கதிரியக்க அபாயம் உள்ள புளூட்டோனியம்
கோடிக்கணக்கான இதய நோயாளிகளின்
உயிரைக் காப்பாற்றும் விந்தை புரிகிறது!
(அணு உலை எதிர்ப்பாளர்கள் கவனத்திற்கு)
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------
புளூட்டோனியம் என்ற பெயரைக் கேட்ட உடனே
அணு உலை எதிர்ப்பாளர்கள் தீயை மிதித்தது போல
அலறுவதைக் கண்டிருப்போம். அது புற்றுநோயை உண்டாக்கும்
என்று அஞ்சுவார்கள்.
**
மாரடைப்பு வந்த இதய நோயாளிகள் சிலரின் இதயத்தில்
பேஸ் மேக்கர் என்ற கருவி பொருத்தப் பட்டு, நோயாளிகளின்
இதயத் துடிப்பு சீராக இருப்பதை மருத்துவர்கள் உறுதி
செய்வார்கள். இந்த பேஸ் மேக்கர் கருவி பேட்டரியில்
வேலை செய்யும். பேட்டரியோடு கூடிய கருவி இதயத்தில்
பொருத்தப் பட்டிருக்கும்.
**
நம்முடைய செல் போனிலும் ஒரு பேட்டரி உள்ளது.
அதை அவ்வப்போது நாம் ரீசார்ஜ் செய்வோம். ஆனால்,
இதயத்தில் பொருத்தப்பட்டுள்ள பேஸ்மேக்கரின் பேட்டரியை
இப்படி ரீசார்ஜ் செய்ய இயலாது. எனவே நீடித்து
பல ஆண்டுகள் இயங்கக் கூடிய பேட்டரி மூலம்
பேஸ் மேக்கர் கருவி வேலை செய்ய வேண்டும்.
இதற்காக புளுட்டோனியம் பேட்டரி பேஸ் மேக்கரில்
வைக்கப் படும்.
**
புளுட்டோனியம்-238 என்னும் ஐசோடோப் பேஸ் மேக்கரின்
பேட்டரியை இயக்கும். புளுட்டோனியம் கதிரியக்கத் தனிமம்.
இது சிதைவு அடையும்போது ஏற்படும் அதிக வெப்பம்
மின்சாரத்தை உண்டாக்கும்.( Thermal Electricity). இதன் மூலம்
பேட்டரி தனக்குத் தேவையான மின்சாரத்தை பெறுகிறது.
புளுட்டோனியம் பேட்டரியை ஒருமுறை பொருத்தி விட்டால்,
25, 30 ஆண்டுகளுக்குக் கவலை இல்லை.
**
ஒரு ஐம்பது வயது நபருக்கு புளுட்டோனியத்தால் இயங்கும்
பேஸ் மேக்கரைப் பொருத்தி விட்டால், அனேகமாக அவரின்
மரணம் வரை, அதாவது 80 வயது வரை அது சிக்கலின்றி
இயங்கும். ஏனெனில், புளுட்டோனியம்-238இன் அரைஆயுள்
(half life) சற்றேறக்குறைய 88 ஆண்டுகள் ஆகும்.
**
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இதய நோயாளிகள்
புளுட்டோனியம் பேட்டரியால் இயங்கும் பேஸ் மேக்கரைப்
பொருத்திக் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
கண்மூடித்தனமான அணு ஆற்றல் எதிர்ப்பு என்பது எவ்வளவு
முட்டாள் தனமானது என்பதை ஒவ்வொரு நாளும்
நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
***************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக