ஞாயிறு, 13 மார்ச், 2022

தோல்விக்கு என்ன காரணம்?
மாயாவதி சொல்கிறார்!
---------------------------------------------
1) 2022 உபி தேர்தலில் பகுஜன் கட்சி சார்பாக
97 முஸ்லிம்களை நிறுத்தினோம். ஆனால் 
அகிலேஷின் சமாஜ்வாதி கட்சி 64 முஸ்லிம்களை 
மட்டுமே நிறுத்தியது.

2) ஆனால் முஸ்லீம் பெருமக்கள் எங்களுக்கு 
துரோகம் செய்துவிட்டு, சமாஜ்வாதி கட்சிக்கு
வாக்களித்து விட்டனர். இதனால் நாங்கள்
வெற்றி பெரும் இடங்கள் கணிசமாகக் குறைந்து 
விட்டன.

3) அடுத்து, எங்களை ஆதரிக்கும் இந்துக்களில் 
பலர், மீண்டும் சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்து விடுமோ
என்று பயந்தனர். ஐயோ மீண்டும் காட்டாட்சி
வந்து விடுமோ என்று பயந்த அவர்கள், அதைத் 
தடுக்க வேண்டும் என்பதற்காக, தங்களின் 
வாக்குகளை பாஜகவிற்குப் போட்டு விட்டனர்.

4) மேற்சொன்ன இரண்டு காரணங்களாலும் 
இத்தேர்தலில் 403 இடங்களிலும் போட்டியிட்டு 
ஒரே ஒரு இடத்தில் மட்டுமே எங்களால் வெற்றி 
பெற முடிந்தது.

5) இவ்வாறு கூறி வருத்தப் பட்டார் மாயாவதி.
(இணைக்கப்பட்ட ஆங்கில அதுகளின் செய்தியைப் 
படியுங்கள்)

பல்வேறு கட்சிகளின் சார்பாக மொத்தம் 286 முஸ்லிம்கள் 
வேட்பாளர்களாக நிறுத்தப் பட்டனர். ஒவாய்ஸியின் 
மஜ்லிஸ் கட்சி 60 முஸ்லிம்களை வேட்பாளர்களாக 
நிறுத்தியது. ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.

காங்கிரஸ், பகுஜன், மஜ்லிஸ், அப்னா தள் ஆகிய 
கடசிகள் நிறுத்திய முஸ்லீம் வேட்பாளர்கள் 
வெற்றி பெறவில்லை. சமாஜ்வாதி கட்சி நிறுத்திய         
64 முஸ்லிம்களில் 35 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
ராஷ்டிரிய லோக் தள் கடசியின் ஒரு முஸ்லீம் 
வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஆக மொத்தம் 
403 பேர் கொண்ட உபி சட்ட மன்றத்தில் 36 முஸ்லிம்கள் 
தற்போது வெற்றி பெற்றுள்ளனர்.
**************************************************
  
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக