போர் இலக்கியங்கள்!
----------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------
பொருதடக்கை வாளெங்கே மணிமார்பெங்கே
போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொடாத
பருவயிரத் தோளெங்கே எங்கே என்று
பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்.
------------கலிங்கத்துப் பரணி.
கலிங்கத்துப் பரணி போர் இலக்கியம்தான்.
என்றாலும் உரைநடையிலான போர் இலக்கியங்கள்
அதாவது நாவல்கள் ஐரோப்பாவில்தான் அதிகம்.
போர்கள் குறித்தும் உலகப்போர் குறித்தும் பேச
விரும்புவோர் போர் இலக்கியங்களைக் கற்று
இருத்தல் வேண்டும். ஐரோப்பிய நாடுகளில்
கட்டாய ராணுவப் பயிற்சி உண்டு. அமெரிக்காவில்
ரஷ்யாவில் உண்டு. இந்தியாவில் கேவலம் NCC கூட
கட்டாயம் கிடையாது.
நான் பியூசி முடித்து கோடை விடுமுறையில்
இருந்தபோது லியோன் அரிஸ் (Leon Uris) எழுதிய
Battle Cry என்ற நாவலைப் படித்தேன். இவர் அமெரிக்க
நாவலாசிரியர்.
அதைப் படித்து முடிக்க எனக்கு 20 நாள் ஆனது.
அவ்வளவும் தெரியாத ஆங்கில வார்த்தைகள்.
அர்த்தம் தெரிந்து படித்து முடிக்க அவ்வளவு
காலம் ஆனது. இந்நாவல் ஒரு போர் இலக்கியம்.
பின்னர் எர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய A farewell to arms
என்ற நாவலைப் படித்தேன். முதல் உலகப்போர் பற்றிய
நாவல் அது. இன்னும் நிறையச் சொல்லிக்கொண்டு
போகலாம். உலகப்போர் என்றும் உக்ரைன் போர்
என்றும் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கும்
இடதுசாரி முகாமின் குட்டி முதலாளித்துவம்
இந்நாவல்களைப் படிக்க வேண்டும்.
படித்தால் நல்லது. ஆனால் இந்நாவல்களைப் படிக்க
வேண்டுமாயின் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.
நல்ல புலமை மிக்க ஆங்கிலம் வேண்டும். அதற்கு
இடதுசாரி முகாமின் தற்குறி எங்கு போவான்?
ஒரு சாம்பிளுக்காக இரண்டு நாவல்களை மட்டும்
குறிப்பிட்டுள்ளேன். நான் படித்த மற்றும் நான்
படிக்காத போர் இலக்கியங்கள், நாவல்கள் நூற்றுக்
கணக்கில் உள்ளன.
ரஷ்யாவின் போர் இலக்கியங்கள் எதையேனும்
படித்து இருக்கிறீர்களா? இல்லை. போலி இடதுசாரி
முகாமில் உள்ளவர்கள் அனைவரும் விதிவிலக்கின்றிப்
படித்த புத்தகம் ஒன்றே ஒன்றுதான்! அது சரோஜாதேவி
புஸ்தகம் தான்!
டால்ஸ்டாயின் War and Peace படித்திருக்க வேண்டும். அது
உலகப்போருக்கெல்லாம் முந்தியது. ரஷ்யாவின் மீதான
பிரான்சுப் படையெடுப்பைப் பற்றிக் கூறும் நாவல் அது.
மைக்கேல் ஷோலக்கோவ் தெரியுமா? அவர் எழுதிய
டான் நதி அமைதியாகச் செல்கிறது (And quiet flows the Don)
என்ற நாவல் மிகச் சிறந்த நாவல், பேறு பெற்றவர்கள்
அதைப் படித்திருப்பார்கள்.
இப்போது ஏன் போர் இலக்கியம் பற்றிப் பேச
நேரிட்டுள்ளது? எல்லாம் குட்டி முதலாளித்துவத்
தற்குறிகளால்தான். இடதுசாரி முகாமில் உள்ள
போலி நக்சல்பாரிகள், போலி மாவோயிஸ்டுகள்,
போலி மார்க்சிஸ்டுகள் என்று பலரும் உக்ரைன்
நாட்டுக்கும் மக்களுக்கும் உபதேசம் வழங்கிக்
கொண்டு இருக்கிறார்கள். உலகின் மொத்த
மக்கள்தொகையான 750 கோடிப்பேரும் இகழ்ந்து
காரித்துப்பும் அளவுக்கான கோமாளித்தனம் இது.
**************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக