உயிருடன் இருக்கும் விக்ரம்!
- -------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------
1) விக்ரம் லேண்டர் நிலவின் தரையில் விழுந்து கிடக்கிறது.
2) நாற்காலிக்கு நான்கு கால்கள் இருப்பது போல
விக்ரமுக்கும் நான்கு கால்கள் உண்டு.
3) ஒரு நாற்காலி தரையில் இருப்பது போல,
அந்த பொசிஷனில் விக்ரம் நிலவின் தரையில்
இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை.
4) அப்படியானால் தலைகீழாக, நான்கு கால்களும்
மேலே தூக்கிய நிலையில் விக்ரம் விழுது கிடக்கிறதா?
5) இல்லை. 180 டிகிரி கோண மாற்றத்துடன் விக்ரம்
விழுந்தால் மட்டுமே கால்கள் மேல்நோக்கிய நிலையில்
விழ முடியும். அப்படி விழவில்லை என்று
அனுமானிக்கலாம்.
6) Geometrically ஒரு டிரப்பீசியத்தின் வடிவில் விக்ரமின்
உடல் அமைந்துள்ளது. 90 டிகிரிக்குக் குறைவான
ஒரு குறுங்கோணத்தை அது நிலவின் தரையுடன்
ஏற்படுத்திய நிலையில் விழுந்து கிடக்கக் கூடும்.
7) இஸ்ரோ கூறுவதன்படி, விக்ரம் எந்த நொறுங்கலும்
இல்லாமல், உடையாமல், முழுசாக இருக்கிறது
என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
8) இந்த நிலையில் விக்ரம் தொடர்ந்து இயங்கத்
(either partially or wholly) தேவையான மின்சக்தி கிடைக்க
வாய்ப்பு உள்ளது. விக்ரமில் inbuilt battery உள்ளது.
மேலும் அதில் உள்ள சூரியத் தகடுகள் சூரிய ஒளியைப்
பெற வாய்ப்பு உள்ளது. எனவே விக்ரம் இயங்கும்.
9) விக்ரம் பிறழ்ந்த நிலையில் இருப்பதால், அதில்
இருந்து ரோவர் வெளிவருவது தடங்கலுக்கு
உள்ளாக வாய்ப்பு உண்டு.
10) இப்படி விக்ரம் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும்
அதிலிருந்து சமிக்ஞைகள் வராவிட்டால், நமக்கு
எந்தப் பயனும் இல்லை. விக்ரமின் ஆயுள்காலம்
பூமிக் கணக்குப்படி 14 நாள்தான். அதன் பிறகு
நிலவில் இருளும் குளிரும் வரத் தொடங்கும்.
சூரியத் தகடுகள் வேலை செய்யாது.விக்ரமின்
ஆயுள் முடிந்து விடும்.
11) எனவே 14 நாளுக்குள் தகவல் தொடர்பைக்
சீரமைக்க முடிந்தால் நல்லது. இல்லையேல்
லேண்டர் மற்றும் ரோவரால் பயன் இல்லாமல்
போகும்.
12) எனினும் இதனால் பெரிய இழப்பு எதுவும்
இருக்கப் போவதில்லை. ஆர்பிட்டரை ஓராண்டை
விட அதிக காலம் செயல்பட வைப்பதன் மூலம்
இந்த இழப்பை ஈடு கட்டலாம்.
13) ஒட்டு மொத்தத்தில் சந்திரயானின் நோக்கம்
90 சதத்திற்கு மேல் வெற்றியே!
*************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக