போலிக் கம்யூனிஸ்ட் பிழைப்புவாதம்!
உதயநிதியிடம் விலைபோன தா பாண்டியன்!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
நல்ல விலை கொண்டு நாயை விற்போர்-அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
------------மகாகவி பாரதி-----------
வரலாறு இப்படியும் சில ஈனப் பிழைப்புவாதிகளைப்
படைத்து இருக்கிறது. தேர்தல் செலவுக்குப் பணம் என்ற
பெயரில், திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களிடம்
இருந்து ரூ 15 கோடியைப் பெற்று இருக்கிறது போலிக்
கம்யூனிஸ்ட் பிழைப்புவாதக் கும்பல்.
தா பாண்டியன், நல்லகண்ணு, முத்தரசன், சுப்புராயன்,
மகேந்திரன் என்று நீளும் இந்தப் பிழைப்புவாதக் கும்பல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை (CPI) விற்பனை செய்யும்
உரிமை படைத்த பவர் ஏஜெண்டுகள் ஆவர்.
நான் சீனிவாச ராவை நினைத்துப் பார்க்கிறேன்.
என் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர்
வருகிறது. தியாகத்தின் மகோன்னதத்தை உலகுக்கு
உணர்த்திய உயர்ந்த கம்யூனிஸ்டுகளில் அவர் ஒருவர்.
உலக வரலாற்றில் இப்படிப்பட்ட கம்யூனிஸ்டுகள்
வெகுசிலர்தான் காணப்படுகின்றனர்."கம்யூனிஸ்டுகள்
தனியொரு பொருளினால் வார்க்கப் பட்டவர்கள்"
என்று ஸ்டாலின் சொன்னது சீனிவாசராவ் போன்றோரை
மனதில் கொண்டுதான். இங்கு ஸ்டாலின் என்பது
மார்க்சிய மூல ஆசான் ஸ்டாலினைக் குறிக்கும்.
தேர்தல் செலவு என்ற சாக்கில் திமுக தலைவர் மு க
ஸ்டாலினிடம் எடுத்த எடுப்பிலேயே 50 கோடி
கேட்டுப் பேச்சு வார்த்தையைத் தொடங்கியது
தா பாண்டியன் முத்தரசன் வகையறா.இவர்களை எல்லாம்
டீல் செய்வதில் நோபல் பரிசு பெற்ற துரை முருகன்
"50 சின்னு நீங்க பேசினா, கதவு அங்க இருக்குன்னுதான்
நான் கைகாட்ட முடியும்" என்றார்.
சுதாரித்துக் கொண்டு சுய நினைவுக்கு வந்த தா பாண்டியன்
தமது புரட்சிகர ராஜதந்திரத்தைச் செயல்படுத்த
ஆரம்பித்தார்.
உலகப் பிச்சைக்காரர் சங்கத் தலைவரே தோற்றுப்
போகும் அளவுக்கு பிச்சையில் உச்சத்தைக் காட்டிய
தா பாண்டியன், பலவீனமான இதயம் கொண்ட
ஸ்டாலினைக் கண்கலங்க வைப்பதில் வெற்றி பெற்றார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது திமுக தரப்பில்
மொத்தம் மூன்று பேர் இருந்தனர். ஸ்டாலின், துரைமுருகன்
ஆகியோருடன் பாரிவேந்தர் பச்சமுத்துவும் இருந்தார்.
பேச்சினிடையே அடிக்கடி "நீங்கதான் கருணை
காட்டணும்" என்று தா பாண்டியன் முத்தரசன்
கும்பிடும் போதெல்லாம். மு க ஸ்டாலின் ஒரு
விஷயத்தை அவர்களுக்கு நினைவு படுத்திக்
கொண்டே இருந்தார்.
"நீங்க அவர்ட்ட பேசுங்க; அவர்தான் நீங்க கேக்குற
பணத்தைக் கொடுக்கப் போறவரு" என்று
பாரிவேந்தரைச் சுட்டிக்காட்டிக் கொண்டே
இருந்தனர் ஸ்டாலினும் துரைமுருகனும்.
இறுதியில் CPMக்கு கொடுத்த ரூ 10 கோடியை விட
அதிகமாக, ரூ 15 கோடி தொகையை இவர்களுக்குப்
பிச்சையிட பாரிவேந்தர் ஒப்புக் கொண்டார்.
பிச்சைப் படலம் முடிவுக்கு வந்தது. பகவதி பிட்சாந்தேஹி!
இந்த 15 கோடியை வாங்கி, நாகப்பட்டினத்தில்
உள்ள வறுமையில் வாடும் கூலி விவசாயிகளுக்கு
இவர்கள் கொடுத்தால், நவீன ராபின் ஹுட்கள்
என்று தா பா வகையறாவைப் பாராட்டலாம்.
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ரூ 15 கோடியை
முக்கியத் தலைவர்கள் பங்கு போட்டுக் கொண்டதுதான்
நடந்துள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் திமுக சமர்ப்பித்த பிரமாணப்
பத்திரத்தின் (affidavit) மூலம் இந்த உண்மை மக்களுக்குத்
தெரிய வந்தது. இல்லாவிட்டால், இந்தக் கயவர்கள்
திமுகவிடம் வாங்கிய பணத்தை முழுங்கியது
ஒருபோதும் மக்களுக்குத் தெரிய வராது.
1) ஸ்டாலினிடம் பணம் வாங்கியது தவறு.
2) பணத்தைத் தங்களுக்குள் பங்கு போட்டுக்
கொண்டது கயமை.
3) இவர்கள் போலிக் கம்யூனிஸ்டுகள் என்பது
ஆயிரத்து ஒன்றாவது முறையாக நிரூபிக்கப்
பட்டிருக்கிறது.
கண்டதைச் சொல்லுகிறேன்-உங்கள்
கதையைச் சொல்லுகிறேன்
அதைக் காணவும் கண்டு நாணவும்
உமக்குக் காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ?
----------ஜெயகாந்தன்---------
**********************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக