ஷரியத் சட்டமா இந்திய அரசமைப்புச் சட்டமா
என்ற கேள்வி எழுந்தபோது ஷரியத் சட்டத்தை
உயர்த்திப் பிடித்த ராஜிவ் காந்தி!
---------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
ஷா பானு என்று பெண்மணி. 62 வயதான மத்தியப்
பிரதேசத்து முஸ்லிம் பெண்மணி. இவரின் கணவர்
முகமது அகமது கான் ஒரு வழக்கறிஞர். அவர்
1978ல் ஷா பானுவை முத்தலாக் கூறி விவாகரத்து
செய்து விட்டார்.
தனக்கு ஜீவனாம்சம் கேட்டு இந்தூர் நீதிமன்றத்தில்
வழக்குத் தொடுத்தார் ஷா பானு. மாதம் ரூ 25
ஜீவனாம்சம் கொடுக்குமாறு இந்தூர் மாவட்ட
நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்கு உயர்நீதிமன்றம்
சென்றபோது அங்கும் ஷாபானுவுக்குச் சாதகமாகவே
தீர்ப்பு வந்தது.
வெகுண்டெழுந்த அகமது கான் உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீடு செய்தார். ஷரியத் சட்டப்படி
ஜீவனாம்சம் அளிக்க வேண்டிய தேவையில்லை
என்று வாதிட்டார். உச்சநீதிமன்றமும் 1985 ஏப்ரலில்
ஷா பானுவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஷரியத் சட்டத்துக்கு எதிரானது
என்றும் அதை ஏற்க இயலாது என்றும் இஸ்லாமிய
மதவெறி அமைப்புகள் போராடின. அப்போது
ராஜிவ் காந்தி இந்தியாவின் பிரதமர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் செல்லாதது (INVALID)
ஆக்கும் பொருட்டும், ஜீவனாம்சம் வழங்கத்
தேவையில்லை என்று கூறும் ஷரியத் சட்டத்தை
உயர்த்திப் பிடிக்கும் பொருட்டும் ராஜிவ் காந்தி
ஒரு நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்திய வரலாற்றின் மாபெரும் பிற்போக்குத்
தனமான நடவடிக்கை அது. இஸ்லாமிய அபலைப்
பெண்களின் வயிற்றில் அடித்த நடவடிக்கை
அது. சமூகநீதிக்கு கொள்ளி வைத்த இழிந்த
நடவடிக்கை அது. ஆணாதிக்க வெறியின்
வெளிப்பாடு அது.
விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு அவள் கணவன்
ஜீவனாம்சம் வழங்க வேண்டியதில்லை என்னும்
ஷரியத் சட்டத்தைச் செல்லுபடி ஆக்கும் விதமாக
ஒரு சட்டம் கொண்டு வந்தார் ராஜிவ் காந்தி. முஸ்லீம்
பெண்கள் விவாகரத்து உரிமைகள் சட்டம் 1986
என்ற பெயரிலான அச்சட்டம் மனைவிக்கு கணவன்
ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்
தீர்ப்பை கடித்துக் குதறிப் போட்டது.
இச்சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள
இஸ்லாமியப் பெண்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய
ஒரு சிறு நிவாரணமும் இல்லாமல் போனது. இச்சட்டம்
கொண்டுவரப்பட்ட ஐந்தே ஆண்டுக்குள் ராஜிவ் காந்தி
செத்துச் சுண்ணாம்பாகப் போனார். ஸ்ரீபெரும்புதூரில்
மே 1991ல் தலை வேறு முண்டம் வேறாக ரத்தச் சகதியில்
பிணமாகக் கிடந்தார் ராஜிவ் காந்தி. ஜீவனாம்சம்
மறுக்கப்பட்ட இஸ்லாமியப் பெண்களின் வயிறு அன்று
குளிர்ந்திருக்கும்.
ராஜிவ் காந்தியின் இந்த நடவடிக்கை முற்போக்கானது
என்று யாராவது சொல்ல முடியுமா? முடியாது.
கடைந்தெடுத்த பிற்போக்குத்தனமான
நடவடிக்கையே இது.
ராஜிவ் காந்தியின் இந்த நடவடிக்கை வலதுசாரிச்
செயல்பாடா அல்லது இடதுசாரிச் செயல்பாடா?
அதீவிர வலதுசாரிச் செயல்பாடு.
இந்த நடவடிக்கையின் மூலம் 1000 ஆண்டுகளுக்கு
முந்திய நிலவுடைமைச் சமூக அமைப்பின்
காலத்துக்கு நாட்டை இட்டுச் சென்றார்
ராஜிவ் காந்தி.
ராஜீவின் இந்த நடவடிக்கை சமூகநீதிக்கான
நடவடிக்கையா அல்லது சமூகநீதிக்கு எதிரான
நடவடிக்கையா? நிச்சயம் சமூகநீதிக்கு எதிரானதுதான்.
தமிழ்நாட்டில் உள்ள பல முட்டாள்கள் சமூகநீதி
என்றால் BC/SC/ST இடஒதுக்கீடு மட்டும்தான் என்று
நினைத்துக் கொண்டு இருக்கிறான். சமூகநீதி
என்பது மற்ற மதப் பெண்களுக்கு உள்ள உரிமைகளை
இஸ்லாமியப் பெண்களுக்கு மறுப்பதல்ல என்று
தமிழ்நாட்டின் திராவிடக் கசடுகள் உணர வேண்டும்.
ராஜிவ் காந்தியின் இந்த நடவடிக்கை மதச்சார்பின்மை
எனப்படும் செக்க்யூலரிஸத்தில் வருமா? வராது.
இது முற்ற முழுக்க இஸ்லாமிய மதவெறிக்கு
ஆதரவான நடவடிக்கை. எனவே ராஜிவின் இந்த
நடவடிக்கை போலி மதச்சார்பின்மையில் வரும்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக