சனி, 19 பிப்ரவரி, 2022

 வெண்பா வெண்பா  வெண்பா 

இப்போது இங்கு ஐந்து வெண்பாக்களைத் 

தந்துள்ளேன். அவற்றைப் படியுங்கள்!

--------------------------------------------------

வளையணிந்த பெண்ணே தொகைஎட்டும் கேளாய்

திளைத்திடும் நற்றிணை ஐங்குறுநூ றும்அகம்

சீர்புறம் மன்னுபரி பாடல் குறுந்தொகை

சூழ்பதிற்றுப் பத்துகலி என்க.

------------------------------------------------

திருமுருகு சீர்பொருநர் நற்சிறுபாண் நற்பெரும்

பாண்எனஆற் றுப்படை மீன்மதுரைக் காஞ்சிமுல்லைப்  

பாட்டுநெடு நல்வாடை பட்டினப்பா லைகுறிஞ்சிப்

பாட்டும லைபடுக டாம்.

------------------------------

பாடா வதியே தரக்குறைவே வேண்டாமே 

கேடான மென்பொருளே இந்தியா --நாடா  

பெகாசசே  பேயே பிசாசே இகழ்வோமே  

ஆகாதென் றுன்னை யே.     

----------------------------------------

பசும்பொன்னில் தோன்றிய ஆடகப்பொன் தெய்விகமும் 

தேசியமும் கண்ணிரண்டாய்க் கொண்டகோ- காசுபணம் 

தேடாமல் மாசெதுவும் அண்டாமல் வாழ்ந்தொளிர்ந்த 

தேவரையா வாழியவே நீடு.

------------------------------------------

வாங்கிய கோடிபத்தில் என்பங்கு எங்கேகூறு

வீங்கிடும் கன்னம் என்றுகையிலே --ஓங்கிய

வாளுடன் அங்கே பொலிட்பீரோ கூட்டத்தில்

தோள்தட்டும் நம்அருணன் பார்.

-----------------------------------------

வெண்பாவுக்கோர்  புகழேந்தி!

புகழேந்திப் புலவர் பாண்டி நாட்டவர்.

அவர்தான் நான்!

--------------------------------------------------------


ethu uyarthamizh en



தீர்மானிப்பது யார்?
-----------------------------
எது உயர்தமிழ் என்பதை யார் 
தீர்மானிப்பது? தமிழ்ச் சமூகத்தின் 
உற்பத்தி முறை தீர்மானிக்கிறது.
இது யாருடைய உரிமையும் 
சார்ந்த விஷயம் அல்ல.

மார்க்சியம் ஒரு சமூகத்தை 
அதன் உற்பத்திமுறை கொண்டு 
ஆய்கிறது. இன்று இந்த 2022ல் 
பொருள் உற்பத்தியின் மொழியாக 
தமிழ் இல்லை. தமிழ்ச் சமூகத்தின்
இந்தியச் சமூகத்தின் பொருள் 
உற்பத்தியின் மொழியாக தமிழ் 
இல்லை. ஆங்கிலமே உள்ளது. 

எது பொருள் உற்பத்தியின் 
மொழியோ அதுவே தலைமையில் 
இருக்கும். அந்த மொழி மட்டுமே 
வாழும்; ஏனைய மொழிகள் வழக்கு 
வீழ்ந்து விடும். எனவே 
பொருளுற்பத்தியின் மொழியாக. 
அறிவியலின் மொழியாக தமிழை 
ஆக்க வேண்டும். அதைச் 
செய்பவன் யான்.

ஒளவையாரின் தமிழுக்கு தமிழ்ச் 
சமூகத்தின் இன்றைய 
பொருளுற்பத்தியில் என்ன 
மதிப்பு உள்ளது என்பதைப் 
பொறுத்துத்தான் அது உயர்தமிழா 
அல்லவா என்று தீர்மானிக்க இயலும்.

இன்றைய பொருளுற்பத்தியில் பயன்படும் 
அறிவியல் தமிழே உயர் தமிழ் ஆகும். 
இது நிலைபேறு உடைய உண்மை. வெறும் 
குட்டி முதலாளித்துவக் கோபத்தால் 
உண்மையை மறைத்து விட முடியாது.

தமிழுக்கு எந்த நல்லதும் செய்ய 
முடியாதவர்கள், அருள்கூர்ந்து 
அல்லது செய்யாமல் இருங்கள்.

நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்.
...................புறம்.................   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக