செவ்வாய், 3 செப்டம்பர், 2019

ராஜினாமா செய்த ஐ ஏ எஸ் அதிகாரி!
கண்ணன் கோபிநாதனின் ராஜினாமா ஏற்கப் படவில்லை!
அவர் மீது துறை சார்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது!
-----------------------------------------------------------------------------
1) கண்ணன் கோபிநாதன் என்ற ஐ ஏ எஸ் அதிகாரி
 சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்து பரபரப்பை
ஏற்படுத்தினார். காஷ்மீர் மக்களின் உரிமைகள்
நசுக்கப் படுவதைக் கண்டித்து ராஜினாமா செய்வதாக
அறிக்கை வெளியிட்டார்.

2) ஆனால் இது உண்மை அல்ல. அவர்  காஷ்மீரில்
பணிபுரிந்தவர் அல்லர். அவர் டாமன் டையூ மற்றும்
டட்ரா நகர் ஹவேலி என்னும் யூனியன் பிரதேசத்தில்
பணிபுரிந்தவர்.

3) அவர் மீது துறை சார்ந்த வழக்குத் தொடரப்பட்டு,
ஜூலை மாதமே குற்றப் பத்திரிக்கை வழங்கப் பட்டு
இருக்கிறது. அதாவது காஷ்மீர் பற்றிய எந்த முடிவும்
எடுக்கப் படாத ஜூலை மாதத்திலேயே, அவருக்கு
குற்றப் பத்திரிக்கை வழங்கப்பட்டு இருக்கிறது.

4) இந்த வழக்கு முடியவில்லை. நிலுவையில் உள்ளது.
எனவே அவருக்கு vigilance clearance  வழங்கப் படவில்லை.
vigilance clearance கிடைக்காமல், கடவுளே ஆனாலும்
Govt serviceல் இருந்து விடுவிக்கப் பட முடியாது.

5) குற்றப் பத்திரிக்கை நகல்களைப் படித்துப் பாருங்கள்.
***************************************************    

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக