வியாழன், 28 ஏப்ரல், 2022

மதவாதமும் போலி இடதுசாரிகளும்!
உயர்சாதியினருக்கு மட்டுமே அரசுப் பதவிகள்!
2024 தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற 
கட்டுரையின் முன்னுரை (1)
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------
ஆண்டு 2004ல் தேர்தல். வாஜ்பாய் ஐந்தாண்டு கால 
ஆட்சியை முடித்து விட்டார். இந்தியா ஒளிர்கிறது 
என்று பிரச்சாரம் செய்தார். அது எடுபடவில்லை.
2004ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சிக்கு 
வந்தது. டாக்டர் மன்மோகன்சிங் பிரதமரானார்.  
பாஜக எதிர்க்கட்சி ஆனது; அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி

காங்கிரசின் ஆட்சி கூட்டணி ஆட்சியாகும். அது UPA-1 
என்று (தமிழில் ஐமுகூ-1) அழைக்கப்பட்டது. அந்த 
ஆட்சியை அமைத்த காங்கிரஸ் மக்களவைத் தேர்தலில் 
எத்தனை இடங்களைப் பெற்றிருந்தது என்பது மிகவும் 
முக்கியமானது.

மக்களவையில் 543 இடங்கள் தேர்தல் மூலம் நிரப்பப்படும்.
இந்த 543ல் பெரும்பான்மை என்பது 272 ஆகும். காங்கிரஸ் 
பெற்றிருந்த இடங்கள் 145 மட்டுமே. இது பெரும்பான்மைக்கு 
127 இடங்கள் குறைவு. 

ஆட்சியை இழந்த பாஜக அப்படியொன்றும் மிகக் 
குறைவான இடங்களைப் பெற்றிருக்கவில்லை. அது 
138 இடங்களைப் பெற்று  இருந்தது. காங்கிரசுக்கும் 
அதற்கும் கட்சி ரீதியாகப் பார்த்தால் வேறுபாடு 
வெறும் 7 இடங்கள்தான். 

CPI, CPM, திமுக உள்ளிட்ட பல கட்சிகள், காலமெல்லாம் 
காங்கிரசை எதிர்த்து வந்த பல கட்சிகள்,  காங்கிரசுடன் 
கூட்டணி கண்டு, குறைந்தபட்ச வேலைத்திட்டம் 
(CMP = Common Minimum Programme) என்னும் 
பித்தலாட்டத்துடன் பதவிக் கனிகளைச் சுவைத்தன.

காங்கிரசை எதிர்ப்பதே கம்யூனிஸ்ட் கட்சிகளின்
அரசியல். அவற்றின் கட்சித் திட்டப்படியும்
அதுதான் அவர்களின் வேலை. ஆனால் இந்தியப் 
பெருமுதலாளிகளின் பிரதிநிதியான காங்கிரசை
வரிந்து கட்டிக்கொண்டு ஆதரித்தார்கள் போலிக் 
கம்யூனிஸ்டுகளான CPI, CPM கட்சிகள். 

அப்போது மக்களவையில் (2004ல்) மார்க்சிஸ்ட் கட்சிக்கு
43 இடங்கள் இருந்தன. CPI கட்சிக்கு 10 இடங்கள்
இருந்தன.CPI, CPM இவ்விரு கட்சிகளுக்கும் சேர்ந்து 
அன்று 53 இடங்கள் இருந்தன. இந்த 53 என்பது ஒரு 
சாதாரண எண்ணிக்கை அல்ல. இது உண்மையிலேயே 
மகத்தான எண்ணிக்கை ஆகும். இவ்விரு கட்சிகளும்
அப்போது காங்கிரசை வலியச் சென்று ஆதரித்ததால்,
காங்கிரசால் எளிதாக ஆட்சி அமைக்க முடிந்தது.  

பாஜகவின் மதவாதத்தை எதிர்க்கவே நாங்கள் 
காங்கிரசை ஆதரித்தோம் என்ற இழிந்த பொய்யை 
போலிக் கம்யூனிஸ்டுகள் அன்று சொல்லி மக்களை 
ஏமாற்றி வந்தனர். இவர்களின் கூட்டாளியான  
திமுகவைப் பாருங்கள். முந்திய ஆட்சியான
பாஜகவின் ஆட்சியில் (1999-2004) பங்கெடுத்து 
அமைச்சர் பதவிகளைப் பெற்றது திமுக. அதாவது 
மதவாத பாஜகவின் ஆட்சியில், அதன் பிரிக்க முடியாத 
பங்காளியாக திமுக இருந்தது. 2004 தேர்தலுக்கு நான்கு 
மாதங்கள் முன்னதாக, டிசம்பர் 2003ல் வாஜ்பாய் 
அமைச்சரவையில் இருந்து விலகியது திமுக. இஸ்லாமிய 
சிறுபான்மை வாக்குவங்கியை இழந்து விடக்கூடாது 
என்ற எச்சரிக்கை உணர்வின் காரணமாகவே 
வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்து விலகியது திமுக.

திமுகவின் இழிந்த சந்தர்ப்பவாதத்தைப் பாருங்கள்.
1999-2004ல் மதவாத பாஜகவின் ஆட்சிக்கு ஆதரவு.  
2004ல் மதவாதத்தை "எதிர்க்கும்" காங்கிரசுக்கு 
ஆதரவு; மன்மோகன்சிங்கின் அமைச்சரவையில் 
பங்கேற்பு! கருணாநிதி எவ்வளவு பெரிய அத்வைதி 
பாருங்கள்! மதவாத வாஜ்பாய், மதவாத எதிர்ப்பு 
மன்மோகன் இருவருக்கும் ஆதரவளித்து,இருவரிடமும் 
அமைச்சர் பதவிகளைப் பெற்று அனுபவித்து
ஆதிசங்கரரை மிஞ்சிய அத்வைதியாக மாறினார் 
கருணாநிதி!   .    

மார்க்சிஸ்டுகளைப் பாருங்கள். சோம்நாத் சட்டர்ஜி 
என்ற பிராமண சிரேஷ்டரை 2004ல் அமைக்கப்பட்ட 
மக்களவையின் சபாநாயகராக ஆக்கி காங்கிரசின் 
பல்லக்குத் தூக்கிகள் ஆனார்கள். மார்க்சிஸ்ட் கட்சிக்கு
அதிகாரம் மிக்க ஒரு உயர்ந்த பதவி கிடைக்கும்போது 
அதை ஒரு பிராமணருக்குத்தான் தந்தது அக்கட்சி.
ஒரு தலித்துக்கு, தலித் வேண்டாம், ஒரு OBCக்காவது 
அந்த சபாநாயகர் பதவியை வழங்க மனம் வந்ததா 
மார்க்சிஸ்ட் கட்சிக்கு? No never.

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வாய்ப்பு வந்தது. இந்தியாவின் 
ஜனாதிபதியாக ஒரு தலித்தைக் கொண்டு வரும் வாய்ப்பு 
அது. அந்த வாய்ப்பில் காங்கிரஸானது கே ஆர் நாராயணன் 
என்ற தலித்தை, அதுவும் ஒரு தென்னிந்தியரை         
இந்திய ஜனாதிபதியாகக் கொண்டு வந்தது. 

பாஜக கட்சிக்கு இந்திய ஜனாதிபதியை உண்டாக்கும் 
வாய்ப்பு இருமுறை கிடைத்தது. அப்படிக் கிடைத்தபோது, 
முதல் முறையில் அப்துல் கலாம் என்ற முஸ்லிமையும் 
இரண்டாம் முறையில் ராம்நாத் கோவிந்த் என்ற 
தலித்தையும்  ஜனாதிபதி ஆக்கியது.

இந்திய அரசியலில் இதுவரை தலித்துகளுக்கு 
அதிகாரம்  அளித்த கட்சிகள் இரண்டே இரண்டுதான். 
ஒன்று, காங்கிரஸ்; இன்னொன்று பாஜக! மற்றக்  கட்சிகள் 
அனைத்தும் தங்களின் வாரிசுகளுக்கும் சுயசாதி 
ஆட்களுக்கும் பதவியைப் பெற்றுத் தரும் கட்சிகளே.
இவற்றில் பல வாரிசு அரசியல் கட்சிகள் ஆகும்.
அதாவது நவீன வருணாசிரமக் கட்சிகள் ஆகும். 
 
தலித்துகளுக்கு நாட்டின் அதியுயர் பதவியை வழங்கிய,
தலித்துகளுக்கு அதிகாரம் அளித்த காங்கிரஸ் மற்றும்
பாஜக கட்சிகளை நான் மனசாரப் பாராட்டுகிறேன்.
இரு கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு தலித்துகளுக்கு 
அதிகாரம் அளிப்பதில் தங்களின் ஆட்சிக்காலத்தில் 
செயல்பட்டு வந்தவை என்பதை எவராலும் மறுக்க இயலாது.

இதற்காக சோனியா காந்தியின் கால்களிலும் மோடியின் 
கால்களிலும் விழுந்து வணங்குகிறேன். இன்றைய 
நிலவரம் என்னவெனில், தலித்துகளுக்கு அதிகாரம் 
அளிப்பதில் பாஜக வேறெந்தக் கட்சியையும் விட
முன்னணியில் இருக்கிறது. தமிழ்நாட்டில் திரு எல் முருகன் 
என்னும் அருந்ததியர் எப்படி மத்தியப் பிரதேசத்திற்குக் 
கொண்டு செல்லப்பட்டு எம்பியாகவும் அமைச்சராகவும் 
ஆக்கப் பட்டார் என்பதைச் சிந்திக்க வேண்டும்..     

இதையெல்லாம் சிந்தித்ததால்தான் இளையராஜா மோடியை 
டாக்டர் அம்பேத்காருடன் ஒப்பிட்டார். தலித்துகளுக்கு 
அதிகாரம் அளித்தல் என்பதுதான் டாக்டர் அம்பேத்காரின்
தலையாய லட்ச்சியம். அதை இன்று வீரியமாகவும் 
தீவிரமாகவும் நடைமுறைப் படுத்தி வருபவர் 
மோடிதானே தவிர வேறு எவரும் அல்லர். இந்த 
உண்மையைப் பொது வெளியில் சொன்ன இளையராஜா 
மீது பெரியாரியக்  கயவர்கள் மிருக வெறித் தாக்குதலை 
நடத்தி வருகின்றனர். இளையராஜா மீதான தாக்குதல் 
என்பது தீண்டாமைக் கொடுமை! வன்கொடுமை!
மார்க்சிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணியானது 
தோழர் வசுமித்ர மீது வன்கொடுமைச் சட்டத்தைக்கூறி 
பொய்ப்புகார் கொடுத்தது. அது ஈ வி கே எஸ் இளங்கோவன் 
மீது  புகார் கொடுக்குமா?    

ஆனால் மார்க்சிட் கட்சி அப்படியல்ல. அது சாதிவெறி 
பிடித்த பாப்பாரத் தாயோளிகளின் கட்சி. நாம சூத்திரர்கள் 
என்னும் மேற்குவங்க தலித்துகள் முப்பதாயிரம் (30,000)
பேரைக் கொன்றவன் ஜோதிபாசு. சிங்கூரில் டாடாவுக்காக 
ஏழை எளிய மக்களை ஒடுக்கி, பெண்களைக் 
கற்பழித்தவன் புத்ததேவ் பட்டாச்சார்யா!

நக்சல்பாரிக் கட்சிகளிலும் பார்ப்பன ஆதிக்கம்தான்.
சவுண்டிப் பாப்பான் மருதையன், சவுண்டிப் பாப்பான் 
வீராச்சாமி இந்த இரண்டு பேரும் மகஇக என்று 
அறியப்படும் CPI ML SOC என்னும் கட்சியை
அழித்தவர்கள்; அழித்துக் கொண்டிருப்பவர்கள்.
    
CPI சாதியவாதிகளுக்கு மத்திய அமைச்சர்களை 
நியமிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1996-98ல் 
முதலில் தேவ கெளடா அமைச்சரவையிலும்,
பின்னர் ஐ கே குஜ்ரால் அமைச்சரவையிலும்   
இரண்டு பேர் CPI அமைச்சர்களாக இருந்தனர். 
ஒருவர் இந்திரஜித் குப்தா என்னும் பனியா. 
இன்னொருவர் சதுரானந்த் மிஸ்ரா என்னும் 
பார்ப்பனர். தலித்துக்கோ OBCக்கோ CPI, CPM
கட்சிகளில் அரசு அதிகாரம் மிக்க உயர் பதவிகள் 
ஒருபோதும் வழங்கப்படாது.
  *************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக