செவ்வாய், 3 செப்டம்பர், 2019

ஏபெல் பரிசு வென்ற முதல் பெண்மணி!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
நோபல் பரிசு என்றால் தெரியும்! அது என்ன ஏபெல் பரிசு?
1) நோபல் பரிசு மொத்தம் 6 துறைகளில் வழங்கப் படுகிறது.
ஏபெல் பரிசு கணிதத்திற்கு மட்டும் வழங்கப் படுகிறது.

2) நோபல் பரிசை சுவீடன் நாடு வழங்குகிறது.
ஏபெல் பரிசை நார்வே நாடு வழங்குகிறது.

(வீட்டில் அட்லஸ் (atlas) இருக்கிறதா? இருந்தால்
அதில்நார்வே சுவீடன் இரண்டும் அண்டை நாடுகள் என்று
அறிக. மேலும் அறிய வேண்டியவற்றை அறிக).

4) ஆல்பிரட் நோபல் என்ற விஞ்ஞானி தாம் சம்பாதித்த
பணத்தில் இருந்து நோபல் பரிசை உருவாக்கினார்.
அவரின் பெயரால் நோபல் பரிசு வழங்கப் படுகிறது.
(ஆல்பிரட் நோபல் எந்தத் துறையில் விஞ்ஞானி என்று
தெரியுமா? தெரியாது. சிம்பு நடித்துக் கொண்டிருக்கும்
படத்தில் கதாநாயகி யார் என்று தெரியுமா? தெரியும்).
ஆல்பிரட் நோபல் ஒரு Chemist. டைனமைட் என்னும்
வெடிமருந்தைக் கண்டு பிடித்தார்.

5) நார்வே நாட்டைச் சேர்ந்த நியல்ஸ் ஹென்ரிக் ஏபெல்
என்ற கணித நிபுணரின் பெயரில் ஏபெல் பரிசு
வழங்கப் படுகிறது.

நிற்க. ஏபெல் பரிசு என்ற ஒன்று இருக்கிறது என்ற
செய்தியை தமிழ்ச் சமூகத்திற்கு முதன் முதலில்
சொன்னது நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே.
வேறு யாரும் சொல்லவில்லை. ஏழட்டு ஆண்டுகளுக்கு
முன்பு சென்னை வானொலியில் ஏபெல் பரிசு பற்றி
ஐந்தரை நிமிட உரை ஆற்றினேன். பல கூட்டங்களில்
பேசினேன். கட்டுரைகளும் எழுதி உள்ளேன்.

ஏபெல் பரிசு இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்தான்
உருவாக்கப் பட்டது. முதல் ஏபெல் பரிசு 2003ல்தான்
வழங்கப் பட்டது.

இந்தியர் ஒருவர் ஏபெல் பரிசைப் பெற்றிருக்கிறார்
என்பதை அறிக. அவர் யார் என்று வாசகர்கள்
விடையளிக்க வேண்டும்.

2019ஆம் ஆண்டுக்கான ஏபெல் பரிசை ஒரு பெண்மணி
பெற்று இருக்கிறார். ஏபெல் பரிசைப் பெறும் முதல்
பெண்மணி இவரே ஆவார். கரென் உலென்பேக் (Karen Uhlenbeck)
என்னும் அமெரிக்கக் கணித நிபுணர்தான் ஏபெல் பரிசை
வென்ற முதல் பெண்மணி.

இவரின் பங்களிப்பு என்ன? Geometric partial differential equations
மற்றும் gauge theory ஆகியவற்றில் அளப்பரிய
பங்களிப்பைச் செய்தவர் இவர். இயற்பியல் மாணவர்கள்
இவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஏனெனில் இவர் gauge theory குறித்தும் mathematical physics
குறித்தும் பங்களித்தவர்.

Partial differential equations என்னும் சமன்பாடுகள் உலகின்
பொருள் உற்பத்தியில் பிரதான பங்கு வகிப்பவை. அவை
இல்லாமல் உற்பத்தி இல்லை. உற்பத்தி இல்லை
என்றால் என்ன பொருள்? தின்னச் சோறு கிடைக்காது
என்று பொருள்.

Partial Differentiation என்றால் என்ன? 12ஆம் வகுப்பு
கணித்ப் புத்தகத்தில் உள்ளது. படித்துத் தெரிந்து
கொள்ள இயலாது. கணித ஆசிரியரிடம் டியூஷன்
கற்கவும்.

a, b என்னும் இரண்டும் மாறக்கூடியவை என்று வைத்துக்
கொள்ளுங்கள். எனவே a, b இரண்டும் மாறிகள் (variables).
ஒரு physical cum mathematical investigationல், இந்த இரண்டில்
ஒன்று மட்டும் மாற்றம் அடைகிறது என்றும் மற்ரொன்று
மாற்றம் அடையவில்லை என்றும் வைத்துக் கொண்டால்,
இந்த இடத்தில் வழமையான differentiation செய்தால்
பயன் இராது. எனவே இரண்டு மாரிகளில் ஒன்றை
constant ஆக வைத்துக் கொண்டு மாறக்கூடிய மற்றதை
மட்டும் diferentiate செய்யப் பயன்படும் கணித முறையே
partial differentiation ஆகும்.     
  
 இந்த இடத்தில் abruptஆக இந்தக் கட்டுரையை
நிறுத்திக் கொள்கிறேன். இதற்கு மேலும் எழுத
நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால் இதற்கு மேல்
தமிழில் எழுத இயலாது.

தமிழில் அறிவியல் என்பது ஒரு நுனிப்புல் அளவு
மட்டுமே. அதற்கு மேல் தமிழில் எழுத இயலாது.
இதுதான் உண்மை! உற்பத்தி சார்ந்த விஷயத்தை
உற்பத்தியில்  இல்லாத ஒரு மொழியில் எவ்வாறு
எழுத இயலும்?
**************************************************
 றி   மாறாத
பின்குறிப்பு:
மோடி அவர்களே,
ராமானுஜன் பெயரில் ஏபெல் பரிசை விட உயர்ந்த
ஒரு பரிசை இந்தியா வழங்க வேண்டும்.
இதற்கு ஆவன  செய்யவும்.


படத்தில் இருப்பவர்கள் யார்? வாசகர்கள் புரிந்து
கொள்ள வேண்டும். ஒருவர் ஏபெல். மற்றவர் பரிசு வென்ற
பெண்மணி கரேன்.

அறிவியல் தேசமாக மாறினால்தான் இது சாத்தியம்
என்பது சரிதான் என்றே நினைக்கிறேன்.

Every sovereign  country is SANE என்று நாஷ் கோட்பாடு
அனுமானிக்கிறது. எனக்கு இரண்டு கண்ணும் போனாலும்
பரவாயில்லை; எதிரிக்கு ஒரு கண் போக வேண்டும் என்று
கருதுவது insane position. ஒரு தனி நபர் அப்படிக்
கருதலாம்; ஆனால் ஒரு நாடு அப்படிக் கருதாது
என்கிறது நாஷ் சமநிலை. ஏனெனில் நாடு என்பது
ஒரு collective entity.

இயற்கைப் பேரிடரால் அழியக் கூடிய ஒரு நாடு
தனது பகை நாட்டை அழித்து விடக்கூடும் என்பது
ஒரு wild imagination. மானுட இயல்புக்கே எதிரான
கற்பனை. உண்மையில் மாலத்தீவு என்னும் சின்னச் சிறிய
நாடு மட்டுமே இயற்கைக் காரணங்களால்
அழியக்கூடும் என்று கணிக்கப் படுகிறது.
அந்நாட்டை உய்விக்கும் ஏற்பாடுகளை இந்தியா
உட்பட உலக நாடுகள் செய்து வருகின்ற.

மேலும் உலகின் அந்த ஆயுத நாடுகள் எட்டே எட்டு மட்டுமே.
மற்ற நாடுகளில் அணுகுண்டுகள் இல்லை. இந்த
எட்டு நாடுகளும் இயற்கைப் பேரிடரால் அழியும் நிலை
இல்லை.

நாஷ் கோட்பாட்டை விட வெறெந்தக் கோட்பாடும்
உலக நிலமைக்குப் பொருந்தி வரவில்லை. Hence it is the
most acceptable theory till a better one comes.
      


            
 a, b என்பவை ஒன்றை மறறொன்று சாராமல்
சுயேச்சையாக மாறக்கூடியவை என்று வைத்துக்
கொள்ளுங்கள். அதாவது a, b என்பவை
independent variables ஆகும்.
 

ராஜ்தீப் சர்தேசாயுடனான இவரின் நேர்காணலில்
குறிப்பிடத் தக்கதாக ஒன்றுமே இல்லை. இவரை 
ஒரு தேவதூதராகக் கருதுவது பெரும் அறியாமை.
ஒரு குட்டி முதலாளிய வர்க்கப் பின்னணி உடைய,
குட்டி முதலாளிய குணாம்சங்கள் கொண்ட,
தாராளவாத பூர்ஷ்வா  (liberal bourgeois) சிந்தனைகளை
மூளையில் அடைத்துக் கொண்ட, இயல்பிலேயே
மக்கள் விரோதக் சிந்தனைகளிலும் நடைமுறையிலும்
பயிற்றுவிக்கப்பட்ட இந்த அதிகார வர்க்கத்தின்
பிரதிநிதியிடம் போற்றுதலுக்கோ பின்பற்றுவதற்கோ
ஒன்றும் இல்லை.

ஷரத்து 370ஐ ரத்து செய்தது தவறு என்று சொல்லக் கூட
இவர் தயாராக இல்லை. I dissent என்று சொல்லக்கூட
இவர் தயாராக இல்லை. A SPACE FOR DISSENT வேண்டும்
என்று மிக மிக மென்மையாகப் பேசுவதுடன் இவர்
நிறுத்திக் கொள்கிறார்.

சுருங்கக் கூறின், இவர் ஒரு பின்நவீனத்துவப்
பித்துக்குளி (A post modernistic lunatic). இவரை ஹீரோவாகக்
கருதுவது பரிதாபத்துக்கு உரியது.
  
    


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக