திங்கள், 16 செப்டம்பர், 2019

மார்க்சியவாதி என்பவன் யார்? விளக்கம்!
தமிழ் மீடியம் இயற்பியல் வகுப்பு எப்படி இருக்கும்?
Columb's law, Gauss law வேறுபாடு என்ன?
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------ 
ஓர் இடத்தில் ஒரு electric chargeஐ வைத்தால்
அந்த இடத்தில் ஒரு புலம் (field) உண்டாகும்.
அதாவது மின்புலம் (electric field) உண்டாகும்.
இதற்கு ஒரே ஒரு ஒற்றை chargeஐ (unit charge)
வைத்தால் போதும். மின்புலம் கிடைத்து விடும்.

அதிக அளவு  electric charge ஒரு பொருளில் இருந்தால்
அதை flux என்கிறோம். எவ்வளவு charge இருக்கிறதோ
அதைப் பொறுத்து flux அமையும். flux density எவ்வளவு
என்பதையும் நாம் கண்டறியலாம்.   
 
இந்த இடத்தில் charge is quantized என்பதை உங்களுக்கு
நினைவு படுத்த விரும்புகிறேன். chargeஐ quantize
செய்தவர் யார்? அவர்தான் மில்லிகன் (R A Millikan).
அவரின் புகழ் பெற்ற oil drop experiment இதே 12ஆம்
வகுப்புப் பாடத்தில் இருக்கிறது.

ஒரு பொருள் எந்த வடிவிலும் இருக்கலாம்.  அந்தப்
பொருளில் electric charge இருந்தால், அந்த charges
உண்டாக்கும் புலத்தை (field) எப்படிக் கணக்கிடுவது?       

ஒரு சதுரமான காகிதம் போன்ற ஒரு அலுமினியத்
தகட்டில் மின்புலம் இருப்பதாக வைத்துக் கொண்டால்
அதை எப்படிக் கணக்கிடுவது?

அல்லது, ஒரு கோள வடிவிலான (hallow sphere)   இரும்புப்
பந்தில்  உள்ள மின்பலத்தை எப்படிக் கணக்கிடுவது?

முற்காலத்தில் Coulumb's lawஐப் பயன்படுத்தி பெருங்
கஷ்டப்பட்டு மின்புலத்தை அளவிட்டனர். தற்போது
அந்தக் கஷ்டம் இல்லை. ஏனெனில் Gauss law வந்து
விட்டது. Gauss Law மூலம் மிகவும் எளிமையாக
மின்புலத்தை அளவிட்டு அறியலாம்.

Gauss lawவின் சௌகரியம் என்னவெனில், அது
மின்புலத்தை நேரடியாக chargeஉடன் தொடர்பு
படுத்துகிறது. Columb's law இதைச் செய்வதில்லை.
Fieldக்கும் chargeக்கும் உள்ள தொடர்பு ஒரு நேரடித்
தொடர்பு என்பதையே Gauss law  நிறுவுகிறது.
Of course, ஒரு பொருளில் உள்ள flux என்பது
அப்பொருளின் permittivityஐப் (அனுமதிக்கும் தன்மை)
பொறுத்தது.

இதற்கு மேல் எழுத இயலாது. நிறைய அறிவியல்
குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டும்.அது இயலாது.
------------------------------------------------------------------------
1) தேர்வு வருவதை முன்னிட்டு, நேற்று மிகச் சில
மாணவர்கள் இயற்பியலில் தேர்வுக்குரிய
பாடங்களை விளக்கச் சொல்லிக் கேட்டு வந்தனர்.
கடினமான topic எனப்படும் Gauss lawஐ  மட்டும்
ஒரு மணி நேர வகுப்பில் விளக்கினேன்.

2) ஃபார்முலா, சமன்பாடுகள், derivation எல்லாமே
ஆங்கிலத்தில்தான். விளக்கம் மட்டுமே தமிழில்.
இப்படித்தான் தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மீடியம்
வகுப்புகள் நடத்தப படுகின்றன. தனித்தமிழ்,
முற்றிலும் தமிழ் என்பதெல்லாம் நடைமுறையில்
எங்கும் கிடையாது.

3) Columb's lawவுக்கும் Gauss lawவுக்கும் இடையிலான
பயணத்தின் ஊடே சமூகத்தின் பொருள் உற்பத்திச்
சக்திகளின் வளர்ச்சியை, அது எந்த அளவுக்கு
உற்பத்தி உறவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது
என்பதை விளக்க வல்லவனே மார்க்சியவாதி!  
******************************************


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக