தமிழ்ப் புத்தாண்டு தையா சித்திரையா?
வானியல் அறிவு ஏதுமற்ற தற்குறிகளான
தமிழ்ப் பண்டிட்டுகளால் புத்தாண்டை
நிர்ணயிக்க முடியுமா?
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில்தான் என்று
தமிழ் மக்கள் உறுதியோடு இருக்கிறார்கள்.
பின் யாருக்குச் சந்தேகம் இருக்கிறது என்றால்,
குட்டி முதலாளித்துவத்திற்குத்தான் சந்தேகம்
இருக்கிறது. தையா சித்திரையா என்று குட்டி
முதலாளியத்தின் ஒரு சிறிய பகுதி ஊசலாடிக்
கொண்டு இருக்கிறது.
எப்படிப் பார்த்தாலும் எவ்வளவு குறைத்து
மதிப்பிட்டாலும் தமிழனின் புத்தாண்டுக்கு
வயது குறைந்தது 2500 ஆண்டுகள் இருக்கும்.
ஆம், 2500 ஆண்டுகளுக்கு முந்தியது தமிழனின்
புத்தாண்டு. தமிழனின் புத்தாண்டு மட்டுமல்ல
இந்தியாவின் பல பகுதிகளில் கொண்டாடப்படும்
புத்தாண்டுக்கு வயது 2500 இருக்கும்.
புத்தாண்டு உருவாக்கம் என்பது 2500ஆண்டுகளுக்கு
முந்திய தமிழனின், இந்தியனின் வானியல் அறிவைச்
சார்ந்தது.
புத்தாண்டைத் தீர்மானித்தது யார்? உருவாக்கியது
யார்? வானியல் அறிவு படைத்த அன்றைய
மக்கள்! வானியல் அறிவற்ற யார் எவராலும்
ஒரு புத்தாண்டை உருவாக்க இயலாது.
தையில் புத்தாண்டு என்று சொல்பவர்கள் யார்?
மறைமலை அடிகள் சொன்னார்! பெருஞ்சித்திரனார்
சொன்னார்! தேவநேயப் பாவாணர் சொன்னார்!
பாரதிதாசன் சொன்னார்! கருணாநிதி சொன்னார்!
என்றெல்லாம் சொல்கிறார்கள்.
இவர்கள் யாரும் வானியல் அறிஞர்கள் அல்லர்.
இவர்கள் வெறும் தமிழ்ப் பண்டிட்டுகள்! இவர்கள்
வானியல் அறிவு ஏதுமற்ற தற்குறிகள்!
பாரதிதாசனுக்கோ கருணாநிதிக்கோ
a plus b whole squared என்றால் என்ன என்று
தெரியுமா? தெரியாது!
கணித அறிவோ வானியல் அறிவோ அணுவளவு
கூட இல்லாத மறைமலை அடிகளோ அல்லது
அவரைப் போன்ற இழிந்த தமிழ்ப் பண்டிட்டுகளோ
புத்தாண்டை நிர்ணயம் செய்ய இயலாது.
பின் புத்தாண்டை யார் நிர்ணயம் செய்ய இயலும்?
பார்ப்போம்.
இந்தியாவில் இரண்டு பெரும் அறிவியல் அமைப்புகள்
உள்ளன. ஒன்று: இஸ்ரோ, இரண்டு: IMD.
IMD என்றால் Indian Metrological Department ஆகும்.
இவை இரண்டும் விண்ணை அளப்பவை.
IMD எனப்படும் வானியல் நிறுவனத்தின் தமிழ்ப்
பிராந்திய அமைப்பு (Regional Metrological Centre)
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ளது.
விண்ணின் வளிமண்டலப் பகுதியை ஆய்ந்து
பருவநிலை மாற்றம், காலநிலை மாற்றம், புயல்,
மழை உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்ந்து
மக்களுக்கு அறிவிக்கும் வானியல் மையமும்,
விண்ணில் செயற்கைக்கோள்களைச் செலுத்தி
கோள்களின் இயக்கத்தை ஆராயும் இஸ்ரோ
நிறுவனமும், 2500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழனின்
புத்தாண்டு என்னவாக இருந்தது என்று ஆராய்ந்து
சொல்லத் தகுதியான நிறுவனங்கள்.
தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?
இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் தலைமையில்
ஒரு குழுவை அமைக்க வேண்டும். IMDயில்
பணியாற்றி ஒய்வு பெற்றுள்ள டாக்டர் ரமணன்
அக்குழுவில் உறுப்பினராக இடம் பெற வேண்டும்.
மேலும் விண்ணை அளந்த மயில்சாமி அண்ணாத்துரை
போன்ற வானியல் அறிஞர்களை அக்குழுவில் இடம்பெறச்
செய்ய வேண்டும்.
இவ்வாறு தேவையான அளவு IMD மற்றும் இஸ்ரோ
நிறுவனங்களில் பணியாற்றிய வானியல்
அறிஞர்களைகே கொண்டு ஒரு குழு அமைக்க
வேண்டும். அக்குழுவே தமிழனின் புத்தாண்டு
எது என்று ஆராய்ந்து முடிவு சொல்லத் தகுதியான குழு.
இவ்வாறு தமிழக அரசு வானியல் அறிஞர்களைக்
கொண்ட ஒரு குழுவை அமைத்து, தமிழனின்
புத்தாண்டு எது என்று கண்டறிந்து சொல்லும்
பொறுப்பினை அக்குழுவுக்கு அளித்து, அவர்கள்
ஆய்ந்து கூறும் முடிவை ஏற்க வேண்டும். இப்படி
அமைக்கப்படும் குழுவில் மறந்தும்கூட, எந்தவொரு
தமிழ்ப் பண்டிட்டு தற்குறியும் இடம் பெற்று
விடாமல் குழுவைப் பாதுகாக்க வேண்டும்.
இது மட்டுமே புத்தாண்டு நிர்ணயத்துக்கான ஒரே வழி!
அதை விட்டு, மறைமலை அடிகள் கழட்டினார்,
தேவநேயப் பாவாணர் மலம் கழித்தார்,
பெருஞ்சித்திரனாருக்கு பேதி பிடுங்கியது என்று
பேசிக்கொண்டிருப்பது பெரும் பேதைமை ஆகும்.
டாக்டர் சிவன் என்ன சொல்கிறார்?
டாக்டர் ரமணன் என்ன சொல்கிறார்?
டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரை என்ன சொல்கிறார்?
என்பதுதான் முக்கியமே தவிர, தமிழ்ப் பண்டிட்டுத் தற்குறி
என்ன சொன்னான் என்பது முக்கியமல்ல.
தமிழர்களே, இன்னும் எவ்வளவு காலம்தான் இந்தத்
தமிழ்ப் பண்டிட் முட்டாள்களைக் கட்டிக்கொண்டு
அழுவீர்கள்? எவ்வளவு காலம்தான் முட்டாள்களாக
இருப்பீர்கள்? திருந்துங்கள்!
****************************************
then dumbass hindhu sanghi morons can determine ayodhya was ram's birth place?
பதிலளிநீக்கு