திங்கள், 16 செப்டம்பர், 2019

அன்று....அஞ்சாங்கிளாஸ் படித்தவன்
தினத்தந்தியை வாசித்தான்!
இன்று.... ஒன்பதங்கிளாஸ் படிக்கிற பையனால்
தினத்தந்தியை வாசிக்க முடியவில்லை!
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
1960களில் ஒரு காட்சி! தமிழ்நாடு முழுவதும் இந்தக்
காட்சியைக் காணலாம். ஒரு டீக்கடையில் ஒருவர்
தினத்தந்தியை உரத்த குரலில் வாசித்துக் கொண்டு
இருப்பார். சுற்றிப் பத்துப்பேர் உட்கார்ந்து கொண்டு
அவர் வாசிப்பதைக் கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.

அவருக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியும். சுற்றி
உட்கார்ந்து கேட்பவர்களுக்கு படிக்கத் தெரியாது.
தினத்தந்தி வாசிப்பவர் என்ன எம் ஏ படித்தவரா?
இல்லை. அஞ்சாங்கிளாஸ் மட்டுமே படித்தவர்.

அஞ்சாங்கிளாஸ் படித்தவரால் அன்று தினத்தந்தியை
எல்லோருக்கும் படித்துக் காட்டும் அறிவு இருந்தது.

ஆனால் இன்று 2001ல் என்ன நிலைமை? ஒன்பதாம்
வகுப்பில் படிக்கும் மாணவனுக்கு தினத்தையை
எழுத்துக் கூட்டிக்கூட வாசிக்க முடியவில்லை.
இதுதானே அரசுப் பள்ளிகளின் நிலைமை! இதுதான்
லட்சணம் என்று பள்ளி ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

அன்று 1960ல் அஞ்சாங்கிளாஸ் படித்தவன் தினத்தந்தியை
அழகாக வாசித்தான். இன்று  ALL PASS முறையில்  .
ஒன்பதாம்  வகுப்பு வரை வந்த மூதேவிக்கு
தினத்தந்தியை வாசிக்க முடியவில்லை. இதற்கு ஒரு
காரணம் ALL PASS முறை.

தினத்தந்தியை வாசிக்க முடியாத மாணவர்களை
வைத்துக்கொண்டு தேர்ச்சி விகிதம் காட்ட வேண்டும்.
தேர்ச்சி விகிதம் குறைந்தால், மாவட்டக் கல்வி
அதிகாரியிடம் இருந்து ஆசிரியருக்கு மெமோ வரும்.

பையனைக் கண்டித்தாலோ ஒன்று தற்கொலை
செய்து கொண்டு விடுவான். அல்லது பெற்றோர்கள்
என்று ஒரு கூட்டமே வந்து ஆசிரியரைக் கைது செய்யச்
சொல்லிப் போராடும்.

எருதின் நோய் காக்கைக்குத் தெரியாது. ஆசிரியர்களின்
கஷ்டம் மற்றவர்களுக்குத் தெரியாது. கருத்து கந்தசாமிகள்
முற்போக்கு கருத்து என்று சொல்லிக் கொண்டு
தேர்வு வேண்டாம் என்று சொல்லி முற்போக்கு TRP
ரேட்டிங்கில் புள்ளிகளைப்  பெறுவார்கள்.

எனவே 5, 8 வகுப்புகளில் தேர்வு வேண்டுமா?
வேண்டாமா? ஆசிரியர்கள் முடிவு செய்யட்டும்.

எட்டாங்கிளாஸ் பெயிலாப் போனவனும்
SSLC பெயிலாப் போனவனும்
ஹோமியோபதி வைத்தியனும்
தேர்வு வேண்டாம் என்று கருத்துச் சொல்லும்
அருகதை அற்றவர்கள்.
***********************************************

உங்கள் சொந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு
தீர்மானிக்க முடியாது. தனிநபரை முன்னிலைப்
படுத்தி முடிவுகளை எடுக்கக் கூடாது.

அந்தக் காலத்தில் பெயிலாகப் போனால்
ஓராண்டு வீணாகி விடும். இன்று அப்படி இல்லை.
இரண்டே மாதத்தில் மறுதேர்வு (reexam) வைக்கிறார்கள்.
ஓராண்டு வீண் ஆவதில்லை.

இதில் என்னுடைய கருத்து, உங்களுடைய கருத்து
என்பதை விட, பாடம் எடுக்கும் ஆசிரிய சமுதாயம்
என்ன முடிவு எடுக்கிறது என்பதே முக்கியம்.
முடிவை அவர்கள் எடுக்கட்டும். 


ஆசிரியர் கண்டித்ததால் மாணவி தற்கொலை
என்ற செய்தி அபூர்வமான செய்தியே அல்ல.
ஆசிரியரைக் கைது செய் என்று போராட்டம்
சர்வ சாதாரணம்.


  


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக