இங்கிலாந்து தப்பிச் செல்ல முயன்றபோது
மும்பை விமான நிலையத்தில் பிடிபட்ட
பெண் பத்திரிகையாளர் ராணா அயூப்!
------------------------------------------------------------------------
மலத்தில் நெளியும் புழுக்களைப் பார்த்து
இருக்கிறீர்களா? அப்படி ஒரு பழுதான் இந்தப்
பெண்மணி! இவர் பெயர் ராணா அயூப்.
இஸ்லாமியப் பெண்ணான இவரின் வயது 37.
இவர் ஒரு பத்திரிகையாளர். இவர் வாஷிங்க்டன்
போஸ்ட் எனப்படும் அமெரிக்கப் பத்திரிகையில்
எழுதுகிறவர். அதிதீவிர அமெரிக்க ஆதரவாளர்.
இவர் மீது MONEY LAUNDERING உட்பட பல்வேறு
வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரூ 1.73 கோடி
பணமோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவு
இவருக்கு சம்மன் அனுப்பியது. சம்மனை
ஏற்று ஆஜர் ஆனால் கைது உறுதி என்ற
அளவுக்கு சான்றாதாரங்கள் அமலாக்கப்
பிரிவில் சிக்கி உள்ளன.
அமலாக்கப் பிரிவின் கண்ணின் மண்ணைத் தூவி
விட்டு, கைதாகாமல் தப்பிக்க ராணா அயூப்
முயற்சி செய்தார். இங்கிலாந்து சென்று விடத்
திட்டம் தீட்டி மும்பை விமான நிலையத்தில்
லண்டன் செல்லும் விமானத்துக்குக் காத்திருந்த
நேரத்தில் இந்தப் பெண்மணியை அமலாக்கப்
பிரிவின் போலீஸ் அதிகாரிகள் கோழியை
அமுக்குவது போல் அமுக்கி விட்டார்கள்.
பெண் பத்திரிகையாளர் இவர்! போலி முற்போக்கு!
இவருடைய யோக்கியதையைப் பாருங்கள்.
இங்கிலாந்த்துக்குத் தப்பி விட்டால், அதன் பிறகு
இந்தக் குற்றவாளியை அங்கிருந்து ஒருபோதும்
இந்தியாவுக்கு கொண்டு வர முடியாது.
*********************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக