ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

வருணம் சாதி ஆகியவற்றின் பிறப்பு, வளர்ச்சி,
வாழ்வு, நீடிப்பு, சரிவு, இறுதி ஆகிய எல்லாவற்றையும்
ஒரு சமூகவியல் ஆய்வின் மூலமே கண்டறிய
இயலும். இந்த ஆய்வில் கீதை என்ன சொல்கிறது
என்பதும் ஒரு கூறு; அவ்வளவே.
கீதையே அனைத்தும் அல்ல.

சமூகத்தின் உற்பத்திக் கருவிகள் கீதையின்
காலத்தில் எவ்வாறு இருந்தன? உற்பத்திமுறை
எவ்வாறு இருந்தது? உற்பத்தி உறவுகள் எப்படி
இருந்தன?  இந்தக் கேள்விகளுக்கு கீதை என்ன
விடை சொல்கிறது என்பது மட்டுமே ஆய்வு மதிப்பு
உடையது.

கீதையின் இலக்கியச் செறிவு, பாத்திரப் படைப்பு,
காவியக் கட்டமைப்பு ஆகியவற்றுக்குப் பெரிதாக
ஆய்வு மதிப்பு எதுவும் இல்லை.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக