*NEET தேர்வு முறை*
இந்திய பாராளுமன்றத்தில் 10-12-2021 அன்று வைக்கப்பட்ட அறிக்கையில் இந்தியாவில் இருக்கும் மொத்த MBBS இடங்கள் 88,120. (இன்றைய தின இந்திய மருத்துவ கழகம் இணைய தள நிலவரத்தின் படி இந்தியா முழுமைக்கும் 605 மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் MBBS படிப்புக்கான இடங்கள் வெறும் மூலம் 90,825) இந்த இடங்களுக்கு இந்தியா முழுமைக்கும் 15.44 மாணவர்கள் NEET தேர்வு எழுதி 8.70 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அரசு கல்லூரிகளில் இருக்கும் MBBS இடங்கள் – 46,860
தனியார் கல்லூரிகளில் இருக்கும் 50% இடங்கள் - 21,983
-----------
68,843
இவர்களுக்கு மட்டுமே அரசாங்கம் நிர்ணயித்த கட்டணத்தில் படிக்க முடியும். தனியார் கல்லூரிகளில் இருக்கும் மீதம் இருக்கும் 50% இடங்கள் 21,983. இந்த இடங்களுக்கு இந்தியா முழுவதும் NEET தேர்வெழுதி தேர்சசி பெற்று மேலே சொன்ன 69,843 இடங்களில் வராத எட்டு லட்சம் பேர் போட்டியிடுகிறார்கள்.
*போட்டி*
இந்தியாவில் இருக்கும் மருத்துவ கல்லூரிகள் மிகக்குறைவாக இருப்பதாலும், அதிலேயும் ஏறக்குறைய 25% இடங்களுக்காக (21,983 இடங்கள்) அதற்கு எட்டு லட்சம் பேர் போட்டியிடுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக