புதன், 25 செப்டம்பர், 2019

பத்து கோடி ரூபாயைப் பங்கு வைப்பது எப்படி?
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல்  மன்றம்
------------------------------------------------------------------------
ஒரு பணக்காரரிடம் இருந்து ஆறு பேர் ரூ 10 கோடியை
நன்கொடையாகப் பெற்றனர். அதை அவர்களுக்குள்
பின்வருமாறு பங்கு வைத்துக் கொள்ள விரும்பினார்.

முதலாமவருக்கு இருபதில் ஒரு பங்கு என்றும்
இரண்டாமவருக்கு முதல் நபருக்குக் கொடுத்ததை
விட ஒன்றரை மடங்கு அதிகம் கொடுப்பது என்றும்
முடிவானது.

மீதி இருப்போரில், 3ஆவது முதல்  5ஆவது நபர் வரை,
வரிசை மாறாமல் ஒவ்வொருவருக்கும் அவரின்
முந்திய நபருக்குக் கொடுத்ததில் ஒன்றரை மடங்கு தொகை
கொடுப்பதென்றும் முடிவானது. மீதி எவ்வளவு
இருக்கிறதோ அதை 6ஆவது நபருக்குக் கொடுப்பது
என்றும் முடிவானது.

அப்படியானால் ஆறாவது நபர் பெற்ற தொகை எவ்வளவு?

விடைகள் வரவேற்கப் படுகின்றன.
*************************************************** 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக