வடகிழக்கு மாநிலங்களில் 32 ஆண்டுகளாக நீடிக்கும்
ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டம்
(AFSPA) கணிசமான மாவட்டங்களில் ரத்து!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
அசாம் மாநிலத்தில் 23 மாவட்டங்களில்
ஆயுதப் படையினருக்கான சிறப்பு
அதிகாரச் சட்டம் முற்றிலுமாக
நீக்கப் பட்டுள்ளது. மேலும் ஒரு மாவட்டத்தில்
பகுதியளவில் நீக்கப் பட்டுள்ளது.
சிறப்பு அதிகாரச் சட்டம் என்றால் என்ன
என்று தெரிய வேண்டும். அதாவது துணை
ராணுவப் படைகள் என்ன வேண்டுமானாலும்
செய்யலாம்;;; யாரும் கேள்வி கேட்க முடியாது.
இந்துதான் சிறப்பு அதிகாரம். இதை ஆங்கிலத்தில்
AFSPA = Armed Forces Special Power Act
என்பார்கள்.
இந்த சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA)
அசாம் மாநிலத்தில் கடந்த 32 ஆண்டு
காலமாக நடைமுறையில் இருந்து வந்தது.
தற்போது மத்திய உள்துறை அமைச்சர்
அமித் ஷா சிறப்பு அதிகாரச் சட்டம் 2022
ஏப்ரல் 1 முதல் விலக்கிக் கொள்ளப்படுகிறது
என்று அறிவித்துள்ளார்.
அசாமின் பாஜக முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
அசாமில் 60 சதவீதம் பகுதியில் சிறப்பு
அதிகாரச் சட்டம் (AFSPA) விலக்கிக் கொள்ளப்
பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.
1990 நவம்பர் 28ல் அசாம் பாதிக்கப்பட்ட
பகுதியாக (disturbed area) அறிவிக்கப் பட்டது.
அது முதலாகவே அங்கு சிறப்பு அதிகாரச் சட்டம்
(AFSPA) நடைமுறைப்படுத்தப் பட்டது.
ஆறு மாதத்துக்கு ஒருமுறை இச்சட்டம்
நீட்டிக்கப்படும். இவ்வாறு ஒன்றல்ல,
இரண்டல்ல 62 முறை அசாமில் நீட்டிக்கப்
பட்டது இச்சட்டம்.
தற்போது அசாமில் நிலைமை சீரடைந்துள்ளது
என்று மத்திய மோடி அரசு முடிவெடுத்து
பெருவாரியாக சிறப்பு அதிகாரச் சட்டத்தை
விலக்கிக் கொண்டுள்ளது.
சிறப்பு அதிகாரச் சட்டம் எங்கெல்லாம்
இருக்கிறதோ, அங்கெல்லாம் ராணுவ ஆட்சி
நடைபெறுவதாக அர்த்தம்.
தற்போது அசாமில் 23 மாவட்டங்களில்
முற்றிலுமாகவும் ஒரு மாவட்டத்தில்
பகுதியளவாகவும் சிறப்பு அதிகாரச் சட்டம்
விலக்கிக் கொள்ளப் பட்டிருப்பது
வரவேற்கத் தக்கது.
அசாமோடு சேர்த்து நாகாலாந்து, மணிப்பூர்
ஆகிய மாநிலங்களிலும் 2022 ஏப்ரல் 1 முதல்
சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) பெருமளவு
விலக்கிக் கொள்ளப் பட்டிருக்கிறது.
முன்னதாக 2014ல் மோடி அரசு பதவி ஏற்றதுமே
முதன் முதலாக மிசோரம் மேகாலயா ஆகிய
இரு மாநிலங்களிலும் சிறப்பு அதிகாரச் சட்டம்
(AFSPA) விலக்கிக் கொள்ளப் பட்டது.
கடந்த ஆண்டு 2021ல் அருணாச்சலப் பிரதேசத்தில்
சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) விலக்கிக்
கொள்ளப்பட்டது.
இந்த மாநிலங்களில் எல்லாம் கடந்த 31
ஆண்டுகளாக அதாவது 1991 முதலாக
சிறப்பு அதிகாரச் சட்டம் நடைமுறையில்
உள்ளது.
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்கள்
மொத்தம் எத்தனை? மொத்தம் 7 ஆகும்.
TET தேர்வில் இந்தக் கேள்வி கேட்கப்படும்.
ஆசிரியர்கள் படித்து வைத்துக் கொள்ளுங்கள்.
போட்டித்தேர்வுகளிலும் கேட்கப்படும்.
TNPSC UPSC SSC CGL தேர்வுகளிலும்
வாங்கித் தேர்வுகளிலும் வடகிழக்கு
மாநிலங்கள் பற்றிக்கேள்விகள் கேட்கப்படும்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள்
ஏழும் பின்வருமாறு:-
AAMMMNT என்று நினைவில் பதியுங்கள்.
AAMMMNT என்றால் என்ன?
1. A அசாம்
2. A அருணாச்சலப் பிரதேசம்
3. M மேகாலயா
4. M மணிப்பூர்
5, M மிசோரம்
6. N நாகாலாந்து
7. T திரிபுரா.
Insurgency எனப்படும் தீவிரவாதத்
தாக்குதல்கள் வடகிழக்கில் இருந்தபோது
அவற்றை ஒடுக்க சிறப்பு அதிகாரச் சட்டத்தை
அன்றைய காங்கிரஸ் அரசு பிரயோகித்தது.
காங்கிரஸ் பிரதமர் பி வி நரசிம்மராவ்
காலத்தில் இக்கொடூரச் சட்டம் நடைமுறைக்கு
வந்தது.
ப சிதம்பரம் உள்துறை அமைச்சராக
இருந்த காலத்தில் இந்தச் சட்டம் அதன்
கொடூர, குரூர முகத்தைக் காட்டியது.
சிறப்பு அதிகாரச் சட்ட நிலவரம்!
-------------------------------------------------
அ) வடகிழக்கில் உள்ள ஏழு மாநிலங்களில்,
பின்வரும் 4 மாநிலங்களில் மட்டும் AFSPA
சட்டம் நடைமுறையில் உள்ளது. அவையாவன:
அசாம், மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப்
பிரதேசம்.
ஆ) இந்த 4 மாநிலங்களிலும் சேர்த்து
மொத்தம் 90 மாவட்டங்கள் உள்ளன.
இந்த 90ல் தற்போது AFSPA சட்டம்
31 மாவட்டங்களில் முழுவதுமாகவும்
12 மாவட்டங்களில் பகுதியளவாகவும்
நடைமுறைப் படுத்தப்படுகிறது.
இ) மற்ற மூன்று மாநிலங்களில்
(மேகாலயா, மிசோரம், திரிபுரா)
முன்னரே AFSPA சட்டம் விலக்கிக்
கொள்ளப் பட்டது.
மோடி அரசு பதவி ஏற்றதை அடுத்து
2015ல் திரிபுராவில் AFSPA சட்டம்
முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப் பட்டது.
2018ல் மேகாலயாவில் முற்றிலுமாக
விலக்கிக் கொள்ளப் பட்டது.
இதன் விளைவாக வடகிழக்கில் பாஜக
பல்வேறு மாநிலங்களில் ஆட்சியைப்
பிடிக்க முடிந்தது. வடகிழக்கு மாநிலங்கள்
ஏழுடன் சிக்கி மாநிலத்தையும் சேர்த்தல்
8 மாநிலங்கள் ஆகும். ஒரு கட்டத்தில் இந்த
எட்டு மாநிலங்களில் 7ல் பாஜக மற்றும்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின்
ஆட்சி நடைபெற்றது.
வளர்ச்சித் திட்டங்கள் மூலமாகவும்
(உதாரணம்: மணிப்பூரில் முதன்
முதலாக ரயில் விடப்பட்டது),
மக்கள்நலத் திட்டங்கள் மூலமாகவும்
(உதாரணம்: ஜன்தன் வங்கிக் கணக்குகள்,
இலவச எரிவாயு முதலியன)
துணை ராணுவப் படைகளை விலக்கி
சூழலை ஜனநாயகப் படுத்தியமை)
ஆகிய மேற்க்கூறிய காரணிகள் பாஜக
வடகிழக்கில் ஆட்சியைக் கைப்பற்ற
முடிந்ததற்கான காரணம் ஆகும்.
-------------------------------------------------------
பின்குறிப்பு::
இந்தச் செய்திகளை தமிழ் ஊடகங்கள்
இருட்டடிப்புச் செய்யும். செய்திகளை
மக்களுக்குச் சொல்லாமல் மறைப்பார்கள்.
பாஜக என்றால் மதவாதம் என்று மட்டும்
சொல்லிக்கொண்டே உண்மையை
மறைப்பார்கள். இதன் மூலம் பாஜக
ஆடசி வருவதற்கு மறைமுகமான காரணம்
ஆவார்கள்.
முகநூலில் பல கட்டுரைகளை காசு
கொடுத்துத்தான் படிக்க வேண்டும்.
இது தெரியுமா நண்பர்களே?
என்னுடைய கட்டுரைகள் சிலவற்றை
காசு கொடுத்தல் மட்டுமே படிக்கலாம்
என்று லாக்கப் போகிறேன்.
இது காசுக்காக அல்ல.
என்னோடு உடன்படாதவர்கள் என்னுடைய
அறிவு உழைப்பு முயற்சியால் விளைந்த
கட்டுரைகளைப் படிப்பதை நான்
விரும்பவில்லை. அவர்கள் அருள்கூர்ந்து
என்னை பிளாக் செய்து விட்டு
ஓடிப்போகுமாறு வற்புறுத்துகிறேன்.
**************************************************** .
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக