ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

 ஆட்டுக்கும் தாடி அவசியம்!

அன்றைய ஆளுநர் பர்னாலாவும் அவசியம்!

மோசடியும் பித்தலாட்டமும் அதன் உச்சத்தில்!

-----------------------------------------------------------------

படத்தில் இருப்பவரைத் தெரிகிறதா?

இவர்தான் சுர்ஜித் சிங் பர்னாலா!


தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்தவர்.

எப்போது இருந்தார்? 1990-91 காலக்கட்டத்தில் 

தமிழக ஆளுநராக இருந்தார்.


பின், 2004 முதல் 2011 வரை ஏழாண்டுகள் மீண்டும் 

தமிழக ஆளுநராக இருந்தார்.


2006 ஜனவரியில் ஜெயலலிதா முதல்வராக 

இருந்தபோது, கேபிள் டிவி தொழிலில் 

ஏகபோகத்தை ஒழிக்கும் நோக்குடன் அரசு 

கேபிள் டிவி சட்டத்தைக் கொண்டு வந்தார்.

தமிழக செட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 

இச்சட்டத்தை ஆளுநரின் கையெழுத்துக்காக 

பர்னாலாவுக்கு அனுப்பி வைத்தார் ஜெயலலிதா.


உடனே கருணாநிதிக்கு அடிவயிறு கலங்கியது.

கேபிள் டிவி தொழிலில் ஏகபோகத்துடன் 

அனைத்து கேபிள் டிவி ஆப்பரேட்டர்களையும் 

சுரண்டிக் கொழுக்கும் தன்னுடைய பேரன்களின் 

வருமானத்துக்கு அரசு கேபிளால் பாதிப்பு 

வருமே என்று கலங்கினார் கருணாநிதி.


உடனடியாக ஆளுநர் பர்னாலாவைச் சந்தித்தார்

கருணாநிதி. எக்காரணம் கொண்டும் ஜெயலாலிதா 

அரசு நிறைவேற்றிய இந்த அரசு கேபிள் 

சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்கக் 

கூடாது என்று கோரிக்கை வைத்தார்.


சுர்ஜித் சிங் பர்னாலா திமுகவின் பரிந்துரையால் 

ஆளுநர் ஆனவர். 1990-91 அன்றைய திமுக அரசைக் 

கலைக்க மத்திய காங்கிரஸ் அரசு விரும்பியது. 

அதற்காக ஆளுநரிடம் அறிக்கை கோரியது. 

ஆனால் அறிக்கை கொடுக்க மறுத்தார் பர்னாலா.

அதைக் கருத்தில் கொண்டு மீண்டும் பர்னாலாவே 

எங்களுக்கு ஆளுநராக வேண்டும் என்று 

மத்திய காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் 

கோரிக்கை வைத்தார் கருணாநிதி. இக்கோரிக்கையை 

ஏற்று பர்னாலா தமிழக ஆளுநராக நியமிக்கப் பட்டார்.


ஜெயலலிதா அரசு நிறைவேற்றிய கேபிள் டிவி 

சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது என்ற 

கருணாநிதியின் கோரிக்கையை ஏற்றுக் 

கொண்ட பர்னாலா, அச்சட்டத்துக்கு ஒப்புதல் 

வழங்கவில்லை.


இதுதான் திமுகவின் இரட்டை வேடம்!

ஏமாற்று வேலை! பித்தலாட்டம்! மோசடி!

ஏதோ ஆளுநர் பதவியை எதிர்ப்பது போல் வேஷம் 

போட்டுக்கொண்டு திரியும் இவர்களின் 

யோக்கியதை 2006ல் எங்கே போனது?

அன்று பர்னாலாவை எதிர்க்க வேண்டியதுதானே!


ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் 

வேண்டாம் என்றால், அன்று பர்னாலாவை 

எதிர்த்திருக்க வேண்டியதுதானே!

******************************************************* 

 பின்குறிப்பு:

புழுத்த அரசியல்வாதிகளுக்கு ஒரே நோக்கம்தான்!

அது சம்பாதிப்பதுதான்! அவர்களுக்கு 

கொள்கை என்பதெல்லாம் ஒரு மயிரும் கிடையாது.

போலி முற்போக்குச் சொங்கிகள், போலி இடதுசாரிச் 

சொங்கிகள் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள 

வேண்டும்.

-----------------------------------------------------------------------   

 



     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக