கெப்ளரும் நியூட்டனும் காரல் மார்க்சும்!
போலிப் பொருள்முதல்வாதிகளின் கயமையும்!
லெனின் தப்பாகச் சொல்லி விட்டாரா?
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
இயற்பியலில் நியூட்டனின் இயக்க விதிகள் பிரசித்தி பெற்றவை.
Newton's laws of motion என்பதாக இவை அறியப்படும். இந்தியாவில்
ஒன்பதாம் வகுப்பிலேயே இவை மாணவர்களுக்குக் கற்பிக்கப்
படுகின்றன.
நியூட்டனின் மூன்று இயக்க விதிகளைப் போன்றே
கெப்ளரின் மூன்று இயக்க விதிகளும் மிகவும்
முக்கியமானவை. இவை Kepler's laws of planetary motion என
அழைக்கப் படும். இவை 11ஆம் வகுப்பில் கற்பிக்கப்
படுகின்றன.
நியூட்டனின் விதிகள் mechanical motion பற்றியவை.
கெப்ளரின் விதிகள் planetary motion பற்றியவை.
கெப்ளர் மூத்தவர்; நியூட்டன் காலத்தால் பிந்தியவர்.
இன்றும் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும்போது
நியூட்டனின் விதிகளும் கெப்ளரின் விதிகளும்
பயன்படுகின்றன. எனது முந்திய பதிவில் கெப்ளரின்
விதியை ஒட்டி ஒரு கணக்கைச் செய்யுமாறு கேட்டுள்ளேன்.
அதைப் படித்து அந்தக் கணக்கைச் செய்யுங்கள்.
இந்த இடத்தில் மார்க்சிய மூல ஆசான் லெனின் கூறும்
ஒரு விஷயத்தைக் கருத வேண்டும்.
"மனிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள்
அனைத்தையும் பற்றிய அறிவைப் பெற்று உங்கள்
சிந்தனையை நீங்கள் வளமாக்கிக் கொள்ளும் போது
மட்டுமே உங்களால் கம்யூனிஸ்ட் ஆக முடியும்".
என்கிறார் லெனின்.
நியூட்டனின் விதிகளும் கெப்ளரின் விதிகளும் (இன்ன
பிறவும்) லெனின் கூறியபடி மனித குலம் படைத்தளித்த
கருவூலங்கள். எனவே இவற்றைப் பற்றிய அறிவைப்
பெற வேண்டும். அப்படிப் பெற்றால்தான் ஒருவன்
கம்யூனிஸ்ட் ஆக முடியும் என்கிறார் லெனின்.
எனவே நியூட்டனின் விதிகளையும் கெப்ளரின்
விதிகளையும் படியுங்கள். இவை இயற்பியல் பாடத்திட்டத்தில்
உள்ளவை மட்டுமல்ல மார்க்சியப் பாடத் திட்டத்திலும்
உள்ளவை. இவற்றைப் படிக்காதவன், படித்துப் புரிந்து
கொள்ள முயற்சி செய்யாதவன் கம்யூனிஸ்ட் அல்ல.
எனக்கு கெப்ளர் என்பவர் யார் என்றே தெரியாது; எனக்கு
சுட்டுக் போட்டாலும் கணக்கு வராது; நான் ஏன்
கெப்ளரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்
என்பவன் போலிக் கம்யூனிஸ்ட்க் கயவன் ஆவான்.
இவனால் பாட்டாளி வர்க்கத்துக்குப் பயன் எதுவும் கிடையாது.
கம்யூனிஸ்ட் ஆவதற்கு கெப்ளரை ஏன் படிக்க வேண்டும்
என்று கேட்பவர்களே, அப்படியானால் லெனின் தப்பாகச்
சொல்லி விட்டார் என்று சொல்கிறீர்களா? தைரியம் இருந்தால்
அதை வெளிப்படையாகச் சொல்லுங்கள் மூடர்களே!
அரசுப் பள்ளி மாணவர்கள் செயற்கைக் கோள்களைத்
தயாரிக்கும் காலம் இது. அவனவன் காத்தாடி விடுவது போல,
செயற்கைக் கோல்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறான்.
இந்தக் காலக் கட்டத்தில் நான் ஏன் கெப்ளரைப் படிக்க
வேண்டும் என்று சொல்பவன் கம்யூனிஸ்ட் அல்ல.
*******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக