எட்டுத்தொகை நூற்களை நினைவில் கொள்ள
இந்த வெண்பாவை மனனம் செய்யுங்கள்!
தற்கொலையைத் தடுக்கும் வெண்பா!
----------------------------------------------------------------------------
சற்று முன் நான் இயற்றிய வெண்பா!
---------------------------------------------------------
வளையணிந்த பெண்ணே தொகையெட்டும் கேளாய்
திளைத்திடும் நற்றிணை ஐங்குறுநூ றும்அகம்
சீர்புறம் மன்னுபரி பாடல் குறுந்தொகை
சூழ்பதிற்றுப் பத்துகலி என்க.
-----------------------------------------------------------------
இந்த வெண்பாவை அலகிட்டு வாய்பாடு கூறி
தளைகளை எடுத்துக் காட்டுவோம் பாரீர்!
வளையணிந்த = நிரைநிரைநேர் =கருவிளங்காய்
பெண்ணே = நேர் நேர் = தேமா
தொகைஎட்டும் = நிரைநேர்நேர்= புளிமாங்காய்
கேளாய் = நேர் நேர் = தேமா
திளைத்திடும் = நிரைநிரை= கருவிளம்
நற்றிணை = நேர்நிரை = கூவிளம்
ஐங்குறுநூ = நேர்நிரைநேர் = கூவிளங்காய்
றும்அகம் = நேர்நிரை = கூவிளம்
சீர்புறம் =நேர்நிரை = கூவிளம்
மன்னுபரி = நேர்நிரைநேர் = கூவிளங்காய்
பாடல் = நேர்நேர் = தேமா
குறுந்தொகை = நிரைநிரை = கருவிளம்
சூழ்பதிற்றுப் = நேர்நிரைநேர் = கூவிளங்காய்
பத்துகலி = நேர்நிரைநேர் = கூவிளங்காய்
என்க = நேர்நேர் = காசு எனும் வாய்பாடு.
வெண்பாவுக்குரிய தளைகள் பின்வருமாறு
அமைந்துள்ளன.
வளையணிந்த பெண்ணே = காய்முன்நேர் = வெண்சீர் வெண்டளை ...
பெண்ணே தொகைஎட்டும் = மாமுன்நிரை இயற்சீர் வெண்டளை
தொகைஎட்டும் கேளாய் = காய்முன்நேர் = வெண்சீர் வெண்டளை
கேளாய் திளைத்திடும் = மாமுன்நிரை = இயற்சீர் வெண்டளை
திளைத்திடும் நற்றிணை = விளமுன்நேர் = இயற்சீர் வெண்டளை
நற்றிணை ஐங்குறுநூ = விளமுன்நேர் = இயற்சீர் வெண்டளை
ஐங்குறுநூ றும்அகம் = காய்முன்நேர் = வெண்சீர் வெண்டளை.
பின்னிரண்டு அடிகளிலும் உள்ள தளைகளை
வாசகர்கள் எழுதிக் காட்டுவது மாண்புறுத்தும்.
இந்த வெண்பாவை மனனம் செய்க!
*********************************************
பெற்றோர்களே,
உங்கள் பிள்ளைகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று
உயர் அதிகாரியாக வேண்டுமா?
பிள்ளைகளோடு சேர்ந்து இந்த வெண்பாவை நீங்களும்
மனனம் செய்யுங்கள்: பொருள் அறியுங்கள்.
எமது பதிவுகளைப் படித்து
உங்களின் அறிவை அதிகரித்துக் கொண்டால்
உங்கள் பிள்ளைகள் தற்கொலை செய்ய நேரிடாது!
தேர்வில் தோல்வி! வாலிபர் தற்கொலை!
இது மாதிரி செய்திகள் இனி தினத்தந்தியில் வராது!
***************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக