சனி, 26 மார்ச், 2022

என் உயரம் எனக்குத் தெரியும்!
காலத்தை வென்று நிற்கும் காவிய வாக்கியம்!
குட்டி முதலாளித்துவக் கோழைகளின்  ஆரவாரம்! 
------------------------------------------------------------------
1996ல் இந்தியாவின் பிரதமர் யார் என்று நாடு 
முழுவதும் ஒரு கேள்வி எழுந்தது. வாஜ்பாய் 
பிரதமர் பதவியில் இருந்து இறங்கி இருந்த நேரம்.

மூப்பனாரா கருணாநிதியா அவரா இவரா யார் 
பிரதமர் என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, 
அதற்கு ஒரு பதில் அளித்தார் கலைஞர்.
நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை 
என்றார் கலைஞர். ஏன் என்று கேட்டபோது 
என் உயரம் எனக்குத் தெரியும் என்றார் 
கலைஞர். 

காலத்தை வென்று நிற்கும் வாக்கியம் அது. 
ஓர் அறுதியிடும் வாக்கியம் (assertive sentence) அது.
ஒரு காவிய வரியின் அந்தஸ்தைப் பெற்று 
இன்றும் சிகரம் தொட்டு நிற்கிறது அவ்வாக்கியம்.

கலைஞரை வணங்குகிறேன். அவரைப்போல 
ஒவ்வொருவருக்கும் அவரின் உயரம் தெரிந்திருக்க 
வேண்டும். 

இந்த விஷயத்தில் வலதுசாரி முகாம் எவ்வளவோ 
பரவாயில்லை. அவர்களில் பலருக்கும் தங்களின் 
உயரம் தெரியும். ஆனால் தன் உயரம் என்ன என்று 
தெரியாத தறுதலைகளும் தற்குறிகளும் இடதுசாரி 
முகாமில்தான் அதிகம்.

இந்த இடத்தில் இந்தியாவின் இடதுசாரி முகாமில் 
95 சதத்திற்கும் மேற்பட்டோர் போலி இடதுசாரிகள்
என்ற உண்மையைக் கணக்கில் கொள்ள வேண்டும்.
இந்தப் போலி இடதுசாரி முகாமில் ஒருவனுக்கும் 
அவனின் உயரம் என்னவென்று தெரியாது.

ஒரு குற்றுச்செடியின் உயரமே வளர்ந்திருப்பான்.
ஆனால் தான் பனைமர உயரம் வளர்ந்திருப்பதாக 
சுயஇன்பம் அனுபவிப்பான்.  இவன்தான் தமிழக 
இந்திய இடதுசாரி. போலி மார்க்சிஸ்ட், போலி 
நக்சல்பாரி, போலி மாவோயிஸ்ட் என்று பலரும் 
இந்த முகாமில் இருப்பவர்கள்.

தன் அறிவெல்லைக்கு அப்பால பல ஒளியாண்டுகள்  
தொலைவில் இருக்கும் விஷயங்களில் கருத்துக் 
கூற முற்பட்டு தன் இழிந்த அறியாமையை 
வெளிப்படுத்துவான் இந்தப் போலி நக்சல்பாரி. 

தமிழ்நாட்டின் போலி நக்சல்பாரி,  போலி 
மாவோயிஸ்ட் மற்றும் சில லெட்டர்பேட் 
அமைப்புகளின் போலிகள், உதிரியாக உள்ள  
போலிகள் என்று அநேகமாக ஒவ்வொருவருமே 
தன் உயரம் தனக்குத் தெரியாத தற்குறிகள்தான்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் உலகப்போராக 
மாறுமா? தன் உயரம் தனக்குத் தெரியாத தற்குறிகளான 
போலி நக்சல்பாரிகளுக்கு உலகப்போர் குறித்து
எதுவுமே உருப்படியாகத் தெரியாது. அவர்கள் என்ன 
செய்ய வேண்டும்.

அவர்கள் ஒரு consultancy  அப்பாயிண்ட்மெண்ட் 
செய்ய வேண்டும். அதாவது ஒரு நிபுணர் குழுவை 
நியமிக்க வேண்டும். அவர்களிடம் கருத்துக் 
கேட்டும் விளக்கம் பெற்றும் விஷயத்தைத் 
தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு 
தனக்கு உகந்த நிலைபாட்டை எடுக்க வேண்டும்.
இதுதான் முறை!

இதற்கு மாறாக, போரைப் பற்றி ஒரு இழவும் 
தெரியாத தற்குறிகள், தங்களின் வாழ்க்கையில் 
ஒரு NCCயில் கூடப் பயிற்சி பெற்றிராத இந்தக் 
குட்டி முதலாளித்துவக் கோழைகள், நிலைபாடு
என்ற பெயரில் தங்களின் இழிந்த அறியாமையை 
வெளிப்படுத்துவதால் யாருக்கும் பயனில்லை.     
*********************************************
    
    
     
 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக