வெள்ளி, 15 ஏப்ரல், 2022

 

மார்க்சிஸ்ட் கடசியின் உறுப்பினர் எண்ணிக்கை 10 லட்சமா?

---------------------------------------------------------

CPIM கட்சியின் 23வது அகில இந்திய காங்கிரஸ் சமயத்தில் அக்கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளனர். 2018 மற்றும் 2021க்குரிய ஒப்பீடு தரப்பட்டுள்ளது.

இந்த மூன்று ஆண்டுகளில் எங்கெல்லாம் கூடுதலானது, எங்கெல்லாம் குறைந்தது என்பதை காணமுடியும்.
அந்தமான் 147 - 163 ஆக, பீகார் 19233- 19400, டெல்லி 2095- 2213, கோவாவில் புதிதாக 2021ல் 45, கேரளாவில் 4,89,086 - 5,27,174 ஆக, மகராஷ்ட்ராவில் 12480 - 12807 ஆக, மணிப்பூரில் 431- 451, பஞ்சாபில் 8000- 8389 ஆக, தமிழகத்தில் 90474 - 93982 ஆக, ராஜஸ்தான் 5211-5218 ஆக உத்தராகண்ட் 1416-1451 ஆக உயர்ந்துள்ளன. 11 மாநிலங்களில் கூடியுள்ளதைப் பார்க்கிறோம்.
ஆந்திராவில் 25892 லிருந்து 23130 , அஸ்ஸாமில் 12454 - 11644, சட்டிஸ்கர் 1506-1344 ஆக, குஜராத் 3749-3724 ஆக, ஹரியானா 2521- 2191, ஹிமாச்சல் 5348- 5185, கர்நாடகா 9000- 8052, மபி 3063-2608, ஒரிஸ்ஸா 4361- 3647, திரிபுரா 73678- 50612 ஆக, தெலங்கானா 35560- 32177 ஆக, உபி 5678- 5368, மே வ 1,92454 - 1,60,827. செண்டர் 93 -90 என 14 இடங்களில் குறைந்துள்ளதைக் காணலாம்.
அனைத்திந்திய உறுப்பினர் 2018ல் 10,07,903 என்றால் 2021ல் 9,85,757 எனக் காட்டியுள்ளனர். இதில் கேரளா , மே வ , திரிபுரா, தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்கள் 2021 உறுப்பினர்கள் 832595- அதாவது 84 சதத்தை 2021ல் தந்துள்ளனர். ஆந்திரா தெலங்கான சேர்த்துப் பார்த்தால் உறுப்பினர் 887902. அதாவது 6 மாநிலங்களில் உறுப்பினர்களில் 90 சதம் வருகின்றனர்.
இடதுசாரிகளுக்கு இந்தியா பெரும் சவாலை தருகிறது என்பது எதார்த்தமான உண்மையாக இருந்தாலும் வாய்ப்புகளுக்கான கதவுகளும் திறக்காமல் போய்விடாது என்கிற அரசியல் சூழலும் நிலவாமல் இல்லை. ஆட்சியிலிருந்தால் அங்கு உறுப்பினர் எண்ணிக்கை நம்பிக்கையுடன் வளர்வதை கேரளா காட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக