வெள்ளி, 24 ஜூலை, 2015

அன்புமணியின் சிறப்பு அதிகாரி வீட்டில்
சி.பி.ஐ நடத்திய ரெய்டு! சிக்கிய முக்கியமான தடயங்கள்!
கைது எப்போது?
--------------------------------------------------------------------------------------------
ஊழல் வழக்கில் சிக்கிக் கொண்டுள்ள அன்புமணி ராமதாஸ் 
மிகவும் திணறிப் போனார். அவரது அதிகாரியான டி.எஸ்.மூர்த்தியின் 
இல்லத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.
**
டி.எஸ்.மூர்த்தி என்பவர் அன்புமணி அமைச்சராக இருந்தபோது 
அவருக்கு சிறப்புப் பணி அதிகாரியாக (officer on special duty) இருந்தவர்.
இவரது வீடு சென்னை சேத்துப்பட்டில் உள்ளது. அன்புமணியின் 
ஊழல் குறித்த மிக முக்கியமான ஆவணங்கள் இவரது வீட்டில் 
பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக துப்புக் கிடைத்தது.
இதையொட்டி சி.பி.ஐ அதிகாரிகள் இவரது வீட்டைச் சோதனையிட 
ஏற்பாடு செய்தனர்.
**
இதை அறிந்த மூர்த்தி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்று 
விட்டார். அவர் இல்லாமல் அவரது வீட்டில் சோதனையிட 
முடியாது என்ற நிலையில் சி.பி.ஐ அதிகாரிகள் அவரது 
வீட்டைப் பூட்டி சீல் வைத்தனர். பின்னர் பெருமுயற்சி செய்து 
சி.பி.ஐ அதிகாரிகள் அவரைத் தேடிப்  பிடித்து அவரின்
வீட்டுக்கு அழைத்து வந்து, அவரின் முன்னிலையில் 
வீட்டைச் சோதனை இட்டனர்.காலையில் தொடங்கிய 
சோதனை இரவு வரை நீடித்தது. 
**
சோதனையின்போது, அன்புமணி ஊழல் புரிந்தார் என்பதை 
நிரூபிக்கும் மிக முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப் 
பட்டன. இந்த ஆவணங்கள் அனைத்தும் டில்லி சி.பி.ஐ 
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன.
**
இந்த ரெய்டு 21 பிப்ரவரி 2011 அன்று நடந்தது. இந்த ரெய்டில்
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் இல்லாமல் அன்புமணி மீது 
வழக்குத் தொடர்ந்து இருக்க முடியாது என்று சி.பி.ஐ 
அதிகாரிகள் தெரிவித்தனர்.
**
பெப்ரவரி 22, 2011 அன்று, இந்தச் செய்தி தேசிய ஊடகங்களில் 
பெரிதாக வெளியிடப் பட்டது. இந்து ஆங்கில ஏடு இச்செய்தியை 
national page இல் வெளியிட்டது.
**
தகவல் ஆதாரம்:  THE ECONOMIC TIMES Feb 22, 2011
********************************************************************** 
    
  
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக