வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

உலக சதுரங்க சாம்பியன் கார்ல்சனை 
ஒரு ஆட்டத்தில் வென்று
பிரதமர் மோடியின் பாராட்டைப் பெற்ற 
தமிழ்ச் சிறுவன்  பிரக்ஞானந்தா!   
-------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------
பிரக்ஞானந்தா குறித்து சில நாட்களுக்கு முன்பே 
பலரும் எழுதி விட்டார்களே! நீங்கள் தாமதமாக 
எழுதுகிறீர்களே என்று சிலர் கேட்கலாம்!

அவர்கள் போட்டி முடியும் முன்னரே எழுதினார்கள்.
நான் போட்டியின் காலிறுதி (QUARTER FINAL)
முடிந்ததும் எழுதுகிறேன். அதுதானே முறை!

பிரக்ஞானந்தா பங்கேற்ற சதுரங்கப் போட்டி 
ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் (AIRTHINGS MASTERS 2022)
என்னும் போட்டியாகும். இது Champions Chess Tour என்னும் 
போட்டியின் பகுதியாகும். கொரோனா காரணமாக 
பயணக் கெடுபிடிகள் இருப்பதால் இப்போட்டி 
ஆன் லைன் மூலமாக தற்போது நடந்து வருகிறது.

சதுரங்கப் போட்டிகள் மூன்று formatகளில் நடைபெறும்.
Classical, Rapid, Lightning என்னும் மூன்றே அவை. இதில் 
ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் என்னும் இப்போட்டியானது 
விரைவுச் சதுரங்கம் (Rapid Chess) ஆகும்.

அறிவியல் ஒளியின் அண்மைய இதழ் ஒன்றில் 
"அறிவியலாய் ஒளிரும் சதுரங்கம்" என்ற என் 
கட்டுரையில் இம்மூவகைப் போட்டிகள் குறித்தும் 
விரிவாய் எழுதி இருக்கிறேன். அதைப் படியுங்கள்.  

காலிறுதி, அரையிறுதி, இறுதி என்று மூன்று கட்டமாக 
பெப்ரவரி 19 முதல் 26 வரை இப்போட்டி நடந்து வருகிறது. 
பெப்ரவரி 19-23 காலிறுதி; பெப்ரவரி 24 அரையிறுதி;
பெப்ரவரி 25-26 இறுதி! தற்போது அரையிறுதி நடந்து 
வருகிறது. இது நாக் அவுட் முறைப்படி நடக்கிறது.

காலிறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் சிறுவன் 
பிரக்ஞானந்தா உட்பட 16 வீரர்கள் பங்கேற்றனர்.
இது ரவுண்ட் ராபின் முறையிலான ஆட்டம் ஆகும்.
எனவே ஒவ்வொருவரும் 15 ஆட்டங்கள் ஆட வேண்டும்.

இந்த 15 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில், அதாவது 
எட்டாவது ஆட்டத்தில், பிரக்ஞானந்தா 
உலக சாம்பியன் மாக்னஸ்  கார்ல்சனை எதிர்கொண்டார்.
அந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா  வென்றார்; கார்ல்சன் 
தோற்றார். உலக சாம்பியனை எதிர்த்து ஒரு ஆட்டத்தில் 
பிரக்ஞானந்தா  வெற்றி பெற்றதால் அது பெரும் 
சாதனையாக இந்தியாவில் பார்க்கப் படுகிறது.

அதே நேரத்தில் 16 வீரர்கள் பங்கேற்ற காலிறுதியில் 
தர வரிசைப்படியான முதல் 8 பேர் மட்டுமே 
அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்கள். 19 புள்ளிகள் 
பெற்று 11ஆவது இடத்தில் இருக்கும் பிரக்ஞானந்தா 
அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை என்பதை 
நாம் உணர வேண்டும். இதிலொன்றும் குறையில்லை!
ஏனெனில் பிரக்ஞானந்தா 16 வயதுச் சிறுவன்தான்!
இன்னும் அவன் மைனர்தான்! 

நெப்போ 29 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும் 
கார்ல்சன் 25 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்திலும் 
உள்ளனர். எட்டாம் இடத்தில் வின்சென்ட் கெய்மேர் 
22 புள்ளிகளுடன் உள்ளார். இந்த 8 பேரும் 
அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.   
(வெற்றி = 3 புள்ளி; டிரா = 1 புள்ளி; தோல்வி = 0 புள்ளி) 
 
15 ஆட்டங்கள் ஆடியதில், பிரக்ஞானந்தா 5 வெற்றிகள் 
(15 புள்ளிகள்), 4 டிராக்கள் (4 புள்ளிகள்) மற்றும் 6 தோல்விகள் 
(0 புள்ளிகள்) அடைந்து மொத்தம் 19 புள்ளிகளைப் 
பெற்றுள்ளார். 

பிரக்ஞானந்தா யார்? இவன் ஒரு தமிழ்ச் சிறுவன்! 
சென்னையைச் சேர்ந்தவன். பச்சைத் தமிழன்.
தற்போது வயது 16 (DOB: 10 ஆகஸ்டு 2005).
இவனின் தந்தை கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு.
இவனின் அக்காள் வைஷாலி பெண் கிராண்ட் மாஸ்டர் 
(WGM = Woman Grand Master) ஆவார். 

மிக்க இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் 
வென்றவர்களில் இவனும் ஒருவன். ஜூன் 2018ல் தனது 
12 வயது 10 மாதம் 13 நாளில் பிரக்ஞானந்தா கிராண்ட் 
மாஸ்டர் பட்டம் வென்றான்.

மாக்னஸ் கார்ல்சனை இதுவரை மூன்று இந்தியர்கள் 
மட்டுமே தோற்கடித்துள்ளனர். விஸ்வநாதன் ஆனந்த்,
ஹரிபாபு, பிரக்ஞானந்தா ஆகிய மூவர்!

பிரக்ஞானந்தா மகத்தான உலக சாதனையை 
நிகழ்த்தி இருந்தும், இந்திய அரசு அவனைக் 
கண்டுகொள்ளவில்லை என்று சில கருவின் குற்றங்கள் 
எழுதி அரிப்புத் தீர்த்தன. புழுத்த தற்குறிகள் அவர்கள்.
ஆனால் உண்மையானது இவர்களின் வக்கிர புத்தியின் 
மூளைக் கழிவுக்கு எதிராக இருக்கிறது.

நாட்டின் பிரதமர் மோடி தமது டுவிட்டர் செய்தியில் 
ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் போட்டி முடியும் முன்னரே,
எட்டாம் ஆட்டத்தில் கார்ல்சனை எதிர்த்து பிரக்ஞானந்தா
பெற்ற வெற்றியைப் பாராட்டி எழுதி உள்ளார்.

கடந்த காலத்தில் இந்தியப் பிரதமர்கள் யாரும் 
இவ்வாறு quick response செய்ததில்லை. அப்படிச் 
செய்வது இந்தியப் பிரதமர்களின் வழக்கமாகவோ 
நடைமுறையாகவோ இருந்ததில்லை. மத்திய 
அரசின் நடவடிக்கைகளை ஊன்றிக் கவனிப்போர் 
இதை நன்கறிவார்கள். அந்த வகையில் பிரதமர் 
மோடி பெரிதும் வேறுபட்டவராக இருக்கிறார்.
விளையாட்டு வீரர்கள் பிரதமரின் நேரடி 
கவனத்தையும் பாராட்டையும் எளிதில் பெற்று 
விடுகின்றனர்.

15 ஆட்டங்கள் கொண்ட போட்டி முடியும் முன்னரே 
எட்டாவது ஆட்டத்தில் ஒரு வெற்றி பெற்றவுடனே 
பிரதமரே முன்வந்து பாராட்டுகிறார் என்றால் 
பிரக்ஞானந்தா கொடுத்து வைத்தவர் என்பதே பொருள்.

குவார்ட்டர் பைனலில் தோற்றுவிட்ட ஒரு பையனை, 
நாட்டின் பிரதமர் முந்திரிக் கொட்டை போல முந்திக் 
கொண்டு பாராட்டுவது சரியான மரபு அல்ல 
என்கிறார் ஒய்வு பெற்ற ஒரு மூத்த மத்திய அரசு 
அதிகாரி! உண்மை இப்படியிருக்க, இந்திய அரசு 
தமிழனாக பிரக்ஞானந்தாவைக் கண்டு கொள்ளாது 
என்று எழுதினான் ஒரு கருவின் குற்றம்! அவன் 
திருந்துவானா? நாணுவானா? ஒருநாளும் மாட்டான்!
They are INCORRIGIBLE! 

பிரக்ஞானந்தா நிச்சயம் சாம்பியனை எதிர்த்து ஆடும் 
சாலஞ்சராகவும் தொடர்ந்து உலக சாம்பியனாகவும்
ஆவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. என்னுடைய 
ஆயுளுக்குள் அது நடந்தால் மகிழ்வேன். ஆனந்தக் 
களிநடம் புரிவேன்!
-----------------------------------------------------------------
பின்குறிப்பு:
டானியா சக்தேவ் குறித்து முன்பே பலமுறை எழுதி 
இருக்கிறேன். டானியா ஒரு பெண். சதுரங்க 
அனைத்துலக மாஸ்டர். மிகச் சிறந்த சதுரங்க 
வர்ணனையாளர். ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் போட்டியில்  
அவர் வர்ணனை செய்து வருகிறார். அதைக் கேட்டீர்களா?

கேட்கவில்லை! நல்ல காரியம் எதையுமே வாழ்க்கையில் 
செய்தது இல்லை, அப்படித்தானே! ஆங்கிலம் தெரியாதோ?
இங்கிலீஷ் தெரிந்தால்தான் டானியாவின் போதையூட்டும் 
வர்ணனையைக் கேட்க முடியும்.

CHESSBASE இணையதளத்தில் இந்தியில் வர்ணனை உண்டு.
தாலியறுத்த தமிழில் ஏன் சதுரங்க வர்ணனை இல்லை?
பதில் சொல்லுங்கடா தமிழ தமிழ் என்று போலிக்கூச்சல் 
போடும் கருவின் குற்றங்களே!

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் சதுரங்கப் போட்டிகள் குறித்து 
தமிழில் ஏதாவது கட்டுரையை யாராவது எழுதி 
இருக்கிறார்களா? என்னுடைய இந்தக் கட்டுரையைத் 
தவிர இப்போட்டி குறித்து யாரும் எழுதவில்லை!
என்னைத்தவிர ஒருவரும் எழுத மாட்டார்கள்!
*****************************************************
   
சீமான், பெ மணியரசன் இன்ன பிற 
தமிழ்ப் போலிகளுக்கு ஒரு தமிழ்ச் சிறுவன் 
இப்படி  ஒரு சாதனையை நிகழ்த்தி இருப்பது 
தெரியுமா? பேப்பர் கீப்பர் படிப்பார்களா 
இவர்கள்? 
  

தானியா ஸக்தேவ் குறித்து இதே முகநூலில் 
நான் டிசம்பர் 2021ல் எழுதிய கட்டுரைகளைத் 
தேடி எடுத்துப் படியுங்கள்.  


அறிவியலாய் ஒளிரும் சதுரங்கம் என்ற என் 
கட்டுரையை அறிவியல் ஒளி இதழில் 
படியுங்கள். அறிவியல் ஒளிக்குச் சந்தா 
கட்டுங்கள். நந்தனம் புத்தகச் சந்தைக்குச் 
சென்று அங்கே டெக்னோ புக்ஸ் கடையில் 
ஸ்டால் எண்: 485, 486 அறிவியல் ஒளி 
ஏட்டுக்குச் சந்தா கட்டுங்கள்.  

            அறிவியல் ஒளி ஏட்டின் ஆசிரியர்
திரு நா சு சிதம்பரம் அவர்கள்.
தொடர்புக்கான அலைபேசி: 94440 63497. 
    


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக