ராமன் விளைவு!
கிருஷ்ணன் என்பவர் கொல்கொத்தா
பல்கலையில் சி வி ராமனின் மாணவர்.
ஆய்வுக்காக (research) அவர் 1920ல்
ராமனிடம் பதிவு செய்துகொண்டு
பயின்று வந்தார். ராமனின் ஒளிச்சிதறல்
ஆராய்ச்சியில் அவர் ராமனுக்கு
உதவியாளராக இருந்தார். அவ்வளவுதான்.
தான் மறைக்கப்பட்டு விட்டதாகவோ
தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல்
இருந்ததாகவோ கிருஷ்ணனுக்கு எந்தவிதமான
மனக்குறையும் இருந்தது இல்லை.
ராமன் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை.
அதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.
scattering of light பற்றி ராமன் 1920 முதலே
பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வந்தார்.
தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பின்
filament உருவாக்கத்திற்காக நூற்றுக்
கணக்கான materialsஐ ஒன்று மாற்றி
இன்னொன்றாக பரிசோதனை செய்து
பார்த்தார். அதைப் போலவே ராமனும்
கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட திரவங்களில்
பரிசோதனை செய்து பார்த்தார்.
ஒருவன் எழுதிய கதையை அல்லது
கவிதையை இன்னொருவன் தன் பெயரில்
போட்டுக் கொள்வதைப்போல, அறிவியலில்
செய்வது கடினம்.
ராமன் விளைவு முர்ரா முழுக்க ராமனின்
கண்டுபிடிப்பு. கிருஷ்ணன் இந்த ஆராய்ச்சியில்
ராமனின் உதவியாளராக சிறப்பாகப்
பணியாற்றினார். அவ்வளவுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக