சனி, 26 பிப்ரவரி, 2022

 லக்னோ, பிப். 25 - 403 இடங்களைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு, பிப்ரவரி 10-ஆம் தேதி துவங்கி மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, இதுவரை நான்கு கட்ட வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது.

ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு பிப்ரவரி 27 அன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில், உ.பி. தேர்தல் முடிவில் பாஜக-வுக்கு பெரும்பான்மை பலம் கிடைக் காது என்ற உண்மை பாஜக-வே நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது பாஜக தலை வர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஊடகங்கள் மூலமான கருத்துக் கணிப்புகள் மூலம் பாஜக வெற்றி பெற்று விடும் என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சி களை பிரச்சாரத்திற்கு முன்பே பாஜக கையில் எடுத்தது.
அந்த முயற்சிகள் வெற்றியைத் தர வில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ வெளி யிட்டுள்ள செய்தியில், பாஜக நடத்திய ஆய்வின் முடிவுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், பாஜக தலைவர்கள் 300 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று முழங்கிக் கொண்டிருக்கும் வேளையில், பெரும்பான்மையே கிடைக்காது என்ற ஆய்வுத் தகவல் அக்கட்சிக்குக் கிடைத்து ள்ளதாக, எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
இரண்டு காரணங்கள் ஆய்வில் முக்கிய இடம் பிடித்துள்ளன.
ஒன்று, “சமாஜ்வாதிக் கட்சியுடன் ராஷ்டிரிய லோக் தளம் வைத்துக் கொண்ட கூட்டணி மற்றும் விவசாயிகளுக்கு எதிராக லக்கீம்பூர்-கெரியில் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் ஆகிய இரண்டும், பாஜக-வுக்கு எதிராகத் திரும்பியதோடு, அக்கட்சியின் வாக்கு வங்கியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மற்றொன்று, சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாதவர்கள் மற்றும் உயர்சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள் முழுமையாக சமாஜ்வாதி தலை மையிலான கூட்டணியை ஆதரிக்கிறார்கள்.
வாக்குகளைப் பிரிக்கும் வகையில் நிறுத்தப்பட்ட ஒவைசியின் வேட்பாளர்கள் சிறுபான்மையினர் வாக்குகளில் எந்தப் பிளவையும் ஏற்படுத்தவில்லை.
சிறுபான்மை யினர் சமாஜ்வாதிக் கட்சியின் பக்கமே அதிக மாக நிற்கிறார்கள். பட்டியல் வகுப்பினரின் வாக்குகளை ஒருங்கிணைத்து விட்டதாக பாஜக நினைத்திருந்தது. ஆனால், அதுவும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு பெரும் அளவில் சென்று விடும்” என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது
. “பிரதமர் மோடியின் பிரச்சாரம் தங்கள் கட்சிக்கு உதவுகிறது” என்று பாஜக-வின் ஆய்வு தெரிவித்தாலும், சமாஜ்வாதி - ராஷ்டிரிய லோக் தளம் கூட்டணியால், பாஜக-வுக்கு 150 இடங்களில் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது” என்ற உண்மை பாஜக தலைவர்களை அதிர்ச்சி யில் தள்ளியிருக்கிறது.
ஆய்வு குறித்துக் கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர்களில் ஒருவர், “முதல் மூன்று கட்டங்களை நாங்கள் நம்பியிருக்கவில்லை. குறிப்பாக, இரண்டாவது கட்டம் சமாஜ்வாதியின் கட்டமாகும்” என்று வெளிப்படையாக கூறி யிருப்பதுடன், “ஆட்சியைத் தக்க வைப்பதற்கு, தேர்தலுக்குப் பின் புதிய கூட்டாளிகளைத் தேட வேண்டியிருக்கும்” என்றும், யதார்த்தத்தை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த ஆய்வு உண்மைகள் தெரியவந்த தால்தானோ என்னவோ, “தேர்தல் முடிவு களுக்கு பின் ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரிக்காக தமது கட்சி யின் (பாஜக) கதவுகள் திறந்திருக்கும்” என்று இரண்டு நாட்களுக்கு முன்பே உள்துறை அமைச்சர் அமித்ஷா வெட்கத்தை விட்டு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், “அதற்கு சிறிதும் வாய்ப்பில்லை” என்று ஜெயந்த் சவுத்ரி, வழக்கம்போல, முகத்தில் அடித்தாற்போல கூறிவிட்டார். இதன்பின், அமித்ஷா தனது வலையை பகுஜன் சமாஜ் கட்சியை நோக்கி வீசினார்
. “உத்தரப் பிரதேச அரசியலில் மாயாவதியின் முக்கியத்துவம் இன்றும் குறைந்துவிடவில் லை. பகுஜன் சமாஜ் கட்சி மக்களிடையே தனது செல்வாக்கை இழந்து விட்டதாக கூறுவது தவறு. அவர்கள் வாக்குகளைப் பெறுவார்கள் என நம்புகிறேன்” என்று அமித்ஷா நேசக்கரம் நீட்டினார்.
ஆனால், “தேர்தலுக்கு முன்போ, அல்லது பின்போ நான் பாஜக-வுடன் கூட்டணி வைக்க மாட்டேன். மக்களுக்கு எதிராக செயல்படும் யாருடனும் எப்போதும் கூட்டணி கிடையாது’’ என்று மாயாவதியும் தற்போது கதவுகளை அடைத்து விட்டார்.
இதனால் தற்போதைய சூழலில் செய்வத றியாது பாஜக தவித்துக் கொண்டிருக்கிறது. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷோ, இது வரையிலான நான்கு கட்ட வாக்குப் பதிவிலேயே இரட்டைச்சதம் (200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி) அடித்துவிட்டதாக நம்பிக்கை
தெரி வித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக