வியாழன், 26 செப்டம்பர், 2019

புலிகள் அழிந்த பிறகு எல்லா உண்மைகளும்
சந்திக்கு வந்த பிறகு, வைகோவும் சீமானும்
எல்லாருக்கும் தெரிந்த உண்மைகளை
அவர்களும் சொல்லி வருகிறார்கள்.

வாஜ்பாய் அரசு போர்க்கப்பலை வழங்கியது
எப்போது? 1999க்குப் பிறகு. இன்றைக்கு 20 ஆண்டுகளுக்கு
முன்பு. அன்று இந்திய அரசோடு வாஜ்பாய்
அரசோடு சேர்ந்த கொண்டு, இந்திய அரசின்
ஈழ அழிப்புக்குத் துணை போனவர்கள்
ஈழத் தரகர்கள். அவர்கள் மீது பரிவு காட்ட முடியாது.

ஈழ விடுதலையை அன்று முதல் இன்று வரை
ஆதரிக்கிறோம். புலிகளை விமர்சனத்துடன்
ஆதரிக்கிறோம்.

அவரும் ஒரு ஈழத் தரகரே. இப்பதிவு ஈழத்தரகர்கள்
அனைவரையும் பற்றியது. போர் என்றால் அப்பாவி
மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்ன
ஜெயலலிதாவை ஈழத்தாய் என்று சொன்ன சீமான்
என்ன புரட்சியாளரா?

இல்லை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொன்ன
சீமான் ஈழத்தரகர் அல்லாமல் வேறு யார்?

ஜெயலலிதா ஒருபோதும் தனி ஈழத்தை
ஏற்றுக் கொண்டதே இல்லை> அவரிடம்
காசு வாங்கி கொண்டு அவரை ஆதரித்து
தேர்தல் பிரச்சாரம் செய்தது எப்படிப் புரட்ச்சி ஆகும்?
இவர்கள் அனைவரும் தரகர்கள்.

நவம்பரில் உள்ளாட்சித் தேர்தலில்
IJK போட்டியிடாது! பாரிவேந்தர் அறிவிப்பு!
CPI, CPM தலா 5c கேட்பதால்
போட்டியிடாமல் தப்பிக்கும் பாரிவேந்தர்!

அறிவியல், தத்துவம் தமிழ் ஆகியவையே
எமது பதிவுகளில் இடம் பெறும். இது
எல்லோரையும் குதூகலப் படுத்தும்
பல்சுவை வாரஇதழ் அல்ல. CPI CPM மீதான
விமர்சனம் கண்டிப்பாக இடம் பெறும்.
ஏனெனில் நாங்கள் ஒன்றாக வேலை
செய்தவர்கள். இதை ஒரு பத்திரிகையாகக்
கருதிக்கொண்டு அது இல்லை, இது இல்லை
என்று கூறுவதில் பயனில்லை.

எது அபூர்வமானது, எது மற்ற எவராலும்
சொல்லப் பட முடியாதது அதை மட்டுமே
நாங்கள் சொல்கிறோம். எனவே எல்லோரையும்
திருப்திப் படுத்துவது அல்லது காலரிக்கு வாசிப்பது
என்பதெல்லாம் இங்கு கிடையாது.

கடவுள் இல்லை என்று நார் நாறாகக் கிழித்துத்
தூங்கப் போடுகிறோமே அடிக்கடி, அதெல்லாம்
பாஜகவுக்கு உவப்பானதா?

எமது பதிவுகள் IQ 105க்கு மேலான வாசகர்களை
மனதில் கொண்டு எழுதப் படுவது.

இதுவரை நான் எழுதிய பல பதிவுகளை எவரும்
எழுதியதில்லை. ஏனெனில் நான் சொல்லுவதற்கு
முன்னால்  ஒருவருக்கும் தெரியாது.  மு

ESMA சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது
அட்டவணையில் இருக்கிறது; அதை நீக்க வேண்டும்
என்று சொன்ன ஒரே ஆள்தான். வேறு எவருக்குமே
ESMA சட்டம் 9ஆவது அட்டவணையில் இருக்கிறது
என்பது தெரியாது. வேறு எவருக்காவது தெரியுமா?
ஒருவருக்கும் தெரியாது.

நான் ஒரு தேற்றத்தைப் பின்பற்றி வருகிறேன்.
"I am always right and others are always wrong" என்ற
தேற்றம்தான் அது. இத்தேற்றம் இதுவரை
யார் எவராலும் தப்பு என்று நிரூபிக்கப்
படவே இல்லை.
-------------------------------------------------

குழந்தைகளுக்கான அறிவியல் மாநாடு!
சென்னையில் நடக்கிறது!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------
சென்னை தீவுத்திடலில் உள்ள கேந்திரிய வித்யாலயா
பள்ளியில் குழந்தைகளுக்கான அறிவியல் மாநாடு
(Children Science Congress) நடைபெறுகிறது  இரண்டு
நாட்கள் செப்டம்பர் 27, 28 தேதிகளில் இந்த
மாநாடு நடைபெறுகிறது.

குழந்தைகள் தங்களின் creative thinkingஉடன் கூடிய
ப்ராஜக்டை, மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை
இம்மாநாட்டில் முன்வைப்பர். தமிழ்நாடு முழுவதும்
இருந்து குழந்தைகள் பங்கேற்கின்றனர்.

குழந்தைகளின் performanceஐ மதிப்பிடும்
மதிப்பீட்டாளராக (evaluator) ஆக நியூட்டன் அறிவியல்
மன்றம் இம்மாநாட்டில் பங்கேற்கிறது.

அனுமதிக்கப் பட்டவர்கள் மட்டுமே மாநாட்டில்
பங்கேற்க இயலும்.
**********************************************     
   

 
 


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக