புதன், 11 செப்டம்பர், 2019

கொக்கின் பார்வையில் மீனும்
மீனின் பார்வையில் கொக்கும்
அத்வைதம் ஆகாது.

மூலதனத்தின் கால்களில் நசுங்கும்
மூட்டைப் பூச்சிகளின் உலகமும் .
ஒழுக்கறைப் பெட்டிகளில்
உடைமை சேர்த்தோரின் உலகமும்
எட்டுக் கோள்களுக்கும் பொதுவான
கெப்ளரின் விதிகளால் இயங்கவில்லை..

கூலியுழைப்பும் மூலதனமும்
ஒரு முகத்தின் இரண்டு கண்கள் அல்ல
கண்ணிரண்டும் ஒன்றே காண இயலாது.

இரு வேறு உலகங்களின் இயற்கை
ஆதி சங்கரர் நொறுங்கிச் சரிய
காரல் மார்க்சே காலத்தை வெல்கிறார் 

தனியுடைமைச் சமூகம்
உடைமை உடையோருக்கு மட்டுமே.
உடைமையற்றோர் சமூகத்தின் எல்லைக்கு
அப்பால் நாடு கடத்தப் பட்டோர்   .

ஒற்றைப் பார்வை அது வர்க்கப் பார்வை
வேறு பார்வை இல்லையே
ஒற்றைச் சமூகம் அல்ல
பிளவுண்ட சமூகம்
ஒவ்வொரு பிளவுகள் stresstensor வேறு.

வாருங்கள், வரவேற்கிறோம். அநேகமாக
சில வாரங்களுக்குள்
தொடங்க உள்ளோம்.    ஆங்கில

கட்டுரையில் குறிப்பிடும் ஆறாவது சம்பளக்
கமிஷனின் (VI CPC) தலைவர் யார்?
வாசகர்கள் விடையளிக்கலாமே.

சீத்தலைச் சாத்தனார் இயற்றிய
ஒரிஜினல் மணிமேகலை:
----------------------------------------
"கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தன்னிலை தெரியாத தண்டமிழ்ப் பாவை"

கீர்த்தனார் எழுதிய மணிமேகலை:
-------------------------------------------------------
"கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலை திரியாத தந்தமிழ்ப் பார்வை"  

வேறுபாடுகள்:
பாவை பார்வை ஆகி விட்டது.
தன நிலை தான் நிலை ஆகி விட்டது.
திரியா என்னும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
தெரியாத என்று ஈறு பெற்று விட்டது.

தமிழ் இலக்கிய மாணவர்களுக்கு பிழை திருத்தப்
பயிற்சி கொடுப்பதற்கு அற்புதமான உதாரணம்!








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக