என்ன நடந்திருக்கக் கூடும் விக்ரம் லேண்டருக்கு?
நிச்சயம் நிலவில் லேண்டர் தரையிறங்கி இருக்க வேண்டும்!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வு
15 நிமிட நிகழ்வு ஆகும். இதை 15 நிமிட பயங்கரம்
என்று இஸ்ரோ தலைவர் சிவன் குறிப்பிட்டார்.
நமது பூமிக்கு வளிமண்டலம் (atmosphere) உண்டு. ஆனால்
சந்திரனுக்கு வளிமண்டலம் எதுவும் கிடையாது.
அதாவது சந்திரனில் காற்று கிடையாது. இதை முதலில்
மனதில் இருத்த வேண்டும்.
விக்ரம் லேண்டர் 30 கிமீ உயரத்தில் இருந்து நிலவில்
தரையிறங்க வேண்டும். முதல் 10 நிமிடங்களில்
உயரம் 7.4 கிமீ ஆகக் குறைந்து விட்டது. லேண்டரின்
வேகம் இப்போது 526 kmph.
11 நிமிடம் 8 வினாடிகளில் உயரம் மேலும் குறைந்து
5 கிமீ ஆகி விட்டது. இப்போது லேண்டரின் வேகம்
331.2 kmph.
அடுத்த 2 நிமிடத்திற்குள் உயரம் 400 மீட்டராகக்
குறைய வேண்டும். ஆனால் இந்தகே கட்டத்தை
லேண்டர் அடையவில்லை. மாறாக 5 கிமீ உயரத்தில்
இருந்து 2.1 கிமீ உயரத்துக்கு குறைத்து விட்ட
நிலையில் சிக்கனல்கள் வருவது நின்று விட்டது.
ஆக, 15 நிமிடங்களில், 12 நிமிட நேரம் வரை எல்லாம்
சரியாக இருந்து, அதன் பிறகு சிக்கல் நேரிட்டு உள்ளது.
அதாவது கடைசி மூன்று நிமிடங்களில் எல்லாம்
கைமீறிப் போய் உள்ளது.
ஆயின், லேண்டருக்கு என்ன நேர்ந்திருக்கும்?
ஈர்ப்பு விசைக் கோட்பாட்டின்படி, நிலவின் தரையில்
இருந்து .2.1 கிமீ உயரத்தில் உள்ள லேண்டரை
நிலவானது தன்னை நோக்கி ஈர்க்கும்.
நியூட்டனின் ஈர்ப்பு விசைக் கோட்பாட்டின்படி,
இந்தப் பிரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளும் இன்னொரு
பொருளை ஈர்க்கும். இந்த ஈர்ப்பு எவ்வளவு என்பதையும்
நியூட்டன் quantify செய்துள்ளார். வாசகர்கள் இங்கு
அவருடைய inverse square lawஐப் பயன்படுத்த வேண்டும்.
லேண்டரின் நிறை = 1498 கிலோகிராம்
நிலவின் நிறை = 7.342 x 10^22 கிலோகிராம்
இரண்டுக்கும் இடையிலான தூரம் = 2.1 km
தூரம்=d என்க. d^2 = 4.41 km^2
Inverse square law formula படி,
force = 2494 x 10^22
= 2.494 x 10^25 N.
இந்த ஈர்ப்பு விசை 10^25 என்ற அளவில் உள்ளது.
இது பேய்த்தனமான ஈர்ப்பு. எனவே லேண்டரை
நிலவு தன்னை நோக்கி ஈர்த்து இருக்க வேண்டும்.
அதாவது லேண்டர் நிலவில் தரையிறங்கியே
இருக்க வேண்டும். வேறு வழியே இல்லை.
அந்தத் தரையிறக்கம் மென்மையான தரையிறக்கமாக
இருப்பதற்கு வாய்ப்பு குறைவு.
நிலவில் வளிமண்டலம் இல்லாததால், ஆக்சிஜன்
இல்லாததால் தீப்பிடிக்க வாய்ப்பு இல்லை.
அதே நேரத்தில், ஒருவேளை வெப்பம் அதிகம்
இருந்து சில கருவிகள் செயலிழந்து போய்
இருக்கலாம்.
ஆக, விக்ரம் லேண்டர் நிலவில் ஏதோ ஒரு
விதத்தில் நிலவில் தரையிறங்கியே இருக்க
வேண்டும் என்று நியூட்டன் அறிவியல் மன்றம்
அனுமானிக்கிறது. எமது அனுமானம் சரியா?
காத்திரமான கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.
************************************************
மரத்தில் இருந்து ஒரு மாங்காய் விழுவது போல,
அல்லது உயரத்தில் இருந்து ஒரு கல் விழுவது போல
விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்திருக்கக் கூடும்.
அல்லது ஆழமான கிணற்றில் உயரத்தில் இருந்து
குதிப்பது போல..... இப்படி ஏதேனும் ஒரு
விதத்தில் நிகழ்ந்திருக்கக் கூடும் என்பதாகவே
பொருள் கொள்கிறேன்.
மலைகள் இல்லாத பகுதியை நோக்கியே
பயணம் இருக்கும்படியாக திட்டமிடப் பட்டுள்ளது.
எனவே அதற்கு வாய்ப்பில்லை.
retro rocket firingன் போது தேவைக்கு அதிகமான அளவில்
என்ஜின்களின் full capacityஐ தொட்டு நிற்கிற அளவுக்கு
(800 N) fire செய்திருக்கலாம். இதனால் விளைந்த வெப்பமானது
highly sensitive instrumentsஐ பாதித்து இருக்கலாம்.
அல்லது முற்றிலும் எதிர்பாராத விதமாக,
நிலவின் வெப்பம் அதீதமாக இருந்து, just 2.1 km
தொலைவில் இருந்த லேண்டரை வெப்பம்
பாதித்து, sensitiveஆன கருவிகள் பாதிக்கப்
பட்டிருக்கலாம். இவை அனைத்தும் அனுமானங்களே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக