பே.
அது பயன்படுத்தக் கூடாத சொல் என்று தடை போடும்
உரிமை உங்களுக்கு இல்லை..
**
6) எனது மார்க்சிய அருகதை கடந்த முப்பது ஆண்டுகளுக்கும்
மேலாக நடைமுறை சார்ந்தது, பிரதானமாக தொழிற்சங்க
நடைமுறை. தொழிலாளி வர்க்கம் அதை அங்கீகரிக்கிறது.
உங்களைப் போன்ற குட்டி முதலாளித்துவ நபர்களுக்கு
எது மார்க்சியம் என்று கூறும் அருகதை கிடையாது.
**
7) வின் டி.வி.யில் நான் பேட்டி கொடுப்பதில் உங்களுக்கு
என்ன நஷ்டம்? யாரும் பார்க்காத நேரத்தில் அல்ல.
இரவு 7 to 8 நேரத்தில். இன்று 8 மணிக்குக் கூட என்
நிகழ்ச்சி மறு ஒளிபரப்பாகிறது. வின் டி.வி தலைமறைவு
டி.வி. அல்ல.
8) குட்டி முதலாளித்துவக் கருத்து என்றால் என்ன என்று
எவரேனும் கேள்வி கேட்டால், உங்களின் இந்தப்
பின்னூட்டத்தை அதற்கு அப்படியே உதாரணம் காட்டலாம்.
அந்த அளவுக்கு COPY BOOK STYLEஇல் அது உள்ளது.
**
9) வக்கிரமும் வெறி உணர்வும் கொப்பளிக்கும் உங்களின்
பின்னூட்டத்தால் எனக்கு எந்தக் கோபமும் இல்லை.
மாறாக, இது உங்களை நன்றாகவே எல்லோரிடமும்
அம்பலப் படுத்தி விடுகிறது. சட்டியில் இருப்பதுதானே
அகப்பையில் வரும்!
**
10) இறுதியாக, எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி
உள்ளீர்கள். இந்த 63 வயசுக் கிழவனுக்கெல்லாம்
எதற்கம்மா பிறந்த நாள் வாழ்த்து? நான் பிறந்த நாள்
கொண்டாடுவதெல்லாம் இல்லை. நான் படித்த காலத்தில்
(1960-1975) எங்கள் தலைமுறையில் பிறந்தநாள் என்று
எதுவுமே கிடையாது. இருந்தாலும், இந்த 63ஆவது
வயதில் எனக்கு ஹார்ட் அட்டாக் வர வேண்டும் என்று
பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய உங்களுக்கு நன்றி.
---------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக