வெள்ளி, 13 செப்டம்பர், 2019

MARXISM

மக்களிடமிருந்து பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த பிரதிநிதிகள் கூடி கொள்கை முடிவு எடுத்து அதை நடைமுறைப்படுத்தும் நாடாளுமன்ற ஜனநாயகம் வந்து விட்டது.

இந்நிலையில் தனி நபரோ, சிறு குழுவோ கொள்கை முடிவெடுத்து அல்லது திட்டத்தை உருவாக்கி மக்களை அடிமையா
க நடத்தும் மார்க்சியம் பொருத்தமற்ற ஒன்றாகி விட்டது.

அறைக்குள் உட்கார்ந்து கொண்டு எத்தனை அரசியல் திட்ட நூல்களை எழுதினாலும் இனி பயன் ஏதும் ஏற்படப் போவதில்லை.

ஆண்டான் அடிமை, நிலப்பிரபுத்துவ அரசு, முதலாளித்துவ அரசு, சோசலிச அரசு என்று பொத்தாம் பொதுவாகத்தான் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் அரசு பற்றி கூறுகின்றனர். எந்த அரசுக்குமான வடிவத்தையும் தெளிவாக விளக்கவில்லை.

மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோர் சோசலிசத்துக்கான அரசியலமைப்பை தெளிவாக புரிந்து, அதை விளக்க முற்பட்டிருந்தால், ஆண்டான் அடிமை முறையை அகற்றிவிட்டு சோசலிச அரசிலமைப்பை ஏன் அந்த இடத்தில் பொருத்த முடியாது? நிலப்பிரபுத்துவ அரசமைப்பை அகற்றிவிட்டு சோசலிச அரசியலமைப்பை ஏன் அந்த இடத்தில் பொருத்த முடியாது? முதலாளித்துவ துவக்க நிலை அரசியலமைப்பை அகற்றி விட்டு சோசலிச அரசியலமைப்பை ஏன் அந்த இடத்தில் பொருத்த முடியாது? என்ற கேள்வி அவர்களுக்குள்ளேயே எழுந்திருக்கும்.

இங்கே அரசு வடிவம் என்பது உரிமைப் பங்கீடு பற்றியதாகும். உரிமைப் பங்கீடு பொருளாதாரப் பங்கீட்டோடு தொடர்புடையதாகும். அரசியல் போராட்டம் என்றாலே அது வடிவப் போராட்டம் என்று அர்த்தம். வடிவமற்ற அரசு என்று எதுவும் கிடையாது.

ஆனால் மார்க்ஸ், எங்கல்சோ உற்பத்தி சக்தி, உற்பத்தி உறவு, உற்பத்தி முறை என்று நுழைந்து அதற்குள்ளிருந்து அரசமைப்பை பார்த்தனர். இது ஒரு தவறான பார்வையாகும். அரசு வடிவத்திலிருந்து பொருளியலை ஆராய்ந்திருந்தால் மார்க்சியம் வெற்றி பெற்றிருக்கும்.

மூலதனத்தில் மார்க்ஸ் குறிப்பிடும்போது, “ஊதியமில்லா உபரி -உழைப்பு நேரடி உற்பத்தியாளர்களிடம் இருந்து கறக்கப்படுவதற்கு பயன்படும் பிரத்தியேகமான பொருளாதார வடிவம் தான், ஆளுவோருக்கும் ஆளப்படுவோருக்குமான உறவு முறையைத் தீர்மானிக்கிறது” என்கிறார்.

இந்த இடத்தில் மார்க்ஸ் உபரி உழைப்பு சுரண்டப்படுவது ஏதோ சுயேட்சையான நிகழ்வுபோல அல்லது தேவையிலிருந்து உருவானது போல பார்க்கிறார். உழைப்பு சுரண்டப்படுதவற்கு பின்னால் அதிகாரம் இருந்திருக்கும் என்பதை அவர் பார்க்கவில்லை அல்லது அந்த அதிகாரம் சமூக வளர்ச்சிக்கு தேவை என்றே பார்த்திருக்கிறார். இது ஒரு தவறான பார்வையாகும்.

சோசலிசத்திற்கான அரசமைப்பு சட்ட வடிவத்தை தெளிவாக விளக்கியிருந்தால், அதை அடைவதற்கு ஏற்ற கட்சி வடிவம், தற்போதைய சூழ்நிலையில் எப்படி கட்ட வேண்டும் என்று ஆய்வு செய்திருப்பார்கள். ஆனால் பொத்தாம் பொதுவாக சோசலிச அரசு என்று கூறியதால் எதேச்சதிகார வடிவில் கட்சி கட்ட ஆரம்பித்து விட்டனர். இதனால் பெட்டிக்கடை போல் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகி விட்டது. மார்க்சியவாதிகள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதை மார்க்சியத்திலிருந்தே பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக