சனி, 21 செப்டம்பர், 2019

சூரியனுக்குச் செல்லும் ஆதித்யா!
இஸ்ரோ அனுப்பும் விண்கலன்!
--------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
சூரியனை ஆய்வு செய்ய ஒரு விண்கலத்தை அனுப்ப
இருக்கிறது இஸ்ரோ. சூரியனை ஆய்வு செய்வது என்றால்
சூரியனின் வளிமண்டலமாக இருக்கின்ற வெளிப்புற
அடுக்குகளை (outer layers) ஆய்வு செய்வது என்று பொருள்.
1. Photosphere 2. coronasphere 3.Corona ஆகிய மூன்றும் வெளிப்புற
அடுக்குகள் ஆகும்.

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
ஆதித்யா எனப் பெயரிடப் பட்டுள்ளது. இதன்
அதிகாரபூர்வமான பெயர் Aditya L-1 ஆகும். இங்கு
L-1 என்பது Lagrengian-1 ஆகும். L-1 என்பது ஒரு
லாக்ரேஞ்சியன் புள்ளி ஆகும்.

L-1 என்னும்  லாக்ரேஞ்சியன் புள்ளியைச் சுற்றி
ஆதித்தியாவின் orbit இருக்கும். எனவேதான் விண்கலனுக்கு
ஆதித்யா L-1 என்று பெயர்.

ஜோசப் லூயி லாக்ரேஞ்ச் (Joseph Louis Lagrange 1736-1813)
என்பவர் ஒரு பிரெஞ்சுக் கணித மேதை. இவர் உலகப்
புகழ் பெற்ற கணித மேதை ஆய்லரின் சீடர். இவரின்
பங்களிப்பு கணிதத்தில் பல துறைகளைத் தழுவியது.
லாக்ரேஞ்சியன் புள்ளிகள் இவரின் celestial mechanicsல்
வருபவை.

ஆதித்யா L-1 விண்கலன் ஹாலோ சுற்றுப்பாதையில்
(halo orbit) விடப்படும். இந்தச் சுற்றுப்பாதை L-1 என்னும்
லாக்ரேஞ்சியன் புள்ளியைச் சுற்றி அமையும்.
இப்புள்ளி (L-1) குறித்தும் halo orbit குறித்தும் நிறைய
எழுத இயலாது. அதுவும் தமிழில் எழுத இயலாது.

எனவே வாசகர்கள் உரிய நூல்களைப் படித்துத்
தெளிவு பெறவும்.
************************************************            


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக