ரஷ்யாவைக் கண்டித்து ஐநாவில் தீர்மானம்!
ஐநா பொது அசெம்பிளியில் தீர்மானம் நிறைவேறியது!
இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------
1) உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு
தொடங்கியதுமே, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்
ரஷ்யாவைக் கண்டித்து ஒரு தீர்மானம்
அமெரிக்க முயற்சியில் கொண்டுவரப்பட்டது.
2) கண்டனத் தீர்மானத்தை அமெரிக்கா உட்பட
11 நாடுகள் ஆதரித்தன. ரஷ்யா மட்டும் எதிர்த்தது.
இந்தியா உள்ளிட்ட 3 நாடுகள் வாக்கெடுப்பில்
பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. ஐநா பாதுகாப்பு
கவுன்சிலில் மொத்தம் 15 வாக்குகள் மட்டுமே.
ரஷ்யா தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி
தீர்மானத்தை ரத்து செய்தது.
3) தற்போது மார்ச் 2 புதன் கிழமையன்று
ஐநா பொது அசெம்பிளியில் ரஷ்யா மீதான ஒரு
கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
பொது அசம்பிளியில் மொத்த வாக்குகள் 193.
அதாவது பொது அசெம்பிளியில் உறுப்பினர்களின்
எண்ணிக்கை 193 ஆகும்.
4) இந்த 193ல் 141 பேர் கண்டனத் தீர்மானத்தை
ஆதரித்தனர். 5 பேர் மட்டுமே எதிர்த்தனர். 35 பேர்
வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை
வகித்தனர். இந்தியா சீனா ஆகிய இரு நாடுகளும்
வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. முன்னதாக
ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட
ரஷ்யா மீதான கண்டனத் தீர்மானத்திலும்
சீனாவும் ரஷ்யாவும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல்
நடுநிலை வகித்தன என்பதை நினைவில் கொள்க.
5) ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் ஒரு தீர்மானம்
நிறைவேற்றப் பட்டால், அது அனைவரையும்
கட்டுப்படுத்தக் கூடியது (binding). ஆனால் ஐநா
பொது அசெம்பிளியில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானம் எவரையும் கட்டுப்படுத்தக் கூடியதல்ல
(not binding). எனினும் அரசியல்ரீதியாக இத்தீர்மானம்
உலக அரசியலிலும் ரஷ்யாவுக்கு எதிராகவும்
செல்வாக்குச் செலுத்தும்.
-------------------------------------------------------------------
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக