ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

மீத்தேன் திட்ட எதிர்ப்புக்குழுவுக்கு ஒரு கேள்வி!
மீத்தன் திட்ட எதிர்ப்புக்கான அறிவியல் 
காரணங்கள் உள்ளனவா?
----------------------------------------------------------
ONGC நிறுவனத்தின் SC/ST ஊழியர்கள் 
நலச்சங்கத்தின் சார்பில், அண்மையில் 
பாண்டிச்சேரி மாநிலம் நிரவியில் நலத்திட்ட 
உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

ரூ 42 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை    
ONGC நிர்வாகம் வழங்கியது. தொல் திருமாவளவன்
அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று
நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

CSR எனப்படும் Corporate Social Responsibilityயை 
வெளிப்படுத்தும் விதமாக ONGC நிர்வாகம் 
நலத்திட்ட உதவிகளை வழங்கியது.

இவ்விழாவில் பேசிய திருமாவளவன் 
பொதுத்துறை நிறுவனமான ONGCயின் 
பாத்திரத்தைச் சிறப்பித்தார். ONGCயின் 
செயல்பாடுகளுக்கு ஒத்துழைக்கப் போவதாக 
அறிவித்தார்.

மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர்கள் ONGCக்கு 
எதிராக எந்தவொரு அறிவியல் காரணத்தையும் 
முன்வைக்கவில்லை என்று திருமாவளவன்
சாடினார். மீத்தேன் திட்ட எதிர்ப்பு என்பது 
அறிவியலற்றது (unscientific) என்றார் திருமாவளவன்.

திருமாவளவன் அவர்கள் கூறியது அனைத்தும் 
சரியே என்று நியூட்டன் அறிவியல் மன்றம் 
ஏற்கிறது.  
 
மீத்தேன் திட்ட எதிர்ப்புக்குழு என்ற பெயரில் 
ஒரு குழு பேராசிரியர் திரு த ஜெயராமன் அவர்கள்
தலைமையில் இயங்கி வருகிறது. திரு ஜெயராமன் 
அவர்கள் அறிவியல் பேராசிரியர் அல்லர்; அறிவியல் 
கற்றவரும்  அல்லர். எனினும் அதில் குறையொன்றும்
இல்லை. எப்போது? தமது குழுவில் ஒன்றிரண்டு 
அறிவியல் அறிஞர்களை ஆலோசகர்களாகச் 
சேர்த்திருந்தால், குறையில்லாத குழுவாக தமது 
குழுவை ஜெயராமன் அவர்கள் அமைத்திருக்க 
முடியும்.

ஆனால் பேராசிரியர் ஜெயராமன் குழுவின் அறிவியல் 
ஆலோசகர்கள் என்று எவர் ஒருவரும் இதுவரை 
பொதுவெளியில் அறிவிக்கப் படவில்லை. இதை 
நான் இரண்டு மூலர் ஆண்டுகளுக்கு முன்பே 
பொதுவெளியில் கேட்டேன். ஆனால் பதில் இல்லை.

ஆக, ஜெயராமன் அவர்கள் தலைமையில் இயங்கும் 
மீத்தேன்  திட்ட எதிர்ப்புக்குழு என்பது அறிவியலற்ற 
குழு என்ற உண்மை அனைவருக்கும் தெரிய வருகிறது.

1995ல் நரசிம்மராவ் காலந்தொட்டு இந்தியாவில் 
LPG கொள்கைகள் செயலாக்கப்பட்டு வருகின்றன.
மன்மோகன் சிங்கும் ப சிதம்பரமும் LPGயின் 
ஜாம்பவான்கள்! பொதுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட 
அத்தனை துறைகளிலும் எண்ணெய் எடுத்தல் 
துறப்பணப் பணிகள் உட்பட அனைத்திலும் 
ரிலையன்சை அனுமதித்தார் மன்மோகன்சிங்.

இந்தியா முழுவதிலும் உள்ள பொதுத்துறை 
நிறுவனங்களுக்கு எதிராக, குறிப்பாக BSNL,
BHEL, Coal India, ONGC போன்ற பொதுத்துறை 
நிறுவனங்களுக்கு எதிராக, அம்பானி, சுனில் மிட்டல் 
போன்ற கார்பொரேட் திமிங்கலங்கள் காசு 
கொடுத்து பொய்ப்பிரச்சாரங்களைத் திட்டமிட்டு 
நடத்தி வருகின்றன.

போலி முற்போக்கு மற்றும் போலி இடதுசாரி 
வேடம் தரித்த பலரும் அம்பானி, சுனில் மிட்டல்களின்
கைக்கூலிகளாக இருந்து கொண்டு, அவர்கள் 
தரும் எச்சில் காசில் வயிறு வளர்த்துக் கொண்டு 
பொதுத்துறை  நிறுவனங்களுக்கு எதிராக 
பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இது 
உண்மையை அறிய விடாமல் மக்களைத் தடுத்து 
அவர்களை பொய்மையில் மூழ்கடிக்கிறது.

மக்களுக்கு உண்மை சென்று சேர வேண்டும் என்ற 
நோக்கில்,  மீத்தேன் திட்ட எதிர்ப்புக்குழுவின் தலைவர் 
திரு பேராசிரியர் த ஜெயராமன் அவர்களிடம் 
நமது வேண்டுகோளை முன்வைக்கிறோம்.
அருள்கூர்ந்து மீத்தேன் எதிர்ப்புக்கான
அறிவியல் காரணங்கள் இருந்தால்,
அவற்றை மதிப்புக்குரிய திருமாவளவன் எம்பி
அவர்களிடம் கூறுங்கள். அப்படியே அவற்றைப் 
பொதுவெளியில் வையுங்கள். இந்த வேண்டுகோளை 
ஏற்பீர்கள் என்று நம்ப விரும்புகிறோம்.

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே,
சொந்த நாட்டிலே!

தோழமையுள்ள 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
தலைவர், நியூட்டன் அறிவியல் மன்றம்,
சென்னை.
******************************************* 

             

    
            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக