திங்கள், 23 செப்டம்பர், 2019

திரு பிரபாகரன் மார்க்கோஸ்,
திராவிடம் என்ற சொல் கால்டுவெல்லுக்குப் பிறகுதான்
பெருவழக்காக ஆனது. அதற்குக் காரணம் பிரிட்டிஷ்
காலனி ஆட்சியாளர்களின் அரசு ரீதியான ஆதரவுதான்.

இரட்டைமலை சீனிவாசனும் அயோத்திதாசரும்
இன்னும் பலரும் ரவீந்திரநாத் தாகூர் உட்பட  திராவிடம்
என்ற சொல்லைப் பயன் படுத்தியவர்கள்தாம்.
அவர்கள் திராவிடம் என்ற கோட்பாட்டை ஏற்றவர்கள்
அல்லர்.ஒரு சொல்லைப் பயன்படுத்துவது என்பது வேறு;
ஒரு கோட்பாட்டை ஏற்றுக் கொள்வது என்பது வேறு.   

உங்களுடைய கருத்தை நீங்கள் எவ்வளவு
வலிமையாக வேண்டுமானாலும் வைக்கலாம்.
எவ்வளவு ஆணித்தரமாக வேண்டுமானாலும்
சொல்லலாம். ஆனால்  வசைகள்,அவதூறுகள்
இல்லாமல் உங்களின் கருத்தைச் சொல்ல
வேண்டும். இது annihilation நடந்த இடம்.
குட்டி முதலாளியத்துக்கு இது உகந்த இடம் அல்ல.

திராவிடம் என்பது இன்று திராவிட இந்துத்துவமாகச்
சீரழிந்து நிற்கிறது. சந்தர்ப்ப வாதம், அரசியல்
பிழைப்பு வாதம், ஊழல் செய்து சொத்துக் குவித்தல்,
வாரிசு அரசியல் என்னும் வர்ணாசிரமம் ஆகிய
இழிவுகளின் மையமாக நிற்கிறது.

பயனற்ற விவாதங்களில் நேரத்தை விரையம்
ஆக்க வேண்டாம். திமுக உள்ளிட்ட திராவிட
இயக்கத்தில் எந்தவொரு முற்போக்குக் கூறும் இல்லை.
திமுக என்பது திராவிட இந்துத்துவக் கட்சியாக
ஆகி வெகுகாலம் ஆகி விட்டது. ஏற்கனவே அதிமுக
இந்துத்துவக் கட்சியாக ஆகி நிலைபெற்று விட்டது.

பாட்டி பழைய ஞாபகத்தில் மஞ்சள் தேய்த்துக்
குளித்த கதையாக திராவிட இயக்கம் முற்போக்கானது
என்ற கதை ஆகி விட்டது. கேடுகெட்ட வர்ணாசிரம
வாரிசு அரசியலில் திமுக உலக அளவில் முதலிடம்
பெற்றுள்ளது.


பெரியாரின் திராவிட இயக்கக் கோட்பாட்டை
அண்ணல் அம்பேத்காரோ இரட்டைமலையாரோ
ஏற்கவில்லை. இது குறித்து விரிவாக அடுத்து
எழுதப்படும். அதைப்படித்த பின் கருத்துக் கூறலாம்.


இந்தி பிறந்தது எப்போது?
--------------------------------------
13ஆம் நூற்றாண்டில் அதாவது 1201-1300 காலத்தில்
இந்தி என்றொரு மொழி பிறக்கவே இல்லை.
பிறக்காத ஒரு மொழி எப்படி தமிழ்நாட்டுக்கு
வந்திருக்க முடியும்? அதை எப்படி தமிழர்கள்
எதிர்த்திருக்க முடியும்?

இந்தி என்பது மொகலாய ஆடசி இந்தியாவில்
ஸ்தாபிக்கப் பட்ட பிறகே பிறக்கிறது. மொகலாய
ஆட்சி எப்போது ஸ்தாபிக்கப் பட்டது. பொயு 1526ல்
முத்தாலாவத் பானிபட் போரில் இப்ராகிம் லோடியை
எதிர்த்து பாபர் வென்ற பிறகே மொகலாய
ஆடசி இந்தியாவில் உருவாகிறது. பாருக்குப் பின்
ஹுமாயூன். இடையில் செர்ஷாவால் ஹுமாயூன்
ஆடசி இழப்பு. பின் இரண்டாம் பானிபட் போரில் 1556ல்
அக்பர் வெற்றி பெற்ற பின்னரே  மொகலாய ஆடசி
நிலைநிறுத்தப் படுகிறது. அப்போதுதான் இந்தி
தோன்றுகிறது.

டில்லி சுல்தான்களின் ஆடசிக் காலத்தில் குதுபுதீன்
ஐபெக் முதல் இப்ராஹிம் லோடி வரையிலான
காலத்தில் இந்தி பிறக்கவே இல்லை.

ஆனால் தொல்லியல் துரையின் தற்குறி டைரக்டர்
தனது அறியாமையை வெளிப்படுத்துகிறார்.
  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக