புதன், 6 ஏப்ரல், 2022

4G, 5G சேவைகளும் BSNL நிறுவனமும்!
தனியார் நிறுவனக் கைக்கூலிகளின் 
பொய்ப் பிரச்சாரத்தை முறியடிப்போம்!
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------
BSNL, MTNL ஆகிய இரண்டு பொதுத்துறை 
நிறுவனங்களுக்கும் 4G அலைக்கற்றை 
வழங்குவது என்று மத்திய அரசு 2019ல் 
முடிவெடுத்து அவ்வாறே வழங்கப்பட்டு 
விட்டது.

கொரோனா காரணமாக BSNL நிறுவனத்தால் 
திட்டமிட்டபடி 4G சேவையை வழங்க இயலவில்லை.
2021ல் 4G அலைக்கற்றையைக் கொண்டு 
EQUIPMENT TRIALஐ நடத்தியது BSNL.    

CDOT (Cnetre for Development of Telematics) மூலமாகவும் 
TCS (Tata Consultancy Services) மூலமாகவும் 
Core network trialsஐ முடித்துள்ளது BSNL. நவம்பர் 
2022க்குள் 4G சேவை வழங்கப்படும். (Roll out)

அடுத்து 5G சேவை நிலவரம்!
--------------------------------------------
இந்தியாவில் இன்னும் 5G அலைக்கற்றை 
யாருக்கும் ஒதுக்கீடு செய்யப் படவில்லை.
அதற்கான ஏலம் இன்னும் நடைபெறவில்லை.
இதுதான் உண்மை.

ஆனால் அம்பானியின் ஜியோ நிறுவனத்துக்கு 
5G அலைக்கற்றையை மத்திய அரசு வழங்கி 
விட்டதாக அப்பட்டமான பொய்ச்செய்தியை சில 
சமூக விரோதிகள் பரப்பி வருகிறார்கள்.
இவர்கள் தனியார் நிறுவனங்களின் கைக்கூலிகள்.

5G ஏலம் எப்போது நடைபெறும்? இந்த ஆண்டு 
(2022ல்) நடைபெறும் என்று தொலைதொடர்புத்துறை 
இணை அமைச்சர் தேவுசின் சௌஹான் 
ராஜ்யசபாவில் தெரிவித்தார். TRAIயுடன் கலந்து 
கொண்டு ஏலத்தேதி அறிவிக்கப்படும்.

BSNLக்கு 5G எப்போது வழங்கப்படும்? எப்படி 
வழங்கப்படும்?

BSNL க்கு 5G அலைக்கற்றை வழங்குவதற்கு  
நிர்வாகரீதியான ஒப்புதல் (ADMINISTRATIVE APPROVAL)
வழங்கப்பட்டு விட்டதாக அமைச்சர் சௌஹான் 
தெரிவித்தார்.  

இதற்கு முன்பு 3G, 4G அலைக்கற்றைகள் எப்படி 
BSNLக்கு எப்படி வழங்கப்பட்டனவோ அது போலவே 
5G அலைக்கற்றையும் வழங்கப்படும் என்று 
அமைச்சர் சௌஹான் மேலும் தெரிவித்தார்.

ஏலத்தில் பங்கேற்காமலும், எந்த விதமான 
upfront payment செலுத்தாமலும் கடந்த காலத்தில் 
BSNLக்கு அலைக்கற்றைகள் வழங்கப் பட்டன.
எனவே 5G அலைக்கற்றையும், ஏலத்தில் 
பங்கேற்காமலும் முன்பணம் செலுத்தாமலும்
BSNLக்கு வழங்கப்படும்.

அம்பானியின் ஜியோ ஏலத்தில் பங்கெடுத்தும்  
முன்பணம் செலுத்தியும் மட்டுமே 5G அலைக்கற்றையைப் 
பெற முடியும். ஆனால் BSNLக்கு ஏலத்தில் 
பங்கேற்காமலும் முன்பணம் செலுத்தாமல் 
5G அலைக்கற்றை கிடைக்கும்.

பிஸ்னல்க்கு எதிரான பொய்களை 
பிற்போக்குக் கருத்துக்களை முகநூலில் 
பரப்பும் இழிந்த ஆசாமிகள் தற்கொலை 
பண்ணிச் சாக வேண்டும் என்று நியூட்டன் அறிவியல் 
மன்றம் கட்டளை இடுகிறது.
***************************************************  

முதல் இரண்டு கமெண்ட் பகுதிகளில் உள்ள 
ஆங்கிலச் செய்திகளைப் படியுங்கள்.
கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.

        
   
     
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக