திங்கள், 9 செப்டம்பர், 2019

நிறை மாறுவதில்லை (mass is constant).
எடை (weight) மட்டுமே மாறும் தன்மை உடையது.
ஒரு trick என்ற விதத்தில் இக்கணக்கு கொடுக்கப்
படவில்லை. mass, weight இரண்டுக்குமான வேறுபாட்டை
உணர்த்தவே இக்கணக்கு கொடுக்கப் பட்டுள்ளது.

விடையளித்த அனைவருக்கும் நன்றி.
சந்திரனின் ஈர்ப்பு விசை எவ்வளவு?
பூமியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கே
சந்திரனில் உள்ளது. எனவே ஒரு பொருளின் எடை
(weight) சந்திரனில் எவ்வளவு இருக்கும்?

பூமியில் எவ்வளவு இருக்குமோ அதில் ஆறில் ஒரு
பங்கு மட்டுமே இருக்கும். எனவே 66 கிகி எடையுள்ள
ஒருவரை சந்திரனில் நிறுத்தத்தால், அவரின்
எடை 11 கிகி மட்டுமே இருக்கும்,

விடையளித்த  அனைவருக்கும் நன்றி.

optical camera மூலம் படம் எடுக்க சிறிதளவேனும்
வெளிச்சம் வேண்டும். infrared cameraவுக்கு
வெளிச்சம் தேவை இல்லை. நிலவைச் சுற்றி வரும்
ஆர்பிட்டர் சூரிய வெளிச்சம் இருக்கும் பகலிலும்,
சூரிய வெளிச்சம் இல்லாத இரவிலும் நிலவைச்
சுற்றி வரும். அப்போது இரவிலும் படம் எடுக்க
வேண்டுமெனில் infrared camera தேவைப்படும்.
இதனால்தான் ஆர்பிட்டரில் infrared camera வைக்கப்
பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக