செவ்வாய், 28 ஜூலை, 2015

அப்துல் கலாமும் அணு உலைகளும்
மார்க்சியத்தை எதிர்க்கும் 
குட்டி முதலாளித்துவக் குள்ளர்களும்!
---------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
----------------------------------------------------------------
1) டாக்டர் அப்துல் கலாம் அணு உலைகளை, அணு மின்சாரத்தை,
அணு குண்டுகளை ஆதரிப்பவர்; உருவாக்கியவரும் கூட.
2) மார்க்சிய லெனினியம் அணு உலைகளும் அணுகுண்டுகளும்  
மனித சமூகத்துக்குத் தேவை என்று கூறும் தத்துவம்.
**
3) ரஷ்யாவில் ஸ்டாலின் காலத்தில் நாடு முழுவதும் 
அணு உலைகள் அமைக்கப் பட்டன. அணுகுண்டுகள் 
தயாரிக்கப் பட்டன. பல்வேறு அணு வெடிப்புச் சோதனைகள்
(nuclear explosion tests)  நிகழ்த்தப் பட்டன. நாம் நன்கு அறிந்த,
விபத்துக்குள்ளான செர்நோபில் அணு உலை லெனின் 
பெயரைத் தாங்கி நின்ற அணு உலையாகும்.
**
4) சீனாவில் மாவோவின் காலத்தில் அணு வெடிப்புச் 
சோதனைகள் நிகழ்த்தப் பட்டன. அணு குண்டுகள் 
தயாரிக்கப் பட்டன. அணு உலைகள் மூலம் அணு 
மின்சாரம் தயாரிக்கப் பட்டது.
**
5) மார்க்சிய மூல ஆசான்களான ஸ்டாலின், மாவோ ஆகிய 
இருவரும் அணு உலைகளைத் தீவிரமாக ஆதரித்தவர்கள்.
எனவே, அணு உலை எதிர்ப்பு என்பது மார்க்சியம் அல்ல.
அது வெறும் குட்டி முதலாளித்துவக் கோட்பாடே.
**
6) தமிழ்நாட்டில், CPI-ML PEOPLES WAR BOLSHVIK கட்சி 
எனப்படும் மார்க்சிய-லெனினியக் கட்சி, மார்க்சிய 
வழியில் கறாராக நின்று அணு உலைகளை ஆதரிக்கிறது.
**
7) அணு உலை ஆதரவாளர் என்பதற்காக, டாக்டர் கலாம் 
அவர்களை, குட்டி முதலாளித்துவ லும்பன்கள் எதிர்க்கட்டும்.
ஆனால், மார்க்சியர்கள் மற்றும் மார்க்சிய அமைப்புகள் 
அவ்வாறு எதிர்க்க முடியாது.
**
8) அணு உலைகளை எதிர்ப்பவன் மார்க்சிஸ்டாக இருக்க 
முடியாது. அணு உலை எதிர்ப்பு என்பதற்கு மார்க்சியத்தில் 
இடம் கிடையாது.
**
9) கூடங்குளம் உதயகுமார் அவர்கள் அணு உலைகளை 
எதிர்ப்பதற்கு முழு உரிமையும் அருகதையும் உடையவர்.
ஏனெனில், அவர் அணு உலை எதிர்ப்பாளர் மட்டுமல்ல,
கம்யூனிச எதிர்ப்பாளரும் கூட. ஆனால், மார்க்சியத்தின் 
பேரில் கட்சி நடத்தும் எவருக்கும் அணு உலையை எதிர்க்க 
உரிமை கிடையாது. அணு உலையை எதிர்ப்பது 
மார்க்சியத்தையே எதிர்ப்பதற்குச் சமம்.
**
10) சோவியத் ரஷ்யாவின் அணு விஞ்ஞானிகளுக்கு நிகராகப் 
பாராட்டப்படத் தகுந்தவர் அப்துல் கலாம் அவர்கள். அவரது 
மறைவுக்கு மார்க்சிய சிந்தனைப் பயிலகம் அஞ்சலி 
செலுத்துகிறது.
*******************************************************************
      
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக