குரங்குகள் எத்தனை?
---------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------
ஒரு குரங்குக் கூட்டத்தில் உள்ள குரங்குகளின்
அரைக்கால் பாகத்தின் வர்க்கம் ஒரு பழத்
தோட்டத்திற்குள் நுழைந்தன. மீதமுள்ள 12 குரங்குகள்
அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று விட்டன.
அப்படியானால் அக்கூட்டத்தில் உள்ள மொத்தக்
குரங்குகள் எத்தனை?
லீலாவதி நூலில் இருந்து எடுக்கப்பட்ட கணக்கு!
------------------------------------------------------------------------
பாஸ்கரர் (Bhaskara II) என்னும் இந்தியக் கணித மேதை
12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். உஜ்ஜயினியில் இருந்த
வானியல் மையத்தின் தலைவராக இருந்தார். இவர்
எழுதிய சிறந்த கணித நூல்களில் மிகவும் புகழ் பெற்றது
லீலாவதி என்னும் கணித நூல். அல்ஜிப்ராவில் உள்ள
எளிய கணக்குக்களைக் கொண்ட நூல் இது.
மேற்கண்ட குரங்குக் கணக்கு லீலாவதி நூலில் இருந்து
எடுக்கப் பட்டது.
இக்கணக்கு அல்ஜீப்ராவில் உள்ள இருபடிச் சமன்பாடு
(Quadratic equation) என்ற பிரிவில் வரும் கணக்கு.
மேலை உலகம் quadratic equation பற்றி எப்போது
அறிந்து கொண்டது? யாரிடம் இருந்து அறிந்து
கொண்டது? பாஸ்கரரிடம் இருந்துதான்.
பண்டைய கிரேக்கத்தில் வடிவியல் புகழ் பெற்று
இருந்தது. ஆனால் அல்ஜீப்ராவில் கிரேக்கர்களின்
பங்களிப்பு எதுவும் இல்லை. லீலாவதி நூல் இந்த
உண்மையை உணர்த்தும்.
படத்தில்: சமஸ்கிருதத்தில் பாஸ்கரர் எழுதிய நூல்
இன்றும் உள்ளது. படத்தில் உள்ளது அமெரிக்கப்
பல்கலைக்கழகம் பாதுகாத்து வைத்துள்ள ஒரிஜினல்
textன் புகைப்படப் பிரதி.
விடைகள் வரவேற்கப் படுகின்றன.
*************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக