சபிக்கப் பட்டவர்களும்
ஆசீர்வதிக்கப் பட்டவர்களும்!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
பத்தாண்டுகளுக்கு முன்பு. 2009 மே மாதம். ஈழத்
தமிழர்களை சிங்கள அரசு கொன்று குவித்த நேரம்.
கலைஞர் டெல்லி சென்று திரும்பினார். தமது
பயணத்தை நியாயப் படுத்த ஒரு புறநானூற்றுச்
செய்யுளை மேற்கோள் காட்டினார்.
"ஓரில் நெய்தல் கறங்க" என்று தொடங்கும்
பக்குடுக்கை நன்கணியார் பாடல் அது.
கறங்க என்ற சொல்லின் பொருளை அறிய,
"கறங்குகின்ற விற்பிடித்த காலதூதர் கையிலே
உறங்குவாய் உறங்குவாய் இனிக்கிடந்து உறங்குவாய்"
என்ற கம்பரின் பாடலுக்குச் செல்ல வேண்டும்.
கலைஞரால் அந்தப் புறப்பாடல் பிரபலமானது. ஆனால்
கலைஞருக்குக் கெட்ட பெயர் அதிகமானது.
பத்தாண்டுகள் கழித்து இதே போன்ற ஒரு நிகழ்வு!
சென்ற மாதம் நிர்மலா சீதாராமன் அம்மையார்
மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
அப்போது " காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே"
என்ற புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டினார்.
நிர்மலா அம்மையாரின் புண்ணியத்தால் அந்தப்
பாடல் பிரபலம் ஆனது.
இந்தப்பாடலை விளக்கி நான் பேசிய ஏழு நிமிடப் பேச்சை
செய்தித் தமிழ் என்னும் நிறுவனம் வீடியோவாக
வெளியிட்டு உள்ளது. எனினும் சிந்தனைக் குஷ்டரோகிகள்
நிறைந்த தமிழ்நாட்டில் அதைப் பார்த்தோர் குறைவு.
தற்போது மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களின்
புண்ணியத்தில் ஒரு விஷயம் பிரபலம் ஆகியுள்ளது.
அதிர்ஷ்ட வசமாக, அவரால் பிரபலமான விஷயம்
இலக்கியம் அல்ல.மாறாக ஓர் அறிவியல் கோட்பாடு.
"ஐன்ஸ்டின் கண்டறிந்த ஈர்ப்புக் கோட்பாட்டுக்கு
(Einstein's gravity) அவர் காலத்தியக் கணிதம்
பயன்படவில்லை" என்று பேசியிருந்தார் பியூஷ் கோயல்.
அவ்வளவுதான். ஈர்ப்பு விசையைக் கண்டறிந்தவர்
நியூட்டன் அல்லவா என்றும் ஐன்ஸ்டினுக்கும் ஈர்ப்பு
விசைக்கும் என்ன ஐயா சம்பந்தம் என்றும்
360 டிகிரியில் இருந்தும் கேள்விகள் பியூஸ் கோயலை
நோக்கி வீசப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
பியூஸ் கோயல் சொன்னதில் தவறில்லை. ஐன்ஸ்டினின்
மகத்தான பங்களிப்பு அவரின் ஈர்ப்புக் கோட்பாடே
(gravity). இதை அறிந்திட ஐன்ஸ்டினின் பொதுச் சார்பியல்
கோட்பாட்டை (General theory of relativity) ஊன்றிப்
படிக்க வேண்டும்.
நியூட்டனின் ஈர்ப்புவிசைக் கோட்பாடு பத்தாங்கிளாஸ்
பாடம். அது காலாவதியும் ஆகி விட்டது. ஐன்ஸ்டினின்
ஈர்ப்புக் கோட்பாடே இன்றைய அறிவியல் ஏற்றுக்
கொண்டுள்ள கோட்பாடு.
ஆனால் ஐன்ஸ்டினின் ஈர்ப்புக் கோட்பாடு
(Einstein's gravity) பத்தாங்கிளாஸ் பாடம் அல்ல.
அது M.Sc இயற்பியலில் உள்ள பாடம். எனவே பொதுச்
சமூகத்திற்கு ஐன்ஸ்டினின் ஈர்ப்புக் கோட்பாடு
பற்றித் தெரியாது. இந்தியாவில்தான் இப்படி.
ஐரோப்பிய பொதுச்சமூகம் ஐன்ஸ்டினின்
ஈர்ப்புக் கோட்பாடு பற்றி நன்கறியும். என்ன செய்ய,
இந்தியா ஒரு அறிவியல் தற்குறித் தேசம்! இது
அம்மணமான ஊர்; இங்கு கோவணம் கட்டுகிறவன்
அயோக்கியன்.
அரசியல் ரீதியாக பியூஸ் கோயலை எவர்
வேண்டுமானாலும் அடித்துத் துவைக்கலாம்;
செருப்பைக் கழற்றி அடிக்கலாம்; கொலை கூடச்
செய்யலாம். எமக்கு அதில் அக்கறை இல்லை. ஆனால்
பியூஸ் கோயலைத் தாக்குவதாக நினைத்துக் கொண்டு,
ஐன்ஸ்டினுக்கும் ஈர்ப்புக் கோட்பாட்டுக்கும் என்ன
சம்பந்தம் என்று கேட்டால், அப்படிக் கேட்பது
கேட்பவனின் அறியாமையை வெளிப்படுத்தும்.
கேட்பவன் ஒரு தற்குறி என்ற உண்மையை வெளிப்படுத்தும்.
இதை நியூட்டன் அறிவியல் மன்றம் அனுமதிக்காது.
நியூட்டன் ஐன்ஸ்டின் இருவரின் ஈர்ப்புக் கோட்பாடு
பற்றி நேற்று ஒரு சிறிய கட்டுரை எழுதி வெளியிட்டு
உள்ளேன். படியுங்கள். படித்தாலும் எத்தனை
பேருக்குப் புரியும் என்பது கேள்விக்குறி.
இக்கட்டுரையுடன் ஒரு அற்புதமான படத்தை
இணைத்துள்ளேன். அது ஐன்ஸ்டினின் ஈர்ப்புக்
கோட்பாட்டை விளக்கும் சிறந்த படம். அதை
உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? புரிந்து
கொண்டால் நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்
(You are blessed)! புரிந்து கொள்ள முடியவில்லை
என்றால் நீங்கள் சபிக்கப் பட்டவர்கள் (You are cursed)!
******************************************************
பொதுச் சமூகத்தின் அறியாமைக்கு
ஒரு உதாரணம் பாருங்கள்!
இது ஒருவரின் பதிவு
-----------------------------------------------------------------

/////அமைச்சர் பியூஸ் கோயலின்
ஐன்ஸ்டீன் காமெடி வைரலாகி உலக கவனம் பெற்றுவிட்டது..

டெல்லியில் உளறியதால்
அமைச்சர் கோயல் உலகபுகழ் பெற்றுவிட்ட்டார்..
புவிஈர்ப்பு விசையினை கண்டறிந்தது ஐன்ஸ்டின் என
அவர் சொன்னது உலக கலாய்ப்பாகிவிட்டது//////..
---------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக