அணு ஆயுத நாடுகளின் முழுமையான பட்டியல்!
(மாணவர்கள் அல்லாத பிற வாசகர்களின் கவனத்திற்கு)
----------------------------------------------------------------------------------------
(அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள், வைத்து இருந்து பின்னர்
அழித்து விட்ட நாடுகள், அணு ஆயுத இருப்பை ஒப்புக்கொண்ட
மற்றும் ஒப்புக் கொள்ளாத நாடுகள் உள்ளிட்ட முழுமையான
பட்டியல் இது).
--------------------------------------------------------------------------------------------------------
1) அமெரிக்கா 2) ரஷ்யா 3) இங்கிலாந்து 4) பிரான்ஸ் 5) சீனா
6) இந்தியா 7) பாகிஸ்தான் 8) வட கொரியா 9) பெலாரஸ்
10) கஜகஸ்தான் 11) உக்ரேன் 12) தென் ஆப்பிரிக்கா 13) இஸ்ரேல்
14) பெல்ஜியம் 15) ஜெர்மனி 16) நெதர்லாந்து 17) இத்தாலி 18) துருக்கி
19) ஈரான் (தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகப்
பட்டியலில் உள்ளது).
**
பெலாரஸ், கஜகஸ்தான், உக்ரேன், தென் ஆப்பிரிக்கா ஆகிய நான்கு
நாடுகளும் தங்களிடம் இருந்த அணுஆயுதங்களை அழித்து விட்டன.
**
நேட்டோ நாடுகளான பெல்ஜியம், ஜெர்மனி, நெதர்லாந்து, இத்தாலி,
துருக்கி ஆகிய நாடுகள் தாங்கள் சொந்தமாக அணு ஆயுதங்கள்
தயாரிக்காவிட்டாலும் கூட, நேட்டோ ஒப்பந்தப்படி அணு ஆயுதப்
பகிர்வு உடன்படிக்கை செய்து கொண்டுள்ளன.
**
இஸ்ரேல் தங்களிடம் அணு ஆயுதம் இருப்பதாக ஒப்புக் கொண்டதே
இல்லை. அந்நாடு நடத்திய அணுவெடிப்புச் சோதனை பற்றியும்
உறுதி செய்யப்பட்ட எந்தத் தகவலும் இல்லை. இருப்பினும்
இஸ்ரேல் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக உலக நாடுகள்
சந்தேகிக்கின்றன; நம்புகின்றன.
**
ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சியில் இறங்கி இருப்பதாக
உலக நாடுகளிடம் சந்தேகம் உள்ளது. எனினும் தற்போது,
(2015இல்) ஈரானிடம் அணு ஆயுதம் எதுவும் இல்லை.
**
நம்முடைய பட்டியலில் குறிப்பிட்டுள்ள இந்த 19 நாடுகள்
தவிர்த்து, உலகின் பிற நாடுகள் அனைத்துக்கும்
அணு ஆயுதங்களுக்கும் எவ்வித ஸ்நானப் பிராப்தியும் இல்லை.
-------------நியூட்டன் அறிவியல் மன்றம்-----------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக