புதன், 29 ஜூலை, 2015

சீனாவிடம் இருக்கிறது, ஆனால்
இந்தியாவிடம் இல்லை, அது என்ன?
மாவோவும் ஸ்டாலினும் மனிதகுல எதிரிகளா?
அணுகுண்டும் ஹைட்ரஜன் குண்டும் தேவையா?
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------
சீனாவிடம் ஹைட்ரஜன் குண்டு இருக்கிறது. ஆனால்,
இந்தியாவில் ஹைட்ரஜன் குண்டு இல்லை. உலகில்
அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள் எட்டு மட்டுமே.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா,
பாகிஸ்தான், வடகொரியா ஆகிய எட்டு நாடுகள் அணு
ஆயுதங்கள் உடையவை. இஸ்ரேலிடம் அணு ஆயுதம்
இருப்பதாகச்சந்தேகிக்கப் படுகிறது.
**
மேற்கூறிய எட்டு நாடுகளில், ஹைட்ரஜன் குண்டு
வைத்திருப்பவை ஐந்து நாடுகள் மட்டுமே. அவை:
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ்.
இந்தியாவிடம் ஹைட்ரஜன் குண்டு இல்லை.
பாகிஸ்தான், வடகொரியா நாடுகளிடமும் இல்லை.
**
ஹைட்ரஜன் குண்டு என்பது அறிவியல் ரீதியாகச் சரியான
பெயர் அல்ல. Thermo nuclear fusion bomb என்பதுதான் அதன்
அறிவியல் பெயர். இருப்பினும் அறிவியல் பெயரைத்
தவிர்ப்போம். ஹைட்ரஜன் குண்டு என்பது அணுகுண்டை
விடப் பன்மடங்கு சக்தி உடையது. ஹைட்ரஜன் குண்டு
ஒரு TWO IN ONE குண்டு. ஒவ்வொரு ஹைட்ரஜன்
குண்டுக்கு உள்ளும், ஒரு அணுகுண்டு, அதை வெடிக்கச்
செய்வதற்காக (to trigger) இருக்கும். எனவே, ஹைட்ரஜன்
குண்டில் அணுகுண்டு உள்ளடங்கி உள்ளது. Every Hydrogen
bomb has an atom bomb in it.
**
யுரேனியம் போன்ற மிகப்பெரிய அணுவைப் பிளந்து
அணுகுண்டு செய்யப்படுகிறது. எனவே அணுகுண்டு என்பது
ஒரு FISSION BOMB. (fission என்றால் பிளவு, பிளப்பது என்று
பொருள்). ஹைட்ரஜன் குண்டு என்பது இரண்டு லேசான
அணுக்களைச் சேர்ப்பதன் மூலம் செயப் படுகிறது.
எனவே, ஹைட்ரஜன் குண்டு என்பது ஒரு FUSION BOMB.
சூரியனில்  இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள்  சேர்வதன்
மூலம் ஒரு ஹீலியம் அணு உண்டாகிறது என்பது நாம்
அறிந்ததே. இது ஒரு FUSION REACTION ஆகும். இதுதான்
ஹைட்ரஜன் குண்டின் தத்துவம்.
**
நிற்க. சீனா 1967இல் ஹைட்ரஜன் அணுகுண்டை வெடித்துச்
சோதனை செய்தது. வடமேற்கு சீனாவில் உள்ள சிங்ஜியாங்
பிரதேசத்தில், லாப் நுர் (Lop Nur) சோதனை மையத்தில்
இச்சோதனை ஜூன் 17, 1967இல் வெற்றிகரமாக நிகழ்ந்தது.
இதைத் தொடர்ந்து, ஹைட்ரஜன் குண்டு வைத்திருக்கும்
நான்காவது நாடாக சீனா அறியப் பட்டது.
**
மாவோ 1976 செப்டம்பரில் மறைகிறார். அதற்கு பன்னிரண்டு
ஆண்டுகளுக்கு முன்பே சீனாவை அணு ஆயுத வல்லரசு
நாடாக உயர்த்தினார். அக்டோபர் 16, 1964இல் சீனா
முதல் அணுகுண்டை வெடித்தது. தொடர்ந்து 1967இல்
ஹைட்ரஜன் குண்டையும் தயாரித்து விட்டது. இதன் மூலம்
சீனா ஹைட்ரஜன் குண்டுகளையே  வைத்திருக்கும்
ஆற்றல் மிக்க அணுஆயுத வல்லரசாக மாவோவால்
உருவாக்கப் பட்டது.
**
கட்டணக் கழிப்பிடம் முதல் கருத்தரங்கம் வரை,
இந்தியாவின் குட்டி முதலாளித்துவ சிந்தனைக் குள்ளர்கள்
அணுஆயுதங்களை எதிர்த்து வீராவேசம் பொங்க நாக்கில்
நுரைதள்ளப் பேசுவது அன்றாட நிகழ்வாக இருக்கிறது.
அணுஆயுதங்கள் மனித குலத்துக்கே எதிரானவை என்று
கருத்து உதிர்க்கும் குட்டி முதலாளித்துவ சிந்தனைக்
குள்ளர்களைப் பார்த்து நாம் ஒரு கேள்வி கேட்கிறோம்.
**
மாவோவும் ஸ்டாலினும் போட்டி போட்டுக் கொண்டு
ஹைட்ரஜன் குண்டுகளாகத் தயாரித்துத் தள்ளினார்களே,
அவர்கள் எல்லாம் மனித குலத்தின் எதிரிகளா?
சொல்லுங்கள் குட்டி முதலாளித்துவ அன்பர்களே,
சொல்லுங்கள்.
**
அணு உலைகளையும் அணு குண்டுகளையும் மார்க்சியம்
ஏற்றுக் கொள்கிறது. மார்க்சிய மூல ஆசான்கள் மாவோவும்
ஸ்டாலினும் அணுமின்சாரத்தையும் அணுகுண்டையும்
ஏற்றுக் கொண்டு இருந்தார்கள். இது வரலாறு. எனினும்
இதற்கு எதிராக, குட்டி முதலாளித்துவ சிந்தனைக்
குள்ளர்கள் கருத்துக் கொண்டு இருக்கலாம். அதற்கு
அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அக்கருத்துக்கள்
மார்க்சியத்துக்கு எதிரானவை.
****************************************************************




   
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக