சனி, 16 ஏப்ரல், 2022

 பின்நவீனத்துவ உருவாக்கத்தில் தமிழ்த்தாய்!

---------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------------

மாறும் என்கிற விதியைத் தவிர அனைத்தும் மாறும்.

.....காரல் மார்க்ஸ்............. 


மொழியைத் தாயாக உருவகிப்பது இனக்குழுச் 

சமூக காலந்தொட்டே தமிழரிடம் உள்ள 

பழக்கம் ஆகும். இனக்குழுச் சமூக

காலத்தில் தமிழ்த்தாயின் உருவகம் 

அக்காலத்தைப் பிரதிபலித்தது.


பின்னர் நிலவுடைமைச் சமூக காலத்தில்

தமிழ்த்தாயின் உருவகம் சிறிது 

மாற்றங்களுடன் அக்காலச் சமூகத்தைப் 

பிரதிபலித்தது. ரவிவர்மா பாணி 

ஓவியமாகும் அது. இதைத்தான் இன்றளவும் 

நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம்.


அதன் பின்னர் நவீன காலம் அதாவது 

முதலாளியத்தின் காலம் வந்தது. நவீன 

ஓவியங்கள் வந்தன. ஆனால் தமிழ்த்தாயின் 

நவீன உருவகம் வரவில்லை. வந்திருக்கலாம்.

தமிழ்ப் பண்டிட்டு முட்டாள்களின் கையில் 

சிக்கிக்கொண்டு தமிழ் நோயுற்றுள்ளதால் 

நவீன ஓவிய பாணியில் தமிழ்த்தாயின் 

உருவகம் எழுதப்படவில்லை.


அதன் பிறகு பின்நவீனத்துவம் ஒரு 

கொள்ளை நோயைப்போல உலகெங்கும் 

பரவியது.இரண்டாம் உலகப்போருக்குப் 

பின் பரவிய கொள்ளை நோயே 

பின்நவீனத்துவம். இந்தியாவிலும் 

1980களில் பின்நவீனத்துவம் பரவியது.


தமிழ்த்தாயின் தற்போதைய  உருவகம்

(தலைவிரிகோல உருவகம்) பின்நவீனத்துவ 

உருவகம் ஆகும்.


தமிழ்ச் சமூகம் இதை உணர வேண்டும். 

துரதிருஷ்ட வசமாக பின்நவீனத்துவம் 

பற்றிய அறியாமை காரணமாக 

தமிழ்ச் சமூகம்  தூற்றப்பட வேண்டிய 

பின்நவீனத்துவக் குப்பையை

போற்றிக்கொண்டு நிற்கிறது. இது இழிவைச்

சுமந்து கொண்டு நிற்பதாகும்.


அனைத்தும் மாறும் தன்மை உடையவையே.

எனினும் பின்நவீனத்துவ மாற்றம் என்பது 

degeneration ஆகும். பின்நவீனத்துவ 

மாற்றம் என்பது வளர்ச்சிக்கானதல்ல. 

----------------------------------------------------------               

பின்குறிப்பு;

ரவிவர்மா பாணி ஓவியத்தை விரும்பாதவர்கள் 

நவீன ஓவிய பாணியில் (modern art) தமிழ்த்தாயை 

வரைந்து கொள்ளலாம். பிக்காஸோவின் 

கியூபிச பாணி ஓவியமாக தமிழ்த்தாயை 

வரையலாம். 


A straight line is more beautiful than a curve என்பதுதானே 

பிக்காஸோவின் கியூபிசம்!

-----------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக