புதன், 9 மார்ச், 2022

 தாய்வழிச் சமூகமான இந்தியாவும்

சர்வதேச மகளிர் தினமும்! (மார்ச் 8)

-------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

----------------------------------------------------- 

ஐரோப்பிய சமூகம் மானுடத்தின் 

காட்டு மிராண்டித்தனங்களை எல்லாம் 

கொண்டிருந்த ஒரு சமூகம்.


பெண்கள் தங்களின் உரிமைக் குரல்களை 

ஐரோப்பிய சமூகத்தில் எப்போது 

எழுப்ப முடிந்தது? பெண்ணடிமைத் தனத்தை 

எதிர்த்த முதல் குரல்கள் ஐரோப்பிய சமூகத்தில் 

எப்போது கேட்கத் தொடங்கின? 

வரலாற்றில் மிக அண்மையில்தான், அதாவது 

ஒரு நூறு ஆண்டுக்குள்தான் பெண்களின் தரப்புக் 

குரல்கள் கேட்கத் தொடங்கின என்பது வரலாறு..


முதலாளியச் சமூகம் உருவான பின்னரே,

பெண்களின் சார்பில் உரிமைக் குரல்களை 

முதன் முதலாக எழுப்ப முடிந்தது. இதற்கு முந்திய 

சமூக அமைப்புகளில் இந்த வாய்ப்பு இல்லை.


கிளாரா ஜெட்கின் என்னும் சோஷலிஸப் பெண்மணி 

குறித்து நாம் அறிவோம்.. ஜெர்மனியின் கம்யூனிஸ்ட் 

கட்சித் தலைவர்களில் ஒருவரான இவர் 1911ல்  

ஜெர்மனியில் முதன் முதலாக மார்ச் 8 தேதியன்று 

உலகளாவிய பெண்கள் தினத்தைக் கொண்டாடினார்.


ஆக ஐரோப்பிய அமெரிக்க சமூகங்களில் பெண்களின் 

உரிமைகளுக்குக் குரல் எழுப்ப 1911 வரை 

காத்திருக்க நேர்ந்தது.


ஐரோப்பிய சமூகம் தந்தைவழிச் சமூகம் என்பதால் 

பெண் இவ்வாறு ஒடுக்கப் பட்டாள். ஒடுக்குமுறையில்  

இருந்து மீள்வதற்காக மெலிந்த குரல்களை 

எழுப்புவதற்கே  இருபதாம் நூற்றாண்டு வரை

ஆனது ஐரோப்பியப் பெண்களுக்கு. ஏனெனில் 

ஐரோப்பிய சமூகம் தந்தைவழிச் சமூகம்

என்பதும் அது மூர்க்கத் தனமான ஆணாதிக்கச் 

சமூகம் என்பதும் பெண்களின் இந்த அவலத்திற்குக் 

காரணங்கள்.


இதற்கு மாறாக இந்தியச் சமூகம் தாய்வழிச்

சமூகம் ஆகும். எனவே இதன் பிறப்பு முதலே 

இது பெண்ணின் தலைமையை ஏற்றுக் கொண்டு 

இயங்கிய சமூகம் ஆகும். எனவே ஐரோப்பிய 

சமூகத்தின் ஆணாதிக்கக் கொடூரங்களுக்கு  

இந்தியச் சமூகத்தில் இடமில்லாமல் போனது.


கிளாரா ஜெட்கினைப் போற்றுவோம். கூடவே 

இந்தியத் தாய்வழிச் சமூகத்தின் 

விழுமியங்களையும் போற்றுவோம்.


நவீன உலகின் இயல்புக்கு ஏற்ப மார்ச் 8ல்

சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவோம்.

அதே நேரத்தில் இந்தியத் தாய்வழிச் சமூகத்தின்

மாண்புகளை அறிந்து கொள்வோம்; அவற்றை 

எடுத்துரைப்போம்.


சங்க காலம் பற்றியும் சங்க இலக்கியம் பற்றியும் 

ஏதேனும் தெரிந்திருந்தால் சங்க காலப் பெண் 

புலவர்கள் பற்றியும் நமக்குத் தெரிய வரும்.

ஒளவையார், வெண்ணிக்குயத்தியார்,

காக்கை பாடினியார் நச்செள்ளையார், 

மாறோக்கத்து நப்பசலையார் என்று 

பட்டியல் நீளும். இவர்களெல்லாம் இரண்டாயிரம்

ஆண்டுகளுக்கு முந்தியவர்.


இதே போல் வட இந்தியாவிலும் தொன்மை மிக்க 

பெண் புலவர்களின் பட்டியல் உண்டு. அவர்கள் 

காலத்தால் வெகுவாக முற்பட்டவர்கள்.


இந்தியச் சமூகத்தில் பெண் கல்வியும் 

பெண் சமத்துவமும் குறிப்பிடத்தக்க உச்சத்தில்

இருந்தபோது ஐரோப்பிய சமூகத்தில் பெண்ணின் 

நிலைமை எவ்வாறு இருந்தது? பெண் ஒரு 

பண்டமாக மட்டுமே பார்க்கப் பட்டாள்.

பெண்ணடிமைத்தனம் அதன் சிகரத்தில் 

இருந்தது.


இந்த உண்மைகளையும் கணக்கில் கொண்டு 

மார்ச் 8ல் சர்வதேச மகளிர் தினத்தைக் 

கொண்டாடலாம். பெண்களுக்கான இத்தகைய 

தினங்களை யாந்திரீகமாகப் புரிந்து கொண்டு,

ஐரோப்பியப் பண்பாட்டுக்கு அடிமையாக

நம்மை ஆக்கிக் கொள்வது பிற்போக்கானது.

அது தவிர்க்கப்பட வேண்டும். 


தனிச்சொத்துரிமை ஒழிக்கப்படும்போதுதான் 

ஆண் பெண் சமத்துவம் கனியும். மார்ச் 8 மகளிர் 

தினக் கொண்டாட்டங்களின்போது, தனிச்சொத்துரிமை 

ஒழிப்பு பற்றி மக்களுக்குப் போதிப்போம்.     

-----------------------------------------------------------    

பின்குறிப்பு:

காரைக்கால் அம்மையார் தெரியுமா?
சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் 
பத்தாம் திருமுறையாக காரைக்கால் 
அம்மையாரின் பாடல்கள் வைக்கப் பட்டுள்ளன.
இவரின் காலம் இன்றைக்கு குறைந்தது 1500
ஆண்டுகளுக்கு முந்தியது.

காரைக்கால் அம்மையார் கவி புனைந்து 
கொண்டிருந்த நேரத்தில், ஐரோப்பியன் 
பனியில் விரைத்துக் கொண்டிருந்தான்;
பெற்ற தாயைப் புணர்ந்து கொண்டிருந்தான்.
ஐரோப்பியக் காட்டு மிராண்டி அப்படித்தான் 
வாழ்ந்தான்.

  


    

       

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக