சனி, 9 ஏப்ரல், 2022

ஜாவாவும் தமிழ்ப் பண்டிட்டுகளும்!   
கணினித் தமிழ் வல்லுநர்களிடம் 
ஆற்றுப் படுத்துகிறேன்! 
-------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------
1990களில் ஜாவா மிகவும் பிரசித்தம்!
யாரைப் பார்த்தாலும் ஜாவா படிக்கிறேன் 
என்றும் படிக்க வேண்டும் என்றும் சொல்லிக் 
கொண்டு கிடந்த காலம்.

ஜாவா என்றால் என்ன? தமிழ்ப் பண்டிட் 
தற்குறிகளுக்குத் தெரியாது. அவர்களுக்கு 
என்னதான் தெரியும்?

ஜாவா என்பது ஒரு கணினி PROGRAMMING 
LANGUAGE. இன்று எவ்வளவோ programming 
languages வந்து விட்டன. Python தெரியுமா?

என்றாலும் ஜாவாவுக்கு இன்னமும் மவுசு 
இருக்கிறது. 

பெற்றோர்களே,
உங்கள் தலைமுறை வேறு. அப்போது கணினி 
பிரபலம் ஆகவில்லை. எனவே உங்களுக்கு கணினி 
அறிவு பெற வாய்ப்பில்லை. உங்கள் பிள்ளைகளையும் 
உங்களைப்போல் கணினி அறிவு இல்லாதவர்களாக 
வளர்க்காதீர்கள்.

உங்கள் பையனோ பெண்ணோ பெரிதாகப் 
படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 
ப்ளஸ் டூவில் கம்பியூட்டர் சயன்ஸ் படித்திருந்தால் 
போதும். தாராளமாக ஜாவா படிக்கலாம்.

ஜாவா படியுங்கள்!
C படியுங்கள்!
C++ படியுங்கள்!
Python படியுங்கள்!

திமுககாரனிடம் யோசனை கேட்காதீர்கள்.
அவன் படிக்கக் கூடாது என்று சொல்லுவான்.
உங்கள் பையன் படித்து முன்னேறி விட்டால் 
உதயநிதிக்குப் போஸ்டர் ஓட்ட ஆள் 
கிடைப்பானா? 

உங்கள் பையனுக்கு இங்கிலீஷ் வராதே என்று 
நீங்கள் கவலைப் படலாம். கவலைப் படாதீர்கள்!
ஜாவா படிக்க பெரும் ஆங்கிலப் புலமையெல்லாம் 
தேவையில்லை.

இன்று நிறையப்பேர் ஜாவாவை  தமிழில் கற்றுக் 
கொடுக்கிறார்கள். நிறைய யூடியூப் சானல்கள் 
வந்துள்ளன. அவற்றில் இளவயது ஆண்களும் 
பெண்களும் (30,35 வயதுக்குள் இருக்கும்)
ஜாவாவை தமிழில் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

இதெல்லாம் அற்புதமான வாய்ப்பு. இப்போது 
69 வயதாகும் எனக்கு, என் இளமைக் காலத்தில் 
இந்த வாய்ப்பெல்லாம் இல்லை.   

இன்று வாய்ப்புகள் அதிகம். பயன்படுத்துவோர் 
குறைவு. Logic First Tamil என்ற யூடியூப் சானலைப் 
பாருங்கள். அதில் சந்தாதாரர் ஆகுங்கள்.

எனது நண்பர் வாசு ராமதுரை பைதான் மொழியை 
தமிழில் சொல்லிக் கொடுக்கிறார். அவரிடம் 
கற்றுக் கொள்ளுங்கள். 

தமிழ் தமிழ் என்று போலிக்கூச்சல் போடும் 
கயவாளிப் பயல்களைப் புறக்கணியுங்கள்.
பெ மணியரசன் சீமான் இன்ன பிற போலிகளைப் 
புறக்கணியுங்கள்.

அமைதியாக ஆரவாரம் இல்லாமல் தமிழுக்குத் 
தொண்டு செய்து வரும் தமிழ் வல்லுனர்களிடம் 
உங்களை ஆற்றுப் படுத்துகிறேன்.

தமிழக அரசு கூத்தாடிகளுக்கு கலைமாமணி 
விருது கொடுத்து மக்களின் வரிப்பணத்தை 
வீணடிக்கும். இழிந்த தமிழ்ப் பண்டிட்களுக்கு 
இரண்டு லட்ச ரூபாயம் இரண்டு சவரன் மோதிரமும் 
மக்களின் வரிப்பணத்தை வீணடித்து விருது வழங்கும்.

செந்தலை கவுதமன் என்று ஒரு தமிழ்ப்பண்டிட்டு.
இவருக்கு பாவேந்தர் விருது! மக்களின் வரிப்பணம் 
ரூ இரண்டு லட்சத்தில் மற்றும் ஒரு சவரன் தங்கத்தில் 
விருது.

இதைவிட, தமிழில் சதுரங்க சானல் நடத்தும் 
வெங்கடேஷ் விருது பெற்றார் என்ற நிலை 
ஏற்படும்போதுதான் தமிழ் வளரும்.

தமிழ்ப் பண்டிட்டுக்கு விருது என்பதை விட,
தமிழில் பைத்தான் மொழி சொல்லித்தரும் 
வாசுவுக்கு விருது என்ற நிலை வரும்போதுதான் 
தமிழ் வளரும்.

உங்கள் பிள்ளைகளை ஜாவா படிக்க வையுங்கள்.
இந்தக் கட்டுரையோடு ஒரு படத்தை (தேநீர்க் 
கோப்பையில் சூடான தேநீர் ஆவி பறக்க)
வெளியிட்டுள்ளேன். அது ஜாவாவைக் குறிக்கும்.

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி 
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ 
சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்.      
**************************************************
       

  
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக