ஞாயிறு, 6 பிப்ரவரி, 2022

 ஆளுநர்களை தனக்கு வசதியாக அரசியல் விளையாட்டுக்கு இழுத்து திமுக

ஜனவரி 27, 2006 அன்று தமிழக சட்டசபையில் அரசு கேபிள் தொடர்பான சட்ட மசோதா அதிமுக அரசால் தாக்கல் செய்யப்பட்டது.
தன் பேரன்கள் நடத்திவரும் கேபிள் டிவி தொழிலுக்கு பாதிப்பு வந்துவிட்டது என துடித்துப்போய் அன்றே ஆளுநர் மாளிகைக்கு ஓடினார் கருணாநிதி. கேபிள் டிவி மசோதாவிற்கு ஒப்புதல் தரக்கூடாது என சொன்னார்.
திமுக மத்திய காங்கிரஸ் அமைச்சரவையில் இருப்பதால் திமுகவின் பரிந்துரையின்பேரில் 2004ல் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டவர் சுர்ஜித் சிங் பர்னாலா.
அதன்படியே பர்னாலாவும் ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரதிநிதியான சட்டசபையின் மசோதாவில் கையெழுத்து போடாமல் குப்பையில் தூக்கிப்போட்டார்.
2006ல் மைனாரிட்டி திமுக அரசு அமைந்தது. கருணாநிதியின் பேரன்கள் முன்பைவிட ஏகபோகமாக கேபிள் டிவி வருமானத்தில் கொழித்தார்கள்.
திமுகவின் வாரிசு சண்டையில் மதுரை தினகரன் அலுவலகம் 3 பேரோடு கொளுத்தப்பட்ட பிறகு தன் மகன்களுக்கு ஆதராக நின்று பேரன்களை பழி வாங்க முடிவெடுத்தார் கருணாநிதி.
முந்தைய அதிமுக அரசு தாக்கல் செய்து கவர்னர் கையெழுத்துப் போடாத அரசு கேபிள் மசோதாவை தூசித் தட்டி மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி அதே சுர்ஜித் சிங் பர்னாலாவின் கையெழுத்தை பெற்றார்.
அரசு கேபிள் வந்தது.
பேரன்கள் கதறினர்.
பிறகு கருணாநிதியின் மனைவி தயாளுவிற்கு சன் டிவி ஈட்டுத்தொகை என்ற பெயரில் 400 கோடி ரூபாய் வெள்ளை பணத்தை கொடுத்து தாத்தாவை கூல் செய்தனர் கேடி பேரன்கள்.
பிறகு என்ன?
'இதயம் இனித்தது, கண்கள் பனித்தது' படலம்தான்.
அரசு கேபிளை கருணாநிதியே முடக்கினார்.
மீண்டும் 2011ல் அதிமுக அரசு அமைந்ததும் அரசு கேபிள் உயிர் பெற்றது. அரசு கேபிளுக்கு டிஜிட்டல் உரிமம் கிடைக்க முடியாதபடி மத்திய திமுக காங்கிரஸ் அரசுகள் முட்டுக்கட்டை போட்டது.
நீதிமன்றத்திற்கு போய் அரசு கேபிளுக்கு டிஜிட்டல் உரிமம் வாங்கியது அதிமுக அரசு.
இதெல்லாம் இப்போது நினைவுப்படுத்த காரணம் ஒன்றுதான். திமுக தான் மத்திய அரசில் பங்கெடுத்திருந்தபோதெல்லாம் ஆளுநர்களை வைத்து எப்படி அரசியல் செய்தது என்பதை நினைத்துப் பார்க்கத்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக