திங்கள், 16 செப்டம்பர், 2019


உற்பத்தியில் இல்லாத மொழி செத்துப் போகும்!
இந்த உண்மையை உணராதவர்களும்
செத்துப் போகலாம்!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
அண்மையில் ஆந்திர அரசு ஒரு உத்தரவைப்
பிறப்பித்தது. முதல் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு
வரை ஆந்திரப் பள்ளிகளில் பயிற்றுமொழியாக
ஆங்கிலமே இருக்கும் என்பதுதான் அந்த உத்தரவு.
தெலுங்கு மீடியம் காலப்போக்கில் அகற்றப்பட்டு
படிப்பு என்றாலே இங்கிலீஷ் மீடியம்தான் என்ற
நிலை ஆந்திராவில் ஏற்படப் போகிறது.

முதல் வகுப்பிலேயே இங்கிலீஷ் மீடியம் என்பது
மாபெரும் கொடுமை. ஆனாலும் தனியார் பள்ளிகளில்
அப்படித்தான் நடந்து கொண்டு வருகிறது. இப்போது
அரச பள்ளிகளிலும் அதே கொடுமை.

இந்த உத்தரவுக்கு ஆந்திராவில் எந்த வித எதிர்ப்பும்
இல்லை. காங்கிரஸ், பாஜக, தெலுங்கு தேசம் ஆகிய
எதிர்க்கட்சிகள் இதை எதிர்க்கவில்லை.

சிந்தித்துப் பார்க்க வேண்டிய இடம் எது. தெலுங்கு மொழி
நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு
மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எல்லா மாநில
மொழிகளும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளன.

என்ன நெருக்கடி? மாநில மொழி எதுவுமே சமூகத்தின்
பொருள் உற்பத்தியில் இல்லை. எந்த மொழியுமே
உற்பத்தி மொழியாக இல்லை.

அப்படியானால் உற்பத்தியில் எந்த மொழி இருக்கிறது?
இந்தியாவின் பொருள் உற்பத்தியில் ஆங்கிலம் மட்டுமே
இருக்கிறது. இந்தியாவின் உற்பத்தி மொழி ஆங்கிலம்
மட்டுமே.

உற்பத்தியில் இருந்துதான் மொழி பிறந்தது. உற்பத்தியில்
மனிதர்கள் கூட்டாக ஈடுபட்டபோதுதான் சொற்கள்
பிறந்தன. அதாவது சைகைகள், ஓசைகள் பின்னர்
சொற்களாக மாறின. இலக்கணம் உருவானது;
மொழி தோன்றியது.இதுதான் மொழியின் பிறப்பு
பற்றிய வரலாறு.

எனவே ஒரு மொழி உற்பத்தியில் இல்லை என்றால்,
அது செத்துக் கொண்டிருக்கிறது என்று பொருள்.
தமிழோ தெலுங்கோ அல்லது இந்தியோ உற்பத்தியில்
இல்லை. சமஸ்கிருதமும் உற்பத்தியில் இல்லை.
உற்பத்தியில் ஆங்கிலம் மட்டுமே இருக்கிறது.

இதைப் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன்.
தமிழ் தமிழ் என்று வெற்றுக் கூச்சலிடும் எந்த
முண்டத்துக்கும் புரியவில்லை.
ஏவவும் செய்கலான் தான்தேரான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.

உடல்நலம் சரியிலில்லை என்றால் டாக்டரிடம் போகிறோம்.
சில மருந்துகளை ஒரு சீட்டில் எழுதித் தருகிறார்
டாக்டர். அதுதான் prescription slip. அது ஆங்கிலத்தில்
இருக்கிறது. தமிழிலாடா இருக்கிறது முண்டமே?

அந்தச் சீட்டை எடுத்துக் கொண்டு மெடிக்கல் ஸ்டோருக்கு
ஓடுகிறோம். மருந்தை எடுத்துத் தருகிறார்கள்.
மருந்தின் பெயர், டோஸ், பிற தகவல்கள்  எல்லாம்
ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.

மருந்து உற்பத்தியில் உற்பத்தி மொழியாக எது
இருக்கிறது? தமிழா/ தெலுங்கா? இல்லை.
ஆங்கிலம்தான் இருக்கிறது. மருந்து உற்பத்திக்கான
படிப்பு B Pharm, M Pharm. இந்தப் படிப்பெல்லாம்
ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.

ஆனால் ஜெர்மனியில் எல்லாம் ஜெர்மன் மொழியில்
இருக்கிறது. பிரான்சில் எல்லாம் பிரெஞ்சு மொழியில்
இருக்கிறது. ஏன் தமிழ்நாட்டில் இதெல்லாம் தமிழில்
இல்லை? ஏனெனில் உற்பத்தியில் தமிழ் இல்லை.
உற்பத்தியின் மொழியாகத் தமிழ் இல்லை. 

எனவே தமிழ் மீடியத்தில் படித்து என்ன பயன்?
தெலுங்கு மீடியத்தில் படித்து என்ன பயன்?
அடுத்த கட்டப் படிப்பு எந்த மொழியில் இருக்கிறதோ
அந்த மொழியிலேயே இப்போதில் இருந்தே
படித்தால் நல்லது அல்லவா என்று  மக்கள்
கருதுகிறார்கள். இதனால்தான் ஜெகன் மோகன்
தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில மீடியத்தைக்
கொண்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் பல அரசுப் பள்ளிகளை மூடக்
காரணம் என்ன? இங்கிலீஷ் மீடியம் இல்லை
என்பதால்தான்.

தொடக்கப் பள்ளியிலேயே இங்கிலீஷ் மீடியம்
என்பது கொடுமையோ கொடுமை. ஆனால்
மொழியானது நெருக்கடியில் இருப்பதால்,
இத்தகைய கொடுமைகள் நேர்கின்றன.

உற்பத்தியில் இல்லாத மொழிகள் காலப்போக்கில்
வழக்கு வீழ்ந்து விடும். அதன் பின்னர் வெறும்
பண்பாட்டுத் தளத்தில் மட்டுமே அவை எஞ்சும்.

பண்பாட்டுத் தளத்தில் மட்டுமே எஞ்சும் என்றால்
என்ன பொருள்? பொண்டாட்டியைக் கொஞ்சவும்
குழந்திங்க்ளிடம் பேசவும் மட்டுமே பயன்படும்.
இதை நான் மட்டும் சொல்லவில்லை. யுனெசுகோ
ஆய்வும் சொல்கிறது. தேடி எடுத்துக் படியுங்கள்.
---------------------------------------------------------------------- 

சதுரங்கம் பற்றிய உரை!
--------------------------------------
தேசிய அளவில் தேர்வு பெற்ற சதுரங்க வீராங்கனை
திவ்ய பாரதியைப்  (XI std, வேலம்மாள் பள்ளி)
பாராட்டிப் பேசியபோது!

சதுரங்கம் பற்றி, ஆனந்த் பற்றி, காஸ்பரோவ் பற்றி
சிற்றுரை இந்த வீடியோவில்.
ஏற்பாடு: தலையங்க விமர்சனம் குழு.   

நாள்: ஞாயிறு செப் 15, 2019 மாலை 7 மணி.
*******************************************

பூமியை எடுத்து விட்டு அந்த இடத்தில்
வியாழனை வைத்து விட்டால் என்ன ஆகும்?
ஓராண்டுக்கு 365 நாள் என்பது மாறுமா?
----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------
சூரியனில் இருந்து மூன்றாவது கோளாக இருந்து
கொண்டு சூரியனைச் சுற்றி வருகிறது பூமி.
ஐந்தாவது கோளாக சூரியனைச் சுற்றி வருகிறது
வியாழன்(Jupiter).

விஞ்ஞானிகள் திடீரென்று ஒரு முடிவு எடுத்து
பூமியை அகற்றி விட்டு அதே ஆர்பிட்டில்,
ஆர்பிட்டைச் சிறிதும் மாற்றாமல் வியாழன்
கிரகத்தை வைத்து விட்டனர்.

இப்போது எமது கேள்வி இதுதான்.
பூமியின் ஆர்பிட்டில் இருக்கும் வியாழன் கிரகம்
சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம்
அதே 365 நாளாக இருக்குமா?
அல்லது கூடுமா? குறையுமா?

பூமியின் நிறை (mass) = 5.997 x 10^24 கிலோகிராம்.
வியாழனின் நிறை = 1.89 x 10^27 கிலோகிராம்.

வாசகர்கள் விடையளிக்க வேண்டும்.
******************************************** 


இது மாதிரி கேள்விகள் conceptual questions எனப்படும்.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் இத்தகைய
கேள்விகள் கிடையாது. CBSE பாடப் புத்தகங்களில்
கணிசமான கேள்விகள் இப்படித்தான் இருக்கும்.



விடைகள் வரவேற்கப் படுகின்றன.







   
   








    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக