செவ்வாய், 10 செப்டம்பர், 2019

ஈர்ப்பு விசை என்றாலே பூமியின் ஈர்ப்பு விசை
என்று நாம் பழக்கப் பட்டு விட்டோம். ஏனெனில
நாம் பூமியில் இருக்கிறோம். ஒவ்வொரு நொடியும்
பூமியின் ஈர்ப்பு விசைக்கு நிரந்தரமாக உள்ளாகிக்
கொண்டு இருக்கிறோம்.

நிலவின் ஈர்ப்பு விசை எவ்வளவு? பூமியின் ஈர்ப்பு
விசையில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே. ஏனெனில்
நிலவின் நிறை = 7.35 x 10^22 கிலோகிராம்.
பூமியின் நிறை = 6 x 10^24 கிலோகிராம்.   

பா இராமச்சந்திர மூர்த்தி

Net force கண்டறிய வேண்டுமெனில், இந்தக் கணக்கில்
வந்தடைந்த Forceஐ நியூட்டனின் Universal Gravitational
Constantஆல் பெருக்க வேண்டும்.
Universal Gravitational Constant G = 6.67 x 10^minus 11 (with proper unit).

Gravitational force between two objects = GMm/r^2.
where G = Universal Gravitational Constant
M = Mass of moon = 7.35 x 10^22 kg
m = mass of Vikram lander = 1498 kg
r = distance between two objects = 2.1 km.

இந்த formulaஐப் பயன்படுத்தி கணிதம் பயின்றோர்
நிலவுக்கும் லேண்டருக்கும் இடையிலான ஈர்ப்பு
விசையைக் கணக்கிட்டு அறிந்து கொள்ளலாம்.

அறிவியல் பின்னணி இல்லாத வாசகர்களையும்
மனதில் கொண்டு இக்கட்டுரை எழுதப் படுவதால்,
12ஆம் வகுப்பு இயற்பியல் வகுப்பறையில் போடுகிற
கணக்கை அப்படியே இங்கு எழுத இயலாது.

இங்கு யாம் யாப்புறுத்திக்கிற விஷயம் என்னவெனில்,
நிலவுக்கும் லேண்டருக்கும் இடையில் ஒரே ஒரு விசை
மட்டுமே செயல்பட வாய்ப்பு உள்ளது. அது நிலவின்
ஈர்ப்பு விசை. நிலவில் வளிமண்டலம் இல்லாததால்,
காற்று இல்லாததால், எரிதலை நிகழ்த்தும் ஆக்சிஜன்
இல்லாததால், வேறெந்த விசையும் செயல்பட
வாய்ப்பில்லை. எனவே நிலவின் ஈர்ப்பு விசையானது
லேண்டரை தன்னை நோக்கி இழுத்தே தீரும்.
இந்த உண்மைதான் இங்கு யாப்புறுத்தப் படுகிறது.

அப்படி ஈர்க்கப்பட்டு நிலவின் தரையை (surface) நோக்கி
1.62 meter per second squared என்ற accelerationல் விக்ரம்
லேண்டரானது நிலவின் தரையை அடையும். இங்கு
நிலவில் உள்ள acceleration due to gravity பூமியின் acceleration ஐ
விட ஆறு மடங்கு குறைவு என்பதால், விக்ரம் லேண்டரானது
நிலவின் தரையில் சற்று மெலிதாகத்தான் வந்து விழும்.


நிலவில் பகல் பொழுது மிகவும் நீண்டது. நிலவில்
ஒரு முழுப் பகல் என்பது பூமியில் உள்ள 14 நாளுக்குச்
சமம். அதே போல நிலவில் இரவு என்பதும் பூமிக்
கணக்கில் 14 நாள் ஆகும்.

எனவே 14 நாளுக்குப் பிறகு நிலவில் இரவுப் பொழுது
வந்து விடும். எனவே நமது rescue operation 14 நாளுக்குள்
வெற்றி அடைய வேண்டும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக