வியாழன், 19 செப்டம்பர், 2019

திஹார் சிறையில் சிதம்பரம் நடத்தும் வகுப்புகள்!
வந்தவர்கள் எத்தனை பேர்?
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
திஹார் சிறையில் ப சிதம்பரம் அவர்கள் பொருளாதார
வகுப்புகளை நடத்தி வருகிறார். முதல் நாள் நடந்த
வகுப்புக்கு 36 பேர் வந்தனர்.

இரண்டாம் நாள் நடந்த வகுப்புக்கு முந்திய வகுப்புக்கு
வந்தவர்களை விட 19 பேர் அதிகம் வந்தனர். இவ்வாறு
ஒவ்வொரு நாள் வகுப்புக்கும் முந்திய நாளின் வகுப்புக்கு
வந்தவர்களை விட 19 பேர் அதிகம் வந்தனர். மொத்தம் 14
நாட்கள் வகுப்புகள் நடந்தன.

இந்த 14 வகுப்புகளிலும் சேர்த்து மொத்தம் எத்தனை பேர்
வகுப்புக்கு வந்தனர்?

விடைகள் வரவேற்கப் படுகின்றன.
***************************************************
இந்தக் கணக்கைச் செய்யுங்கள். கல்வி சார்ந்த
விஷயங்களில் கருத்துக்கூறும் அருகதையைப்
பெறுங்கள்.
**************************************************** 

கணக்கைச் செய்ய முயற்சி செய்யவும். இந்தக்
கணக்கு 10, 11 வகுப்பின் பாடத்திட்டத்துக்குள்
அடங்கிய கணக்குதான். இக்கணக்கு எந்த
topicல் வருகிறது என்றாவது அறிய முயற்சி செய்யவும்.
அறியாமையை வெளிப்படுத்துவதில் இவ்வளவு


சரியான விடையும் விளக்கமும்!
-------------------------------------------------
வகுப்புகளுக்கு வந்தவர்கள் = 36, 55, 74,..... என்பதாக
அமையும். இவற்றைக் கூட்டினால் 2233 வரும்.
இதுதான் வகுப்புக்கு வந்தவர்களின் மொத்தம்.

 36,55,74,...... இது ஒரு Arithmetic Progression.
இதன் முதல் உறுப்பு= 36. இதை a என்க.
இத்தொடரில் மொத்தமுள்ள உறுப்புக்கள் = 14. (n என்க)
பொது வேறுபாடு = 19. இதை d என்க.
 
Sum of  n terms of an AP = S = n /2 ( 2a + (n-1) d)
இக்கணக்கில் n =14, a =36, d = 19.
S = 7 (72+ 13*19) = 2233.

வகுப்புக்கு வந்தவர்கள் = 2233 பேர்.
*******************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக